jump to navigation

மட்டு மாநகர் இரும்புத்திலகம், இரும்பு இளவரசன் சாண்டோ இ.இராஜரெட்ண த்தின் மயிர்க் கூச்செறியும் வீர விளையாட்டுக்கள் October 18, 2011

Posted by Athiran in செய்திகள்.
add a comment

வுவுனியா மாவட்ட ஊடகவியலாளர் தம் பு விவேகராசா காலமானார் September 18, 2011

Posted by Athiran in செய்திகள்.
Tags: , , , , , , , , ,
add a comment

வுவுனியா மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் தம்பு விவேகராசா, தனது 56ஆவது வயதில் இன்று அதிகாலை காலமானார்.

கடந்த 10 நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தம்பு விவேகராசா கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் சேவையாற்றி வருவதோடு வன்னி ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத் தின் வருடாந்த மஹோற்சவம் September 1, 2011

Posted by Athiran in Uncategorized.
add a comment

இலங்கையின் ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மஹோற்சவத்தையொட்டி கடந்த மூன்று தினங்களாக சாந்தி கர்ம கிரியைகள் இடம்பெற்றுவந்தன. நேற்று காலை மூலமூர்த்திக்கு அபிஷேக பூசையுடன் விசேட பூசை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை ஆலயத்தினை சூழ வலம்வந்து கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து தேவ மேளம் முழங்க மணியோசைகளின் மத்தியில் பக்தர்களின் ஆரோகரா ஓசையுடன் கொடியேற்றம் செய்யப்பட்டு மஹோற்சவம் ஆரம்பமானது.

இதனையடுத்து கம்பத்துக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்றதுடன் பூசைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம்வரும் நிகழ்வு இடம்பெற்றது. கிழக்கின் தேரோடும் கோயில் என்னும் பெருமையினையும் கொண்ட ஆலயத்தின் தேரோட்டம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.

மர்ம மனிதனின் அச்சுறுத்தல்; வவுணதீவில் ஆ ர்ப்பாட்டம் August 17, 2011

Posted by Athiran in செய்திகள்.
Tags: , , , , , ,
add a comment

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் மற்றும் நடமாட்டம் என்பவற்றை கண்டித்து வவுணதீவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று புதன்கிழமை காலை ஈடுபட்டனர்.

கரவெட்டி, விளாவட்டவான், நாவற்காடு, ஈச்சந்தீவு, மங்கிக்கட்டு, வவுணதீவு ஆகிய கிராம மக்கள் வவுணதீவு பிரதேச செயலகத்தை நோக்கி சென்றவேளையில் பிரதேச செயலகம் மக்கள் வருகை கண்டு மூடப்பட்டது. அதையடுத்து பொதுமக்கள் வவுணதீவு பொலிஸ் நிலையத்தை சூழ்ந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(more…)

மர்ம மனிதர்களின் தொல்லையால் குறிஞ்சாமுனையில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் போக்குவரத்து 11மணிவரை துண்டிப்பு. August 17, 2011

Posted by Athiran in செய்திகள்.
Tags: , , , , , ,
add a comment

மர்ம மனிதர்களின் தொல்லையினைக் கண்டித்து நேற்று காலை முதல்
மு.ப.11.00மணிவரை குறிஞ்சாமுனையில் பிரதான வீதியை மறித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால்மு.ப. 11மணிவரை வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தொடர்ச்சியாக இரவில் இனந்தெரியாத மர்ம மனிதர்கள் வருவதாகவும் வீடுகளுக்குள் புகுவதாகவும் பெண்களை குறிவைத்து பலாத்காரத்தில் ஈடுபட முயற்சிப்பதாகவும் இதனால் இரவில் நித்திரை கொள்ள முடியதுள்ளதாகவும் தெரிவித்தனர். (more…)

மர்ம மனிதன் பிரச்சினைக்கு முற்றுப்புள் ளி வைத்து சேற்றுக்குடா பொலிஸ் அரணை அகற்றுமா று கோரி புதூரில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம். August 17, 2011

Posted by Athiran in செய்திகள்.
Tags: , , , , , ,
add a comment

மட்டக்களப்பு புது நகரில் நேற்று முன்தினம் இரவு வந்த மர்ம மனிதர்கள் பொது மக்கள் துரத்திச் சென்ற போது தப்பிச் சென்று சேத்துக்குடா பொலிஸ் அரணில் புகுந்ததாகத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை காலை புதூர் விமான நிலையத்துக்கு அருகாமையில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன்,
மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் சசிதரன் கிரிஸ்ரினா, வவுணதீவு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கே.விமலநாதன், மாநகர சபை உறுப்பினர் கிருபைராஜா உட்பட மக்கள் பிரதி நிதிகள், இவ் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி அவர்களுடன் இணைந்து வீதியை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

(more…)

வீரமுனை படுமுகொலை நினைவு அனுஷ்டிப்பு August 15, 2011

Posted by Athiran in செய்திகள்.
Tags: , , , , , ,
add a comment

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வீரமுனையில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை நினைவுதினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியனேத்திரன், நாவிதன் வெளி பிரதேச சபைத் தவிசாளர் கலையரசன் ஆகிNயுhர் நினைவுத்தூபியில் விளக்கேற்றுவதையும், ஆஞ்சலி செய்தனர்.
நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சிந்தா யாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது.

