jump to navigation

வறுத்து எடுத்த என் சிந்தைக்கு! August 31, 2008

Posted by Athiran in கவிதைகள்.
Tags: , , , , ,
add a comment

மாயத்தை உணர்ந்து கொள்ள
முடியாத மயக்கம்.

கண்ணாம்பூச்சி விளையாடும்
குழந்தை மனம்.
கண்களையுருட்டும்
கட்டழகுப்பெண்
பார்த்த மாத்திரத்தில்
கலங்கியே போயிருக்கிறேன்.

யாகம் நடத்தி முடித்த புகைமண்டலம்
யாத்திரையை ஏற்றுக் கொள்ளாத
பித்துப் பிடித்த புத்தியால்
ஆத்திரமுறுகிறேன்.

ஆலவட்டத்தின்
அத்திவாரத்தைத் தேடலாமா?
மாயம் மயக்கத்தில்
மாத்திரமா சந்தேகிக்கிறேன்.
 
சோலைக்குயிலின்
இனிமை கலந்த பாடல்
காட்டுவழியில் கரு கருவென்ற இருட்டு
கிலி கொள்கிறேன்.

வறுத்து எடுத்த என் சிந்தைக்கு
வடிகட்டல் எங்கு கிடைக்கும்.

16.08.08

நீர்க்கரை நித்திரை August 30, 2008

Posted by Athiran in கவிதைகள்.
Tags: , , , , , ,
2 comments

எனது மனது நிரம்பிய
நாட்டில் மாத்திரம்.!
சுத்தமேயில்லாத வெறுமையேயான
சிந்தனைகள்.

கோரக் கொலைகளைக்
காணாத மக்களைப்போல்
எனக்கு மட்டும்
சொந்தமான இரவில் நான்.

வெட்கத்தின் சூத்திரத்த
உணரத்தலைப்படா
ஆடையில்லா மிருகம்போல்

வெளிப்படையான பொட்டல்
வெளியில் குந்தியிருக்கும் சுகம்
எவருக்கெல்லாம் சாத்தியமாகும்.

மந்திரத்தின் மாயத்தனத்தில்
குளிர்காய்ந்து கொண்டிருக்கும்
பூசாரியை உற்றுப்பார்க்க முடிந்தால்?

அந்த நீர்க்கரையில்
நிம்மதியான நித்திரை கிட்டும்.

போட்டு உடைத்துவிட்ட
மானங்கெட்டதனத்துக்க
முடிவு வரட்டும்.

சாத்திரக்காரன்போல்
கோபத்துக்கேயுரித்தான முகம்
எனக்கு மாத்திரம் ஏன்
சாத்தியமாகவில்லை…
10.08.08.

ஒபாமாவின் நலன் கருதிய உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு August 29, 2008

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , , , , , , , , ,
1 comment so far

சர்வதேச விவகாரமே அமெரிக்கர்களின் முக்கிய நோக்கம் என்ற அடிப்படையில் அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாரக் ஒபாமா, உப ஜனாதிபதி வேட்பாளராக செனட் சபை உறுப்பினர் ஜோ பிடெனை தெரிவு செய்திருக்கிறார். இது தொடர்பிலான அறிவித்தலை பராக் ஒபõமா அவர் இலினொயிஸிலுள்ள ஸ்பிறிங்பீல்ட்டில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் விடுத்தார்.

சர்வதேச விவகாரம் உள்ளடங்கலான விடயங்களில் பராக் ஒபாமாவின் அனுபவமற்ற நிலை தொடர்பில் கவலை கொண்டுள்ள வாக்காளர்களை திருப்திப்படுத்தவும் அவர்களைத் பக்கம் தக்க வைத்துக் கொள்ளவும் அரசியலில் பரந்த அனுபவம் கொண்ட ஜோபிடெனை ஒபாமா தெரிவு செய்திருக்கிறார்.

(more…)

பாகிஸ்தான் ஜனாதிபதி பதவிக்கு நவாஸ் போட்டியிடுவார்? August 29, 2008

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , , , , , , , ,
add a comment

1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி பாகிஸ்தான் வரலாற்றில் மறக்க முடியாத நாள். பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் து}க்கியெறியப்பட்டு பர்வேஷ் முஷாரப் பதவிக்கு வந்தார்.மறுநாள் அதிகாலை நவாஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின் ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளின் பின்னர் பதவியிலிருந்து முஷாரப் விலகவேண்டிய சு10ழ்நிலை ஏற்பட்டது. இவரது ஆட்சியின் போது அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதில் நவாஸ் முக்கிய பங்கு வகித்தார்.

