பங்களாதேஷில் மீண்டும் இராணுவத்தினரால் குழப்பம். February 27, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: Bangladesh, capital Dhaka, commanders, Government officials, gunfire, headquarters in Dhaka, Mutinous, mutiny, paramilitary troops, Reuters, soldiers, South Asia, unrest-conflict-and-war
add a comment

பங்களாதேஷ் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுவரும் சம்பளத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக உருவான முறுகல் இராணுவ அதிகாரிகள் 50பேர் பலியாவது வரை சென்றிருக்கிறது. புதன் காலையில் நடைபெற்ற இந்த மோதலில் துணை இராணுவ உயரதிகாரி உட்பட 50 அதிகாரிகள் உயிரிழந்ததாகவும், பொதுமக்கள் பலர் பலியானதாகவும் கூறப்படுகிறது. இது மீண்டும் ஒரு இராணுவப்புரட்சியின் ஆரம்பமா என்ற அச்சத்தை பங்களாதேஷில் தோற்றுவித்துள்ளது. (more…)
என்.வித்தியாதரனின் கடத்தல்,கைது குறித்த எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் கண்டன அறிக்கை February 27, 2009
Posted by Athiran in ஊடக அறிக்கைகள்.Tags: Colombo Crimes Division (CCD), Colombo-based Tamil daily, N. Vithyatharan, Reporters Without Borders, situation in Sri Lanka, Tamil population, the editor of Sudar Oli, Uthayan press group
2 comments
Tamil newspaper editor arrested in Colombo

சுடர் ஒளி மற்றும் உதயன் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் என். வித்தியாதரன் கைது செய்யப்பட்டமை எமக்கு அதிர்ச்சியைத் தருகிறது.
பிடியாணை இல்லாமல் வித்தியாதரன் கைது செய்யப்பட்டமை சட்டத்தை மீறும் ஒரு செயலாகும். அவரை பொலிஸார் தாமதமின்றி விடுவிக்க வேண்டும்.
எதனால் அவர் கைது செய்யப்பட்டார். இலங்கையில் தமிழ் மக்களின் தலைவிதியை வெளிப்படையாகத் தெரிவித்தமையினாலா?
உதயன் பத்திரிகையின் நிறுவனத்தின் தலைவர் எம். சரவணபவனின் உறவினர் ஒருவரது மரணச் சடங்கில் கலந்து கொண்டிருந்த வேளையில் சீருடை அணிந்த மூன்று பொலிஸாரும் சீருடையற்ற மூன்று பேரும் வித்தியாதரனைக் கைது செய்துள்ளனர். கைதினை தடுக்க முயன்ற பொது மக்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை சுடர் ஒளி பத்திரிகையின் நிறுவனத்திற்கு ஊடக அமைச்சர் தெரிவிக்கையில், (more…)
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அறிக்கை. February 27, 2009
Posted by Athiran in ஊடக அறிக்கைகள்.Tags: ceasefire, East, humanitarian perspective, international community, National Peace Council, NPC SL, political negotiations, Sri Lanka, Stability, Sustainable peace, Tamils, UN Secretary General Ban Ki Moon
add a comment
இலங்கையின் வடக்கில் வன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் நிவைவுக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு அமைதி ஏற்பட வேண்டுமானால் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என இலங்கை தேசய சமாதானப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக 26ஆம்திகதி வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையின் முழு விபரம் .
Media Release
Short Term Gains Should Not Endanger Long Term Stability
The LTTE has issued an appeal to the international community to support a ceasefire that will safeguard lives and create an environment for political negotiations with the Sri Lankan government. This call has come even as the Sri Lankan government is on the threshold of capturing the last remaining LTTE territory. The government has rejected the appeal for a ceasefire unless it is accompanied by unconditional surrender by the LTTE. In the meantime military engagements continue in the Vanni, whilst outside, guerillas have staged insurgent attacks. These attacks have included the deliberate targeting of civilians, which the National Peace Council categorically condemns.
From a humanitarian perspective, a ceasefire that saves lives is always preferred to continued warfare and the bitter human suffering it generates. The current phase of the war in particular has inflicted enormous suffering on tens of thousands of civilians who continue to be trapped in the shrinking pocket of LTTE controlled territory. The UN Secretary General Ban Ki Moon has requested a suspension of fighting to permit the civilians to have safe passage to flee the conflict. This appeal has also been made by the EU and other countries. The National Peace Council supports a ceasefire that has the express purpose of evacuating civilians from the war zones to welfare centres that operate in accordance with international standards.
