எதுவுமேயில்லை.!!!!!. September 29, 2008
Posted by Athiran in கவிதைகள்.Tags: aim, feeling, forest, Life, Mind, tamil poem, very long list
add a comment
போக்கணம் கெட்ட
வாழ்க்கை வாழ யாருக்குத்தான்
விருப்பம் வரும்.
விதிவிலக்கு சித்தனுக்கிருக்குமா?
கட்டவிழ்த்துவிட்ட
முரட்டுக் காளைபோல் மனம்
குதர்க்கமாய் அலைகிறது.
காலம் கடந்து கிடைக்கும்
ஞானமாய் அத்தனையும்
சித்திக்கலாம்.
அதற்குள் நிரப்பிவிடப்படும்
முழுமையை அனுபவிக்கிறேன்.
யோசனைகளின் து}ரத்தில்
நின்றுகொண்டிருக்கும்
யாருக்கும் எட்டிப்பிடிப்பதற்கு
முடியாமல்தான் இருக்கும்
என்பது எனக்கு
அப்போதும் விளங்கியது.
ஆனாலும் ………. எதுவுமேயில்லை.!!!!!.
மலைக்காட்டில் அந்த
ஏற்ற இறக்கங்களில்
இருப்பதையெல்லாம் படித்துப்பார்த்து
மனக்கனத்தை உணர்ந்து
சுவைக்கலாம்.
வெற்றி பெற்ற வெறித்தனத்தை
அது நினைவூட்டும். கட்டாயமாக.
29.09.08
ஜப்பானின் அடுத்த பிரதமரை ஆளும் கட்சி தெரிவு செய்கிறது September 5, 2008
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: 2008. internal election, former foreign minister, Japan's debt-ridden finances, Japan's Economic and Fiscal, Japan's former Defense Minister Yuriko Koike, LDP, leadership election, Liberal Democratic Party's presidential election, Policy Minister Kaoru Yosano, prime minister Yasuo Fukuda, resignation in Tokyo on September 1, Secretary General of Japan's ruling Liberal democratic, Taro Aso
add a comment
ஜப்பானின் ஆளும் முற்போக்கு ஜனநாயகக் கட்சி செப்ரம்பர் 22ஆம் திகதி அடுத்த பிரதமர் தெரிவாவது நிச்சயம் எனத் தெரிவித்திருக்கிறது. யாசோ புகுடா முதலாம்திகதி அன்று ஜப்பானின் பிரதமர் பதவிலிருந்து விலகுவதாக அறிவித்த பின், ஆளும் முற்போக்கு ஜனநாயக கட்சி, செவ்வாயன்று முற்பகல் அடுத்த நியமனம் தொடர்பான கூட்டத்தை நடத்தி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்த விரிவான விவகாரங்களை விவாதித்தது. (more…)
காணாமல் போனவை.; September 2, 2008
Posted by Athiran in கவிதைகள்.Tags: Circle, Count, Created, crime, Deadly Shadows, Dictionary.com, drama, dream of leading, fantasy, first-person, normal life, poem, Thief
1 comment so far
ஒற்றையடிப் பாதையில்
சம்மட்டியால் செம்மையாய்
வாங்கும் வழிப்பறித் திருடன் போல் நீ.
வெறிப்பிடித்த குரங்காய்
பாய்கிறதோ உன் மனம்?
உன்னிடம் பதில் இருக்கிறதல்லவா
சொல்லி முடித்து விட்டேன்
யாருக்கும் உபத்திரவமில்லாமல்.
சோவென்ற மழையில்
நனைந்தாயானால்
அந்த சுகத்திற்கு உன்னை
விற்றே விட்டிருப்பாய்
ஒரு முறை நனைந்து பாரேன்!
வெட்கம் கெட்ட தனமாய்
அலைந்து திரிகிறாய்
ஆரவாரங்கள் எத்தனை
நாட்களுக்குத்தான் இருக்கும்.
வேலையற்றவனின் வெட்டிப் பேச்சாய்
கரைந்து செல்கிறது சுகம்,
காணாமல் போனதாய்
நீயெண்ணும் அத்தனையும்
உன்னிடமே
அத்திவவாரமிட்டிருக்கின்றன…..!
அவசரப்படாதே அமைதிபடு.
18.08.08
மிரட்டலுக்கு நன்றி. September 1, 2008
Posted by Athiran in கவிதைகள்.Tags: dream of leading, dreams, Life, Love, poem
2 comments
மிரட்டலுக்கு நன்றி சொல்லி
வெளியேறுகிறேன்
வெட்கமேயில்லை எனக்கு.
தட்டிப்பறிப்பதற்கும்
கேட்காமல் கொடுப்பதற்கும்
வாழ்க்கை என்ன
தெருவில் கொட்டியா கிடக்கிறது.
காத்திருப்பேயில்லாத என்ன
நச்சரிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும்
சொல்லிவைக்கிறேன்.
நான் பைத்தியக்காரன்தான்.
நியாயங்களுக்காக எத்தனை
காலங்கள்தான் காத்திருக்கும்?
நானும் அப்படித்தானோ?
சந்தேகங்கள் துழைத்தெடுக்கையில்
எனக்குள் முடிவும் எட்டிவிடுகிறது.
சத்தியம் சாக்காட்டிற்கு
சென்றுவிடுவதேயில்லை
சத்தியமாக!
காதலில் காணாத அத்தனையையும்
கண்டுபிடித்துவிடலாம்
மிரட்டலில்;.
துணிச்சலிருந்தால்…..!
29.08.08.


