1999இல் பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப் ஆட்சி முஷாரப்பால் கவிழ்க்கப்பட்டது சரியென்று மே. 13, 2000இல் பாகிஸ்தானின் உயர் நீதி மன்றம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அதன் பின்னர் டிசம்பரில் விமானக்கடத்தல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நவாஸ{க்கு விடுதலை வழங்கப்பட்டு சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அத்தோடு10 ஆண்டுகள் பாகிஸ்தானுக்கு திரும்ப தடையும் விதிக்கப்பட்டிருந்தது. (more…)

முஷாரப் பதவி விலகியதையடுத்து பாகிஸ்தான் August 24, 2008

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , , , , , , , , , ,
add a comment

பர்வேஷ் முஷாரப் இந்தியாவில் முஸ்லிம் பெற்றோரின் பிள்ளையாக 1944 ஆம் ஆண்டு பிறந்தவர். 1947 ஆம் ஆண்டு நாடு பிரிவினைக்கு உட்பட்ட போது அவருக்கு மூன்று வயது. புதுடில்லியிலிருந்து பாதுகாப்பான கடைசி ரயிலில் கராச்சி கெட்டோவிற்கு இடம்பெயர்ந்தது பர்வேஷ் குடும்பம். முக்கிய ராஜதந்திரியின் இடை மகனாகப் பிறந்த பர்வேஷ், குடும்பத்தில் பிரகாசமிக்கவராக இருக்கவில்லை. பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் தனிப்பட்ட ஆர்வம் காட்டினார்.

முஸ்லிம் அகதிகளில் முதல் பாகிஸ்தான் தலைவராக முஷாரப் இருந்தாலும் இராணுவப் பயிற்சியில் தேறினார். 1965ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தில் அவரது ஆற்றல் இனங்காணப்பட்டது. 1971ஆம் ஆண்டு யுத்தத்தில் அபாயத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்க தலைவனாக மதிக்கப்பட்டார். (more…)

ரஷ்ய, ஜோர்ஜிய முறுகல் முடிவுக்கு வருமா? August 15, 2008

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , , , , , , ,
add a comment

ஜோர்ஜிய தாக்குதலே  கடந்த வாரத்தில் உலகளவில் பெரிதாகப் பேசப்பட்ட விவகாரமாகும். எங்குமே அதிகாரம் பிரயோகிக்க முயல்வது சாதாரணம் என்பது போல் ஜோர்ஜிய ரஷ்ய போர் இருந்து வருகிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட யுத்தம் கடந்த வாரத்தில் வெடித்தது.
இறுதியாக உள்ள நிலைமையின்படி ஜோர்ஜியா நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஜோர்ஜியா இன சுத்திகரிப்பு குற்றச்சாட்டினை ரஷ்யாவுக்கு எதிராக முன்வைத்திருக்கிறது. ரஷ்யா தமது நாட்டினுள் இன சுத்திகரிப்பை மேற்கொள்வதாக ஐ.நா.வின் நியாயத்தை எதிர்பார்த்து வழக்குத் தொடர்ந்துள்ளமை ஒரு அளவில் அமைதியைக் கொண்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். (more…)

வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்ட வெற்றி? August 15, 2008

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , ,
add a comment

ஆர்ப்பாட்டங்கள் வெளியில் நடைபெறுகின்ற தென்றால் அனேகமாக அது புறக்கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாகத்தான் நடைபெறுவது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை (12.08.2008) பகல் பொழுதும் அப்படித்தான் ஒருங்கிணைக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
பகல் பொழுது என்பதால் வாகன நெரிசல் தாரõளமாக இருந்தது. (more…)

வீரமுனை படுகொலை நினைவாக நினைவுத்தூபி August 13, 2008

Posted by Athiran in செய்திகள்.
Tags: , , , , , , , , ,
add a comment

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு வீரமுனை படுகொலை நினைவாக நினைவுத்தூபியொன்று செவ்வாய்க்கிழமை காலை (12.08.08) காலை  ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி நினைவுத்தூபியைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
1990.-8-.12 ஆம் திகதி வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இனவெறியர்கள் நடாத்திய காட்டுத்தர்பாரில் 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் 18 ஆவது ஆண்டு நிறைவு செவ்வாய்க்கிழமை அனுஸ்ட்டிக்கப்பட்டது. (more…)

சுயத்தின் மீதான சந்தேகம்.! August 11, 2008

Posted by Athiran in கவிதைகள்.
Tags: , , ,
1 comment so far

உண்மையில்
என்னைக் கொண்டு
நடத்தக் கூடியவளிடம்
ஒப்படைத்துவிட்டேன்
என்ற நிம்மதி எனக்கு.