We further believe that if the ceasefire is to be further extended to include political negotiations aimed at a political solution, the LTTE needs to agree to the laying down of arms. To ensure an atmosphere of trust, the process of disarmament could be monitored by international organizations, with the concurrence of the Sri Lankan government. The National Peace Council believes that a ceasefire that is accompanied by the evacuation of civilians, should be followed by both an agreement to work towards a political solution and the laying down of weapons. Such a process offers the best opportunity for Sri Lankans of all communities to enjoy a future of peace, justice and reconciliation with the support of the international community. Sustainable peace requires the cooperative involvement of all parties, working together for a better future.
National Peace Council
of Sri Lanka
12/14 Purana Vihara Road
Colombo 6
Tel: 2818344, 2854127, 2819064
Tel/Fax:2819064
Internet: www.peace-srilanka.org
ஒத்துக் கொள்ளு … நீதான் February 23, 2009
Posted by Athiran in மெயிலுக்கு வந்தவை.Tags: அமெரிக்கா, இலங்கை, கனடா, காடு, தமிழர்கள்., தமிழ், பன்றி, பிரான்ஸ், பிரித்தானியா, பொலிஸ், போராட்டம்., வேட்டை
2 comments
அங்கே ஒரு பிரச்சினை… என்னவென்றால்…
காட்டில் இருந்து ஒரு புலி வரும்.. உயிர்களைக் கொல்லும்..
ஆனால் பொலிஸ் வந்து தேடியதும் அதைக் கண்டு பிடிக்க முடியாது…
காட்டுக்குள் ஓடி விடும்.. இக் கதை தொடர்ந்து கொண்டே இருந்நது……
உயிரிழப்புகளும் குறையவில்லை புலியையும் பிடிக்க முடியவில்லை…
அமெரிக்காவின் முப்படைகளும் அக் காடுகளுக்குச் சென்று வேட்டை நடத்தியும் முடியவில்லை…
வேறு நடுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டு பிரித்தானியா.. கனடா….பிரான்ஸ்
இன்னும் பல….. ஒண்ணும் புடுங்க முடியவில்லை…. புலியின் அட்டகாசமும் குறையவில்லை
அதிலே அவமானம், எந்த நாட்டாலும் முடியவில்லை என பேசப்பட்ட போது….
எங்களைக் கேட்கலயே……. ஒரு குரல்………..
பார்த்தால் இலங்கை ஜனாதிபதி…..
நாங்கள் எவ்வளவு புலி பிடிக்கிறம் ஆயுதத்தோட …
இதப் பிடிக்க மாட்டமா… எகத்தாளமாக…
சரி, அனுமதி அளிக்கப்பட்டது….
இலங்கை முப்படைகளும் அமைரிக்கா காட்டுக்குள் போய்…
நாள்கள் மாதங்களாயிற்று… மாதங்கள் வருடங்களாயிற்று..
போன இலங்கைப்படை திரும்பவேயில்லை…
கடைசியில் உலகப் படைகள் அனைத்தும் சேர்ந்து…
இலங்கைப் படைகளை மீட்க அக் காட்டுக்குள் சென்றன..
அங்கே காட்டில் ஒரு இடத்தில் புகை கிளம்புவது கண்டு
படைகள் அத் திசை நோக்கி விரைந்தன…
அங்கே அவை கண்ட காட்சி………….
ஒரு பன்றி தலை கீழாக நெருப்பின் கீழ் கட்டித் தொங்க விடப் பட்டிருந்தது
கீழே இலங்கைப் படையினர் அப் பன்றியை குண்டாந் தடிகளால் தாக்கியவாறு கூறிக்கொண்டிருந்தனர்
“ஒத்துக் கொள்ளு … நீதான் புலி”
உடனே சென்றவர்கள் அப்பாவி பன்றியை விடுவித்து கேட்டனர்
ஒரு வருடாமாக உன்னிடம் இதையா கேட்டு வதைத்தனர்?
அதற்கு பன்றி
“பரவாயில்லிங்க… எனக்கு ஒரு வருசமாதான்… ஆனா இலங்கை தமிழங்களுக்கு 25 வருடமா இதைத்தான்
பண்றாங்க” என்றது சிரித்தவாறு…………..
