jump to navigation

மடயனானவனே.! March 31, 2009

Posted by Athiran in கவிதைகள்.
Tags: , , , , , , , , , ,
add a comment

வெறுப்புக்கே உரியதான முகத்துடன்
காலந்தள்ளும் எத்தனை பேர்
வாழ்கிறார்கள்.
காட்டிக்கொடுப்பும்
வெட்டுக் குத்தும்
எதற்குத்தான் பயன்படும்.

நாளைக்குக் காணாமல் போகும்
இல்லாமையை
புரிந்துகொள்ளத் தலைப்படாத
மனத்துடன் யாத்திரை செய்யலாமா?

மாதிரிகளான எமக்குள்
இருப்பதைத் தெரிந்து
யார்தான் இயங்குகிறோம்.

சோதிப்பிளம்பான
இருக்கையை தெரிந்து
கொள்ளமுடியாமல்
வனாந்தரத்தின்
இருட்டுக்குள்ளாலே இருக்கிறோம்.

சோற்றுக்கு லாட்டியடிக்கும்
பிச்சைக்காரனும்
இருப்பே கொள்ளாது
அலையும் வியாபாரியும்
வித்தியாசம்தான்.

சேற்றில் புரண்டு
சிரமத்தை சொர்க்கமாக
எண்ணும் விவசாயி போல்
யாரால்தான் வாழமுடியும்.

கால ஓட்டத்தில்
காணாமல் போக
விருப்பப்படாதவராய்
இயங்கமுடிந்தால் முயற்சிசெய்.

31.03.09

தேர்தலுக்குத் தயாராகும் ஆப்கான் அரசு March 26, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , , , , , , , , , , , , , , ,
add a comment

ஆப்கானிஸ்தானில் இராணுவபலம் இரு மடங்காக உயர்த்தப்படும் என்று அமெரிக்கா அறிவிப்பு விடுத்திருக்கின்ற அதே நிலையில் ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் மீதான தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு அரசு தயாராகி இருக்கிறது.AFGHANISTAN-NEW YEAR-SECURITY

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த அதிரடி நடவடிக்கையை அரசு ஆரம்பித்திருக்கிறது. இதன் முதல் கட்டமாக பெண்கள் நடனமாடுதல், அரைகுறை ஆடைகள் அணிதல் மற்றும் பாலியல் விரசங்களைத் து}ண்டும் காட்சிகளை தொலைக்காட்சியில் வெளியிட்டமைக்காக ஆப்கானிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் காட்சி புனித அஷ்ரா எனப்படுகிற தினத்தில் ஒளிபரப்பப்பட்டமை பெரிதும் சர்ச்சைக்குரிய விடயமாக விஸ்வரூபமெடுத்துள்ளது. (more…)

அரபு லீக் மாநாட்டு முடிவுகளும் ஈராக்கும். March 26, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , , , , , , , , , , , , , , , , , ,
add a comment

லெபனானில் நடைபெற்ற அரபு நாடுகளின் உள்நாட்டு அமைச்சர்கள் மாநாடு போதைவஸ்து, பண மோசடி, பயங்கரவாதம் எல்லைக்காவல், ஊடகங்களின் செயற்பாடு குற்றவியல் செயற்பாடுகள் குறித்து அக்கறை செலுத்துவதாக நடைபெறங்று முடிந்திருக்கிறது.எதிர்காலச் சவால்களைக் கையாள்வது பற்றியே அரபு நாடுகளின் உள்நாட்டு அமைச்சர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்ததுள்ளனர். (more…)

மடகஸ்காரில் முடிவுக்கு வராத ஜனாதிபதிப் பதவிப் போட்டி March 25, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சியினருக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை இப்போது எதிர்க்கட்சியினரை ஆட்சியமைக்குமாறு இராணுவம் அறிவித்தல் விடுக்கும் சூழலை மடகஸ்காரில் கொண்டுவந்திருக்கிறது.
அதில் ஏற்பட்டுள்ள சட்டச்சிக்கலை எப்படி எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்ரி ரஜோய்லினா சமாளிப்பார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். MADAGASCAR-POLITICS-CRISIS-UNREST
ஏனென்றால் மடகஸ்காரில் ஜனாதிபதி பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு ஒருவர் 40 வயதைத் தாண்டியிருக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்ரி ரஜோய்லினாவுக்கு 34 வயதே ஆகிறது. இதுவே இப்போதுள்ள சிக்கல். அதனை விடவும் ஜனாதிபதி மார்க் ரவலோமனானா தனது பதவியிலிருந்து விலக மறுத்துள்ளார்.
மடகஸ்காரில் இந்த வருடம் ஜனவரி மாத இறுதியில் ஆயிரத்துக்கும் அதிகமான எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தலைநகர் அன்ரனாரிவோ வீதிகளில் திரண்ட இவர்கள் அரசுக்கெதிராகக் கோஷமிட்டதுடன் புதிய அரசாங்கம் பதவிக்கு வரவேண்டுமென தெரிவித்ததுடன் அரச சொத்துக்களையும் சேதப்படுத்தினர்.

