சிறு குழந்தைகளின் கண்ணீர் துளிகள் July 21, 2008
Posted by Athiran in சிவராம்.Tags: Amparai, Artical, Batticaloa, D.Sivaram, East, Journalism, Journalist, News, Sivaram, Sri Lanka, srilanka, Tamil, Taraki, Trincomalee
add a comment
காலத்தின் நீள் இருக்கைகளில்
வெறுமையுற்றியிருக்கும்
பொழுதுகள்
சாம்பல் மேடாகும் வாழ்வின்
ஆதாரங்கள்
மீட்சி பெற முடியாத
ஒரு கால தருணத்தில்
நீயும் கடப்பட்டு இறந்து
போனாய்…
கொடூரமான
வன்முறைகளுடன்
வாழநேர்ந்த நிர்பந்தங்கள்
உன்னத இலட்சியத்திற்காக
வாழ்ந்து உயர்ந்த
மனிதர்களை சாவு
அழித்து விடுவதில்லை…..
தராக்கி
போன்ற மாமனிதர்களின்
சாவு
மரணத்தின் சுவடுகளை
அழித்து எழுந்து நிற்கிறது.
ஏமாற்றமும்
வஞ்சகங்களும்
தந்திரங்களும்
துரோகங்களும்
தமிழ் இனத்தின் வேர்களை
அழித்துவிட போவதில்லை…
நம்
ஈழத்தின் பெறுமதியான
அழகிய கனவுகள்
சுக்கு நு}றாக்கப்படுகின்றன.
ஒரு தாராக்கியன்
உயிருக்கு முன்
ஆயிரம் தராக்கிகள்
பிறப்பார்கள்…
ஆக….
நடக்கும் எல்லா
அதிகாரங்களிலும்
வன்முறை கைகொண்டு
எதிர்ப்புணர்வின் கால்களுக்கு
பின்
சிறு குழந்தைகளின்
கண்ணீர் துளிகளின்
அலறல் கேட்டபடி
இருக்கின்றனது…!
ஆற்றாமையின்
கணங்களின் உள் தள்ளும்
மனித படுகொலையின்
பட்டியலை நியாயப்பாடுகளின்
பழி நாளைய
போரின் துயரத்தின் முன்
முடிவடையலாம்.
தலையில்
உட்புறத்தில்
சரிந்த துப்பாக்கி குண்டின்
இரத்தம் தோய்ந்த
இறுதி நினைவின்
மரணத்தின் போது
இருளினு}டாக
நீ மறுபடியும் ஒளியாய்
பிறப்பாய் தராக்கி….
நீ
ஒரு யுகத்தின்
விடியலுக்காக
விதைக்கப் பட்டிருக்கிறாய்….
மறுபடியும்
நீ
எங்கள் முன்
தோன்றுவாய்….
தமிழ்ச் சமூகத்தின் மிகச் சிறந்த ஊடகவியலாளராகக் கருதப்பட்ட சிவராம் சமீபத்தில் இலங்கையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இராணுவ புலனாய் ஆய்வியலாளர் என்ற நிபுணத்துவ மதிப்பீடு செய்யப்பட்டவர் சிவராம்.
புதிய காற்று ஆக 2005 மதுரை
நேபாளத்தின் முதல் ஜனாதிபதி தெரிவாகிறார் July 18, 2008
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: America, Asia, Election, Himalayan Kingdom, India, nepal, Party, political, The Himalayan Kingdom of Nepal
add a comment
நேபாளத்தின் முதலாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை சனிக்கிழமை ஆரம்பமாகிறது. பதவி விலகிய மன்னர் கஜேந்திராவால் வகிக்கப்பட்ட நாட்டின் தலைமைத்துவ பதவி நிலையை புதிய ஜனாதிபதி வகிக்கவுள்ளார்.
செவ்வாய்க்கிழமை கூடிய பாராளுமன்ற சபையானது வாக்கெடுப்பை நடத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவ தினத்தை தேர்ந்தெடுத்தனர். மேலும் நாட்டின் பெயரளவிலான தலைவரான ஜனாதிபதி பதவியை உருவாக்க வழிவகுக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு அரசியல் கட்சிகளால் அரசியலமைப்பு சீர்திருத்தமொன்று நிறைவேற்றப்பட்டது. (more…)
ஜி 8 உச்சி மாநாடும் ஆபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் மாநாடும் July 14, 2008
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: Britain, Canada, domestic societies, France, G 8, Germany, international community, Italy, Japan, Metro News, Russian, United Kingdom, United States
add a comment
வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஜப்பான். ரஷ்யா. இத்தாலி. கனடா ஆகிய நாடுகளை அடக்கும் “ஜி 8′ உச்சி மாநாட்டின் இறுதி நாள் பேச்சுவார்த்தைகளின் போது அபிவிருத்தியடைந்த பொருளாதார பலம் பொருந்திய நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாற்றம் தொடர்பில் பொதுவான இணக்கமொன்றைக் கண்டனர்.
