கல்முனையில் மெத்தை வியாபாரிகள் மூவர் சுட்டுக் கொலை July 10, 2008
Posted by Athiran in செய்திகள்.Tags: Amparai, Army, Batticaloa, East, News, police, Sri Lanka, STF, Trincomalee
trackback
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவில் வியாழக்கிழமை (10.07.08)காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இரத்தினபுரி மாவட்டம் மாவத்ததகம எஸ்.யூ. இந்திக்க ஜயசேன (23) வி.பிரேமகுமார (24) ஏ.நாமல் புத்திக்க (22) என்ற பெயருடைய மெத்தை வர்தத்தகர்கள் மூவர் கல்முனை குவாரி வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வழமை போல் கன்ரர் வாகனத்தில் மெததை விற்கச் சென்ற போது இவர்களை மெத்தை வாங்கவென்று கூறி அழைத்துச் சென்று 50 மீட்டர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த 2பேர் பிஸ்ரலால் சுட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். ஏன கல்முனைப் பொலிஸ் நிலையத்தார் தெரிவித்தனர். இத்துப்பாக்கிச் சூடு தொடர்பில் கல்முனைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கோல்லப்பட்டவர்களது சடலங்கள் கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
வேறு இடங்களிலிருந்து வந்து வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளை அச்சுறுத்தும் வகையில் இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயங்கேணியில் வைத்து கதிரை தளபாடம் வியாபாரம் செய்யும் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். அதே போல் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பிலும் 2 வியாபாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சம்பவங்களால் வேறு இடங்களில் இருந்து வியாபாரங்களில் ஈடுபட்டுவருபவர்கள் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வாயாபாரங்களில் ஈடுபடுவதில் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான வியாபாரிகள் கால்நடையாக தளபாட மற்றும் மெத்தை வியாபாரங்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும்.


















Comments»
No comments yet — be the first.