பாகிஸ்தானின் போர் நிறுத்தமும் ஆப்கானும். February 20, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: afgha, Afghan border, Afghanista, Asif Zardari’s Pakistan People’s Party (PPP), Islamic Republic of Pakistan, paki, Pakistan, Pakistan militant, political in pakistan, president of Pakistan, Tehrik-e-Taliban Pakistan
add a comment
பாகிஸ்தான் மாகாண அரசாங்கத்துடன் தலிபான்கள் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றினை மேற்கொள்வதாக இந்த வார ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தலால் அப்பிரதேசத்தில் அமைதி ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஆனாலும் பாகிஸ்தானின் மத்திய அரசாங்கம் இந்த விடயம் குறித்து மௌனம் சாதித்தது. வடமேற்கு பாகிஸ்தானின் சுவாட் பள்ளத்தாக்கிலுள்ள தலிபான் போராளிகள் 10 நாள் போர் நிறுத்தமொன்றை அறிவித்துள்ளனர். உள்ளூர் தலைவர்கள் போராளிக் குழுத் தலைவர் ஒருவருடன் செய்து கொண்ட உடன்படிக்கையொன்றையடுத்து போர் நிறுத்த அறிவிப்பு இடம்பெற்றது. (more…)
குருவிக் கூடு கலைத்து…….! February 18, 2009
Posted by Athiran in கவிதைகள்.Tags: alert, bired, brother, ChildLine, Connect, emergency, EMOTIONAL, family focused, father, GENDER WELLNESS, helping, Life, Lifeline, long-term treatment, mother, normal life, peace, personal medical, physical needs, prevent, response, sister., spiritual, Tamils
add a comment
என் குடி முழ்கிப்போனது
என்னால் இனி….?
ஒரு அழுகுரல்
என்காதுகளில் கேட்டவண்ணமிருக்கிறது.
இதனை
நீண்ட வனாந்தரத்திலல்ல
என் வாழ்பரப்பான நகரங்களில்
…………………
சாதாரணமாகக் கேட்கிறேன்.
இது எப்படி நிகழ்ந்தது.
குடிசைகளிலும்
வயல் வரம்புகளிலும்
எந்தவித தடையும் இடைஞ்சலுமின்றி
வாழ்வு நடத்திய மக்கள்
பாதுகாப்பினர் கடும்செயலால்,
கொடுமையான
குரவிக்கூடு கலைப்பினால்
குலைந்து போயினர்.
நாட்களை எண்ணி உழுது விதைத்து
நீர்பாய்ச்சி குருவி கலைத்து
கண்விழித்து காவல் பார்த்து
அறுத்து அறுவடைசெய்து
சாக்குகளில் பக்குவமாகக்கட்டி
சேர்த்த நெல்லை வீட்டுப்பரண்களில்
அடுக்கி வைத்து அழகுபார்த்து
தினமும் உண்டவர்கள்,
பட்டினியால் முடியாமல்
கையில் கபோதிகளாய்
தட்டேந்தி வாய் பார்த்து
உண்டி கழுவும் நிலை
எதனால் வந்தது.
கொங்சம் கூட
மனிதராய் நினைக்காத
மனம் படைத்தவர்களை
எப்படி நம்பி காலம் கடத்துவது…
பாரம்பரியம் பண்பாடு
என்று வாழ்ந்த
பண்ணையாரின் வார்த்தையல்ல
அன்றாடம் பண்ணையில்
பால் கறந்து ஆறு, குளத்தில்
மீன்பிடித்து கறி சமைத்து
உண்டு வாழ்ந்த குடிமகனின்
அடிமன ஆதங்கம்.
எதற்காக இந்தக் கொடுமை
இடம்பெயர்ந்து
எமது வீடுகளை விட்டு
வாழத்தான் வேண்டுமா?
சாவு நிச்சயம் அதற்கு
கொடுமைகள் சாதாரணமா?
குடிசை வீட்டில் நிம்மதியாக
சொத்து சேர்த்து பிள்ளைகளுக்கு
உணவு ஊட்டி மகிழ்ந்;த
செந்தங்கள் பிள்ளைகளின்
வயிற்றை நிரப்ப பந்தியி;ல்
ஏந்த வேண்டிய காலம் ஏன் வந்தது.
யாருக்காகவும் எதனையும்
விட்டுக்கொடுக்காத
சுதந்திரமான சிந்தையுடைய
கொடூரர்களின் செயலால்
காலஓட்டத்தை கட்டுப்படுத்த
முடியாதவரானோம்.
காலம் கொடிது
அதனிலும் கொடிது சொந்தநாட்டில்
ஏதிலிகளாய் வாழ்தல்.
குருவிபோல் சேர்த்ததெல்லாம்
காணாமல் போனது கண்முன்னால்
என் சேர்க்கைகளில்லா
பாலைவனம் போன்ற
என் வீட்டைப் பார்க்கிறேன்.
நான் என் கைகளில் மனதில்
தெம்பே யில்லாமல் போனேன்.
