jump to navigation

ஆப்கானிஸ்தானில் உயிர்ப்பலிகள் அதிகரிக்கின்றன, பாகிஸ்தானின் உளவு அமைப்பு காரணமா July 14, 2008

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , , , ,
trackback

இந்தியாவுக்கெதிரான தாக்குதல் ஒன்று பாக்கிஸ்தானால் திங்கட்கிழமை வெற்றிகரமான ஆப்கானிஸ்தானால் நடத்தப்பட்டதாக அனைத்து இந்திய நலன் சார்ந்தவர்களாலும் கொள்ளப்படுகிறது.

இந்திய ஆப்கான் உறவுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட கார்த் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 41பேர் பலியானதுடன் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.அதற்கு முதல் நாள் ஆப்கானில் திருமண நிகழ்வு ஒனறு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை ஆப்கானின் கிழக்குப்பிராந்தியத்திலுள்ள நாங்கஹர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் 27 பேர் பலியாகினர் சில வேளைகளில் இதற்கான பதில் தாக்குதல் என்று கூட திங்கட் கிழமையத் தாக்குதலைச் சொல்லிக் கொள்ள முடியும்.
ஆனாலும் பாகிஸ்தான் இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆப்கான் இந்திய அதிகாரத் தரப்பினர் தகவல்களை வெளியிட்ட வண்ணமுள்ளனர். திங்கட்கிழமை இந்திய து தரகத்தின் முன்னால் மற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் விசாவுக்காக காத்து நின்னவர்களே.ஆப்கானிஸ்தானில் கிழக்கு நாங்கர்ஹார் மாகாணத்தில் கூட்டுப் படையினரால் ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்த 27 ஆப்கான் பிரஜைகள் பலியாகியுள்ளதுடன்இ பலர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களில் சுமார் 19 பேர் பெண்களும்இ சிறுவர்களுமென உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும்இ நேட்டோ கூட்டுப் படைத் தளத்தை இலக்கு வைத்து போராளிகளால் நடத்தப்பட்ட மோட்டார் குண்டுத் தாக்குதல்களால் தான் இவ் அனர்த்தம் ஏற்பட்டதாக அமெரிக்கப் படையினர் தெரிவிக்கின்றனர். இந்தத் தாக்குதல் 3 நாட்களில் பொதுமக்களைப் பெருமளவில் பலி கொண்ட இரண்டாவது இராணுவத் தாக்குதலாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க உலங்கு வானுர்த்திகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் பலியான 22 பேர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் உத்தரவிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் போது சம்பவ இடத்தில் 80 முதல் 90 வரையான பொது மக்கள் கூடியிருந்ததாக மேற்படி பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் முழுமையாகவே இந்தியாவுக்கு எதிரானது என்பதற்கு அதற்கு அடுத்த நாள் ஆப்கானிஸ்தானில் 12 இந்திய வீதி செப்பனிடும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றிலிருந்து குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது மூலம் வெளிப்படுவதாக இருந்தது.

ஆப்கானின் வெளிநாட்டு அமைச்சர் திங்கட்கிழமை தாக்குதல் நடந்த இடத்தைச் சென்று பார்வையிட்டதைத் தொடர்ந்து கலுத்து வெளியிடுகையில் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமிடையில் உள்ள இறுக்கமான உறவை பொறுத்துக் கொள்ள எதிரிகளே இத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் பிராந்தியத்தில் செயற்படும் உளவு நிறுவனம் ஒன்றுக்கு நேரடியாகத் தொடர்பிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் பாகிஸ்தானை குற்றம் சாட்டுகிறார் என்பது தெளிவாகியிருக்கிறது.