ஜப்பானில் நடைபெற்ற “ஜி 8′ நாடுகளின் உச்சி மாநாட்டில் ஆபிரிக்க நாடுகளுக்கு பெருமளவில் உதவிகள் மேற்கொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி புஷ் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஜப்பானின் கொக்கொய்டோ தீவில் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பார்வையாளர்களாக இந்தியா சீனா பிரேசில் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் கலந்து கொண்டன. (more…)
ஆப்கானிஸ்தானில் உயிர்ப்பலிகள் அதிகரிக்கின்றன, பாகிஸ்தானின் உளவு அமைப்பு காரணமா July 14, 2008
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: Afghanistan, India, Pakistan militant, peace, political, War
add a comment
இந்தியாவுக்கெதிரான தாக்குதல் ஒன்று பாக்கிஸ்தானால் திங்கட்கிழமை வெற்றிகரமான ஆப்கானிஸ்தானால் நடத்தப்பட்டதாக அனைத்து இந்திய நலன் சார்ந்தவர்களாலும் கொள்ளப்படுகிறது.
அனைவரும் படித்துப் பார்க்க வேண்டிய தினக்குரல் சிவராமுக்கு எழுதியதும் அவரது பதிலும். July 10, 2008
Posted by Athiran in சிவராம்.Tags: Amparai, Batticaloa, East, News, Sivaram, Sri Lanka, Tamil Nation, Tamils, Taraki, Thinakkural, Trincomalee
add a comment
26 October 2004
மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சிங்கள மக்களுக்கு விளங்க வைக்க வேண்டுமென்பதில் விடுதலைப்புலிகள் அண்மைக் காலமாக அக்கறை காட்டி வருகிறார்கள். இந்த நோக்கத்திற்காக ஓரிரு வருடங்களுக்கு முன்னர் வன்னியில் இருந்து ‘தேதுன்ன” என்ற பத்திரிகையையும் அவர்கள் வெளியிட ஆரம்பித்தனர். (more…)
கல்முனையில் மெத்தை வியாபாரிகள் மூவர் சுட்டுக் கொலை July 10, 2008
Posted by Athiran in செய்திகள்.Tags: Amparai, Army, Batticaloa, East, News, police, Sri Lanka, STF, Trincomalee
add a comment
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவில் வியாழக்கிழமை (10.07.08)காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இரத்தினபுரி மாவட்டம் மாவத்ததகம எஸ்.யூ. இந்திக்க ஜயசேன (23) வி.பிரேமகுமார (24) ஏ.நாமல் புத்திக்க (22) என்ற பெயருடைய மெத்தை வர்தத்தகர்கள் மூவர் கல்முனை குவாரி வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். (more…)
66 தொழிற்சங்கங்களின் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம். July 9, 2008
Posted by Athiran in செய்திகள்.Tags: Amparai, Batticaloa, colombo, East, FMM, Jornalist, News, Sri Lanka, Trincomalee
1 comment so far
66 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் அங்கத்தவர்களும் இன்றைய வேலை நிறுத்தத்தில் குதிப்பர் என தொழிற்சங்க இணைச் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். (more…)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – ஊடகச் செய்தி July 8, 2008
Posted by Athiran in ஊடக அறிக்கைகள்.Tags: Amparai, Batticaloa, East, News, north east political, Sri Lanka, Tamil, TNA, Trincomalee, UNP
add a comment
ஜூலை மாதம் 10 ஆந் திகதி அனைத்துச் தொழிற் சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தவிருக்கும் வேலை நிறுத்தமானது, ஏழைத் தொழிலாளர்களின் ,சாதாரண பொது மக்களின் விரக்தியை, வெறுப்பை ,அவர்களது கஷ்டங்களைத் ,துன்பங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு போராட்டமாகும். அந்த வகையில் சகல தொழிற் சங்கங்களும் ,எந்த வித வேறுபாடுமின்றி இதில் கலந்து கொள்ள வேண்டுமெனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேண்டுகோள் விடுவதுடன், தமிழ் மக்களின் முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கின்றது. இலங்கை அரசின் பிழையான கொள்கைகள் எமது நாட்டை தோல்வி கண்ட நாடாக்கியுள்ளதுடன், ஏழைமக்களைப் பிச்சாபாத்திரம் ஏந்தும் நிலைக்கும் தள்ளியுள்ளது. எனவே (more…)
சிம்பாவேயில் வெடிக்கவுள்ள மக்கள் போராட்டம். July 4, 2008
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: African country, African National Union, Republic of Zimbabwe, Robert Mugabe, south africa, Zimbabwean political parties
add a comment
சர்வதேச சமூகம் அவசியமேற்படும் பட்சத்தில் பலவந்தத்தை பிரயோகிக்காது சிம்பாப்வேயில் பலவந்தமாக தலையிட வேண்டும் என நோபல் பரிசு பெற்ற அங்கிலிக்கன் பேராயர் டெஸ்மொன்ட் ரூரு அழைப்பு விடுத்திருக்கிறார்.
