jump to navigation

மட்டு.வந்தாறுமூலையில் அமுக்கவெடியில் சிக்கி உழவு இயந்திரத்தில் சென்ற மூன்று பொது மக்கள் பலி June 13, 2008

Posted by Athiran in செய்திகள்.
Tags: , , , , ,
trackback

 

Posted in Batticaloa  on September 7th, 2007

மட்டக்களப்பு 

மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை உப்போடை வீதியில் வைக்கப்பட்டிருந்த அமுக்க வெடியில் சிக்கி வெள்ளிக்கிழமை (07.09.2007) காலை 10.30 மணியளவில் மூன்று தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதில் ஈரளக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த கதிர்காமர் தவராசா (40), வந்தாறுமூலை கணேச வித்தியாலய வீதியைச் சேர்ந்த கிருஸ்ணப்பிள்ளை வேலுப்பிள்ளை (41), மற்றும் தங்கராசா குகன் (17) ஆகியோர் பலியாகியுள்ளனர்.
வுந்தாறுமூலையில் உப்போடை வீதியிலிருந்து மேற்காக சுமார் 8 கிலோமிட்டரிலுள்ள மையிலவெட்டுவானுக்கு உழவு இயந்திரத்தில் சென்று மணல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருக்கையிலேயே இக் குண்டு வெடித்துள்ளது.
அமுக்க வெடியில் சிக்கிய இவர்களது உழவு இயந்திரம் முழுமையாகச் சேதமடைந்துள்ளது. பலியானவர்களது சடலங்களை மீட்ட ஏறாவூர் பொலிஸார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரண விசாரணைகளுக்காக ஒப்படைத்துள்ளனர்.
ஊப்போடை வீதியினால் இவ்வாறான மணல் எடுக்கும் வேலைகளுக்காக அதிகமான உழவு இயந்திரங்கள் சென்று வருவது வழக்கமாகும்.

Comments»

No comments yet — be the first.