15.11.2007
மடகஸ்காரில் தொடரும் அரசியல் குழப்பம். February 13, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: Africa, Andry Rajoelina, Antananarivo, anti-government, East Africa, former mayor Andry Rajoelina, France, Haile Menkerios, Indian Ocean island, Madagascar, Madagascar's, political turmoil, President Marc Ravalomanana., United Nations
add a comment

ஜனவரி இறுதியில் மடகஸ்காரில் ஆயிரத்துக்கும் அதிகமான ஆர்ப்பாட்ட க்காரர்கள் புதிய அரசாங்கம் ஒன்றின் தேவையை வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தலைநகர் அன்ரனாரிவோ வீதிகளில் திரண்ட இவர்கள் அரசுக்கெதிராகக் கோஷமிட்டதுடன் புதிய அரசாங்கம் பதவிக்கு வரவேண்டுமென தெரிவித்ததுடன் அரச வானொலிகள், தொலைக்காட்சிகள், கட்டடங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களைச் சேதப்படுத்தினர்.
கல்லான மனசு. February 11, 2009
Posted by Athiran in கவிதைகள்.Tags: beach, Dream on, heart, human, Interpretations, moon, river, sea, Sun setting, Sunset, waves, world's only
add a comment

1
சொடுக்கெடுக்கும் அந்தக் கைகளில்
எனக்கிருக்கும் அன்பை எப்படி
எடுத்துரைப்பேன்.
சாதகத்தை நம்பும் சோதரத்தின்
துயரத்தின் வண்ணங்கள்
எத்தனை எத்தனை!!
2
சோகத்தின் வரிகளை எண்ணியபடி
வாழ்தலை அனுபவிக்கலாமே.
வாருங்கள் என்னோடு சேர்ந்து
படித்தும் பார்க்கலாம்.
நிச்சயமாக நிம்மதி கிடைக்காது
முடியுமா உங்களுக்கு.
மடிந்திருக்கும் என் மறுபக்கத்தின்
வாசிப்பை மாத்திரமே தேடும்
என் சுற்றங்களுக்கு….
தெரியாததொன்றுமில்லையோ?,
போர்த்தியே வைத்திருக்கிறேன்
பார்க்கலாம்…….
என்றெல்லாம் சொல்லிவிட மாட்டேன்.
முயலுங்கள் முடியாததிருக்குமா என்ன?
3
ஓற்றையான அந்தச் சிறுவனுக்கு
ஏனிந்த குரட்டுப்புத்தி
மகிழ்ச்சியை அனுபவிப்பதில் தான்
அவனுக்கேன் அத்தனை வெறுப்பு.
கேள்வி கேட்கிறேன் உள்ளேயிருக்கம்
பதில் மாத்திரம் வருவதாகவேயில்லை.
ஏத்தனை கல்லான மனசு.
கள்ளமற்ற அவனுக்கு அப்படியிருந்தால்
நானும் அப்படியா?
11.02.2009.
கொலம்பியப்புரட்சியில் பணயக் கைதிகள் விடுவிப்பு மாற்றத்தைக் கொண்டுவரும்? February 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.Tags: bilateral agreement, BOGOTA, Colombia, European governments, farc, FARC guerrillas, hostages, humanitarian prisoner exchange, international observation, Latin America's, News, old conflict, or FARC, President Alvaro Uribe, rebels, rebels' jungle camps, Red Cross, Revolutionary Armed Forces of Colombia, southern Colombia, United States
add a comment
கொலம்பியாவின் மாக்ஸிசக் கொள்கையுடைய புரட்சிப்படையான பார்க் எனப்படுகின்ற போராளிகளால் 2001ஆம் ஆண்டு முதல் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 4பேர் கடந்த திங்கட்கிழமையன்று விடுதலை செய்யப்பட்டனர். அதே போன்று 7 ஆண்டுகளுக்கு மேலாக பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த அரசியல்வாதியொருவரையும் செவ்வாய்க்கிழமை விடுதலை செய்துள்ளனர். அதே போல் பலரை விடுவிக்கவுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் கொலம்பிய செனட் சபை உறுப்பினருமான பைடாட் கொர்டோபா பார்க் அவர்களும் போராளிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பலனாக பணயக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (more…)

இஸ்ரேல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மத்தியகிழக்கின் முக்கிய பிரச்சினையான பலஸ்தீன நெருக்கடிக்கு நல்லதொரு முடிவைக் கொண்டு வரும் என்று அனைவரும் நம்பியிருந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தல் பெரும்பான்மை பலத்தை எந்தக் கட்சியும் பெறாது என கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன.
















