தேசியம் படிப்பவர்களுக்கு..
இப்பொழுதெல்லாம் அரசியல் என்றாலே எல்லோரும் பயப்படுகின்ற நிலைமை உருவாகிவிட்டது. அதனை எல்லோரும் விட்டொழிக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் மன்னர்கள் தமது நாடுகளை ஆளுவதற்காக அரசியலை வைத்திருந்தார்கள். அதாவது பாதுகாப்பு பொருளாதாரம் மக்கள் நலன் என பல்வேறு விடயங்களுக்காக தந்திரோபாயங்களைக் கையாண்டனர் அதுவே அரசியலானது.
இப்போது மக்களைக் காப்பதற்கான அரசாங்கங்கள் அதற்கு மாறாகவே செயற்பட்டு வருகின்றன.
எல்லோரும் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும் அதற்கு யாரையும் யாரும் எதிரியாகப் பார்க்காத நிலைமை உருவாக வேண்டும். நலன் மாத்திரமே நோக்கமாக எல்லோரும் இருக்க வேண்டும்.
அரசியலை பயந்து கொண்டும் நடுங்கிக் கொண்டும் எந்த அறிவையும் பெற்றுக் கொள்ள அச்சப்படத் தேவையில்லை. நீங்கள் படிக்கும் விடயங்களை ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல நண்பர்களுடனோ அல்லது அறிவுடையவர்களுடனோ பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போது நீங்கள் வாசித்தவற்றின் முக்கியமான விடயங்கள் உங்களுக்கே புரியாத பல விடயங்கள் விளக்கத்திற்கு வரும் அவ்வாறு வாசித்து அறிந்து கொள் வெண்டிய பகிரப்பட வேண்டிய நான் வாசித்த கட்டுரைகள் இந்தப்பக்கத்தில் இணைக்கப்படுகின்றன.
உங்களது கருத்துக்களையும் தரலாம். கட்டாயம் வரவேற்பேன்.


















Comments»
No comments yet — be the first.