யாருக்கோ சொல்லி
தீர்வினைக் கண்டு
பிடித்துவிட முடியாத
கொடுமையான வக்கிரம்
எனக்குள்ளும் இருக்கிறதோ
என்றே சந்தேகிக்கிறேன்.

போனதெல்லாம்
என் நிம்மதிகளை
பறித்துக் கொண்டேதான்
போயிற்று.

இருக்கட்டும்
எத்தனை தலைமுறையையும்
பலியெடுக்கும் என்
பெரு மூச்சுக்கு
பதில் கொடுக்க வேண்டிய
கடப்பாடு எனக்கும் இருக்கிறது.

யாத்திரிகன் போல்
அலைந்து வந்துவிட்டால்
மாத்திரம் எனது
தொலைந்து போனவைகள்
மீள சேர்ந்திடுமா?

என்னுள்தான் கேள்வி
ஆனால் எனது சுயம்
வேண்டாம் விடு என்கிறதே
அதற்கு மாத்திரம் தெரிந்திருக்குமோ?

சிவராமுக்குப் பிறந்தநாள். August 11, 2008

Posted by Athiran in சிவராம்.
Tags: , , , , , , , ,
1 comment so far

சிவராம் என்ற மாபெரும் பத்திரிகையாளனின் பிறந்ததினம் இன்றாகும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பித்தவர்கள் மிகச் சில பேரே உள்ளனர். அவற்றில் மாமனிதர் சிவராமும் ஒருவர்.
தமிழ் தேசியம் என்ற விடயத்துக்கள் சென்று தன்னால் முடிந்தவரை அவர் பலவற்றைக் காட்டித் தள்ளிவிட்டச் சென்றிருக்கிறார். அவற்றினை நியாய பூர்வமாக ஏற்றுக் கொள்ள முடியாதவர்களும் இருக்கிறார்கள்.
அவரது வாழ்க்கை வரலாற்றை பலருக்குப் படிக்கக் கொடுக்கும் முயற்சியை யாரும் செய்யவும் இல்லை. அவரது படைப்புகளை பிரசுரத்துக்கு உட்படுத்தவும் இல்லை. அதனைச் செய்து அவரது கருத்துக்கள் வெளியில் வர பலரும் உழைக்க வேண்டும்.
துமிழ் பத்திரிகை உலகம் சிவராம் என்ற தராகியை மற்ந்து விடுவதானது அவருக்குச் செய்யும் துரோகங்களில் ஒன்றாக இருக்கும்.

வேலியே பயிரை மேய்ந்ததா? கொழும்பு பல்கலைக்கழக விவகாரம். August 8, 2008

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , ,
1 comment so far

Marshals of University of Colombo Raped a girl inside the University

 

கொழும்பு பல்கலைக்கழகம் புதன்கிழமை (06.08.2008) காலை முதல் கலவரமடைந்திருந்தது. அதற்குக் காரணம் கடந்த வாரத்தில் மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்களுக்கு வந்த ஒரு மின்னஞ்சல்.
கலைப்பீடத்தின் மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சத்தமிட்டனர். வன்முறை வெடிக்கும் என்ற நிலைமை புதன் காலையிலேயே ஏற்பட்டது.

(more…)

பதவி விலகலுக்கு நிர்ப்பந்திக்கப்படும் முஷாரப். August 8, 2008

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , , ,
add a comment

ஆப்கானிஸ்தானில் கந்தஹார் மாகாணத்திலுள்ள ஸ்பின் போல்டக் பிரதேசத்தில் திருமண வைபவமொன்றுக்கு சென்ற பஸ்ஸொன்று தெருவோர குண்டுதாக்குதலுக்கு இலக்கானதில் மணமகன், மணமகள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதுடன் 6 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

pakistan president pervez Musharraf

pakistan president pervez Musharraf

சோமாலியாவின் தலைநகர் மொகாடிஷ_வில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தெருவோர குண்டு வெடிப்பில் 15 பேர் பலியாகினர். வீதியை சுத்தம் செய்யும் முகமாக பெண்கள் குழுவொன்று கூடிய போதே இக்குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சோமாலியாவின் மொகாடிஷ_வில் எதியோப்பிய படையினருக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதன் காரணமாக அங்கு பெரும் பதற்ற நிலை நிலவுகிறது. இதன் காரணமாக 1.5 மில்லியன் மக்கள் வீடு வாசல்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
தாய்லாந்தின் தென் பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ள 7 குண்டு வெடிப்பு சம்பவங்களில் இருவர் காயமடைந்துள்ளனர். பொதுவாக அமைதியான சு10ழ்நிலை நிலவும் சொங்கலா மாகாணத்தில் இடம்பெற்ற இக்குண்டு தாக்குதல்களால் பதற்றம் ஏற்பட்டது. (more…)