சிம்பாப்வேயில் சமாதானத்தை மீள ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் படை நியமிக்கப்படுவதற்கு தான் ஆதரவு வழங்குவதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆபிரிக்க ஒன்றியத் தலைவர்கள் சிம்பாப்வேயின் சட்டபூர்வமான ஜனாதிபதியாக முகாபேயை அங்கீகரிக்கக் கூடாது என பேராயர் டெஸ்ட்மொன்ட் ரூரு அழைப்பு விடுத்திருந்தார்.
எதிர்க்கட்சியான ஜனநாயக மாற்றத்திற்கான இயக்க கட்சித் தலைவர் மோர்கன் தஸ்வான்கிரே தமது ஆதரவாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் ஜனாதிபதி தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்திருந்தார். (more…)
பாக். வடபிராந்திய போராளிகளும் அரசாங்கமும். July 4, 2008
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: Afghanistan, America, Election, nawaz sharif, Pakistan, Pakistan militant, Pervez Musharaf, terrorism
add a comment
பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்தில் எதிரி போராளி குழுக்களுக்கிடையே இடம்பெற்ற பிரிவினைவாத வன்முறைகளில் குறைந்தது 20 பேர் வரை பலியாகியுள்ளதுடன் பெருந்தொகையானோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் கடந்த வாரம் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட 12 பேர் கடந்த திங்கட்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவற்றில் 8 சடலங்களில் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டதாக கூறப்பட்டது.
பாகிஸ்தானின் பாராளுமன்றத் இடைத் தேர்தல் கடந்த வாரத்தில் நடைபெற்றது. அத்தேர்தலில் போட்டியிட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
1999ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் நிமித்தம் அவர் மேற்படி தேர்தலில் போட்டியிட முடியாது என லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடன் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டொன்றின் பிரகாரமே அவருக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையானது அரசியல் உள்நோக்கம் கருதி மேற்கொள்ளப்பட்ட ஒன்று என நவாஸின் “பி.எல்.எம்.என்’ கட்சியின் உறுப்பினர் சித்திகுல் பாரூக் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பி.எம். எல்.என். கட்சியானது இரண்டாவது அதிகளவு வாக்குகளைச் சுவீகரித்து வெற்றி பெற்றிருந்தது.
எனது நிம்மதி. July 4, 2008
Posted by Athiran in கவிதைகள்.Tags: beautiful angel, Critical thinking, Life, Love, Mind, Tamil
1 comment so far
நீ என்
வாசல் கதவு தட்டிய
வடிவு தேவதை
உனக்காக
காத்திருக்கவேயில்லை நான்.
அதனால் தான்
நாளைக்கும் என்னால்
நிம்மதியாகத் தூங்கமுடிகிறது.
போகட்டும்
என்று விட்டுவிட்டேன்
உனது அத்தனை
ஞாபகங்களையும்.
எனக்காக நீ
எதற்காக காத்திருக்கிறாய்.
நான் தான்
விட்டுவிட்டேனே.
சோர்ந்து போன
நான்
தேடிக் கொண்டே இருக்கிறேன்
எனக்குள் மாத்திரம்.
நீ எப்பொழுதாவது
வந்துவிடுவாய் என்பதனால்…



















