66 தொழிற்சங்கங்களின் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம். July 9, 2008
Posted by Athiran in செய்திகள்.Tags: Amparai, Batticaloa, colombo, East, FMM, Jornalist, News, Sri Lanka, Trincomalee
trackback
66 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் அங்கத்தவர்களும் இன்றைய வேலை நிறுத்தத்தில் குதிப்பர் என தொழிற்சங்க இணைச் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
நாளை நண்பகல் 12 மணிக்கு கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் பின்னர் கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணியும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டள்ளது.
சம்பள உயர்வினை வழங்குமாறும் போக்குவரத்து கட்டணங்களை குறைக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி வந்த போதும் அதற்கான தீர்வு கிடைக்காத நிலையில் இந்த தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இப்போராட்டத்திற்கு பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ள எமது சம்மேளனத்தில் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
இப்போராட்டங்களுக்கு சுதந்திர ஊடக அமைப்பு உழைக்கும் பத்திரிகையாளர் அமைப்பு உள்ளிட்ட ஜந்து ஊடக அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.



















![Validate my RSS feed [Valid RSS]](valid-rss.png)


வணக்கம்,
நாட்டில் தொடர்போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்ற போதிலும் காத்திரமான மாற்றங்கள் நடந்ததாக தெரியவில்லை. பாரியளவில் மேற்கொள்ளப்படும் இந்தப்போராட்டமாவது வெற்றி பெற வேண்டும்.