பெரியகல்லாறு ஸ்ரீ சிவ சுப்பிர மணியர் ஆலய பூங்காவனத்திருவிழா August 15, 2011

Posted by Athiran in Uncategorized.
Tags: , , , , , , ,
add a comment

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ சிவ சுப்பிர மணியர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதி உற்சவமான பூங்காவனத்திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மிக விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 3ஆம்திகதி ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் சனிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெற்றதுடன் நேற்று பூங்காவனத்திருவிழா இடம்பெற்றது.

பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சுவாமி வைக்கப்பட்டு பூஜைகள் இடம்பெற்றன.

தாந்தாமலை ஸ்ரீ முருகன் தாந்தா மலை மாட்சி நூல் வெளியீட்டு August 15, 2011

Posted by Athiran in Uncategorized.
Tags: , , , , , , , ,
add a comment

தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய புகழ் கூறும் தாந்தா மலை மாட்சி எனும் நூல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது.

வே.மகேசரெத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் மற்றும் சீயோகேஸ்வரன் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் தேசிய இணைப்பாளர் செவ்வி தங்கோஸ்வரி பிரதேச சபை தவிசாளர் த.பேரின்பராசா.பிரதேச செயலாளர் திருமதி வாசுகி-அருள்ராசா உட்பட பல உயர் அதிகாரிகள் புத்திஜீவிகள் சைவ நெறி பக்தர்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

சம்மாந்துறை பிரதேசத்தில் ஏற்பட்ட மர்ம மனிதன் சர்ச்சை August 15, 2011

Posted by Athiran in செய்திகள்.
Tags: , , , , ,
add a comment

சம்மாந்துறை பிரதேசத்தில் கடந்த வியாளக்கிழமை ஏற்பட்ட மர்ம மனிதன் சர்ச்சையினால் சம்மாந்துறை பொலிஸ் நிலையம் பொது மக்களால் முற்றாக சுற்றி வளைக்கப்பட்டதுடன் பொலிஸ் நிலையத்தின் முன்பாக டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள கோரக்கோயில்பிரதேசத்தில் பெண்ணொருவர் இரவுவேளை குளித்துக்கொண்டு இருக்கும்போது அவ்விடத்திற்கு மர்மமான முறையில் வந்த இருவர் அப்பெண்மீதுசேஷ்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகத்திற்கிடமான மனிதர்களை கண்டதும் குளித்துக் கொண்டிருந்த பெண் கூச்சலிடவே மர்ம மனிதர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் ஓடி ஒழிந்துள்ளனர். இதனைஅவதானித்த பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேக நபர்களைதங்களிடம் ஒப்படைக்குமாறு கோசமிட்டு (more…)

நிந்தவூர் சீ. ஓ. லெஸ்தகீர் சர்வதே ச பாடசாலையின் வருடாந்த பரிசளிப் பு விழா August 15, 2011

Posted by Athiran in Uncategorized.
add a comment

நிந்தவூர் சீ. ஓ. லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் ஐ.எம்.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் பிரதம அதிதியாகவும் , தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.பல்துறைகளிலும் திறமை காட்டிய மாணவர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன . பெரும் தொகையான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்திய ாலயத்தில் 19 ஆசிரியர்களுக்கான சே வை நலன் பாராட்டு விழா August 15, 2011

Posted by Athiran in Uncategorized.
add a comment

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 19 ஆசிரியர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா பாடசாலையின் கூட்டமண்டபத்தில் அதிபர் திருமதி ஹுசைமா லத்தீப் தலைமையில் நடைபெற்றது.


மேற்படி பாடசாலையில் கடந்த 10 தொடக்கம் 17 ஆண்டுகளாக சேவையாற்றி அண்மையில் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற 19 ஆசிரியர்களும் இப்பாடசாலைக்கு செய்த சேவைகளை கௌரவித்தே இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்படடிருந்தது.

இந் நிகழ்வுக்கு கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.சிவப்பிரகாசம் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.எம்.முபாறக் மௌலவி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

Follow

Get every new post delivered to your Inbox.