காபூல் ஆப்கானிஸ்தானின் தலைநகரம் அங்கு அமைந்திருந்த இந்திய து
 
 
 

 

 

 

}தரகத்திடினை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் அருகிலிருந்த இந்தோனேசியத் து}தரகத்தின் முன்னால்கடமையிலிருந்த ஆப்கான் படையினரும் பலியாகியிருக்கின்றனர் ஆனால் இந்தோனேசியத் து}

தரகம் தமக்கு ஏதிராக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்திருக்கிறது.பாகிஸ்தானின் கராச்சி நகரில் திங்கட்கிழமை அடுத்தடுத்து இடம் பெற்ற 7 தொடர் குண்டு வெடிப்புக்களில் சிக்கி ஒருவர் பலியானதுடன்இ 50 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 15 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். தலைநகர் இஸ்லாமாபாத்தில் 21 பேரைப் பலிகொண்ட பாரிய தற்கொலைக் குண்டுத்தாக்கலுக்கு மறுநாள் இத்தாக்குதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.கராச்சி நகரில் இடம்பெற்ற இக்குண்டுத் தாக்குதலையடுத்து அந்நகரில் பதற்ற சு10ழ்நிலை அதிகரித்தது.மேற்படி குண்டுகளானது மினிபஸ்இ மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டும்இ சந்தையொன்றில் இரகசியமாகப் பொருத்தப்பட்டிருந்தும் வெடிக்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் தாக்குதல்கள் எதற்கும் எந்தவொரு குழுவினரும் உரிமை கோரவில்லை என்பதே வினோதமானதாகும்.
இதற்கிடையில் ஆப்கான் பாராளுமன்ற உறுப்பினர் ஹபிபுல்லா ஜான் கண்தஹார் மாகாணத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலிபான் போராளிகள் பலம் பெற்று விளங்கும் ஷாரி மாவட்டத்திலுள்ள ஆப்கான் இராணுவத் தளத்திற்கு விஜயம் செய்த விட்டு திரும்பிய வேளையிலேயே துப்பாக்கிச் சு10ட்டுக்கு இலக்காகியுள்ளார். 2005 ஆம் ஆண்டு பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதையடுத்து படுகொலை செய்யப்பட்ட 10 ஆவது எம்.பி.யாக ஹபிபுல்லா ஜான் விளங்குகிறார்.
அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவதற்கு முன் 1980களில் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் ஷாரி பிரதேச இராணுவ கட்டளைத் தளபதியாக பணியாற்றியவர் ஆவார்.
அதே சமயம் அன்றைய தினம் ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான் போராளிகள் தெருவோர குண்டொன்றை மறைவாக புதைக்க முயற்சித்தபோது அது முன்கூட்டியே வெடித்தமை காரணமாக போராளிக் குழு கட்டளைத் தளபதிகளில் ஒருவரான முஸா முல்லா ஜபார் உட்பட 10 போராளிகள் பலியானார்கள்.

மேலும் கிழக்கு நுரிஸ்டன் மாகாணத்தில் அமெரிக்க ஏவுகணையொன்று விழுந்து வெடித்ததில் இரு வாகனங்களில் சென்று கொண்டிருந்த 22 பொது மக்கள் பலியாகியுள்ளதாகவும் பலியானவர்களில் பெண் ஒருவரும் மற்றும் பச்சிளம் குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக ஆப்கான் அதிக

வரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால்இ இத்தாக்குதல் சம்பவத்தில் போராளிகளே பலியானதாக அமெரிக்க இராணுவத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.இவ்வாறு தாகபுகுதல் களமாக மாறிவிட்ட ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும் அமைதி ஏற்படாது என்ற நிலைமை தோன்றிவிட்டதாகவே கொள்முடிகிறது. இந்தியத் தரப்பினர் தமனபுனு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக கூறிக் கொண்டிருக்கையில் ஆப்கான் தன்பாட்டிற்கு பேசிக் கொண்டிருக்க பிறிதொரு தரப்பு தனது கை வரிசைகளைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

நாடுகளில் குழப்பங்கள் ஏற்டுவதற்கு காரணமாக இருக்கும் சுரண்டல்களும் ஏமாற்றுதல்களும் பழிவாங்கல்களும் இன்னும் எத்தனையோ வகையான எதிர் நடவடிக்கைகளும் வன்முறையாளர்களையும் போராட்டக்காரர்களையும் தோற்றுவித்து விடுகிறது. அதன் பின்னர் நடக்கின்ற தேவையற்ற பிரச்சினைகளுக்கு யாரும் பொறுப் பேற்றுக் கொள்ளத் தயாரில்லை என்பதற்கு அனைத்து விடயங்களுமே உதாரணமாகும்.

நன்றி மெட்ரோ நியூஸ் 11..07.08

 

 

 

 

Comments»

No comments yet — be the first.