(more…)

பாகிஸ்தானில் ஷெரீபின் போராட்டத்திற்கு வெற்றி March 23, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , , , ,
add a comment

பாகிஸ்தானில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தலைமை நீதிபதி, நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளும் மீண்டும் பதவியில் இணைத்துக் கொள்ளப்படுவதாகவும் நவாஸ் ஷெரீபின் சகோதரரின் முதலமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்படும் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி தொலைக்காட்சியில் உரையாற்றியதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டிருந்த அமைதியற்ற நிலை முடிவுக்கு வந்திருக்கிறது.

PAKISTAN-UAE-POLITICS
பாகிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்த முஷாரப் 2007ஆம் ஆண்டு திடீரென நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். (more…)

ஊடகங்கள்அணிய வேண்டிய கண்ணாடிகள் March 23, 2009

Posted by Athiran in உரைகள்.
Tags: , , , , , , , , ,
add a comment

(சென்னை பல்கலைக்கழகம் – மக்கள் ஊடகம் மற்றும் தொடர்பியல் துறை 16-3-2009 அன்று நடத்திய மா. சிங்காரவேலர் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவுக் கருத்தரங்கில் தமிழக ஊடகங்கள் மார்க்சியப் பார்வை என்ற தலைப்பில் சு.பொ. அகத்தியலிங்கம் ஆற்றிய உரை)

கருத்தரங்கின் தலைவர் அவர்களே! மேடையிலே வீற்றிருக்கும் மேனாள் துணைவேந்தர் ஜெகதீசன் அவர்களே! புலவர் ப.வீரமணி அவர்களே! ஊடகத்துறை பேராசிரியர்களே! மாணவ கண்மணிகளே! அனைவருக்கும் வணக்கம். தலைமையேற்று உரையாற்றிய துறைத்தலைவர் கோ.ரவீந்திரன் அவர்கள் வடசென்னையை பற்றிக் குறிப்பிட்டார். பிஅண்ட்சி மில் பற்றி குறிப்பிட்டார். வடசென்னை பின் தங்கியிருப்பது பற்றி குறிப்பிட்டார். ஊடக மாணவர்கள் வடசென்னையை பயில வேண்டும் என்றார். இது என்னுள் நச்சென பதிந்துவிட்டது அதையொட்டி சில கேள்விகளோடு என் உரையைத் துவங்க விழைகிறேன். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் பணியாற்றிய பி அன்ட் சி மில் மூடிக்கிடக்கிறது. அதைப்பார்க்கிற போதெல்லாம் பத்தாயிரம் தொழிலாளர் வாழ்வை புதைத்த சமாதியாகவே எனக்கும் தோன்றுகிறது. அதுபோல் மெட்டல் பாக்ஸ், டன்லப், ஸ்டான்டர்ட் மோட்டார் (இத்தொழிற்சாலை வடசென்னை அல்ல எனினும் ) உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. (more…)

SAJA Journalism Awards 2009 March 20, 2009

Posted by Athiran in செய்திகள்.
Tags: ,
add a comment

SAJA Journalism Awards 2009
Deadline extended to Monday, March 23, 11 pm EST
Winners announced SAJA’s 15th Anniversary Convention, July 10-11, 2009 in NYC.

Note two new awards:
* Outstanding piece or series covering the Mumbai Attacks: All media
* Outstanding piece or series covering the conflict in Sri Lanka: All media

Direct all questions to Jigar Mehta, awards chair and SAJA board member: mehta@nytimes.com (subject line = “SAJA Awards”)

Awards Homepage: http://saja.org/programs/awards
ONLINE SUBMISSION FORM: http://bit.ly/sajaawards09 (more…)

பிரித்தானியாவின் Presstv கலந்துரையாடல் March 19, 2009

Posted by Athiran in தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.
Tags: , , , , , , , , , , ,
add a comment

இலங்கையில் தொடரும் மோதல்கள் குறித்து பிரித்தானியாவின் Presstv அண்மையில் நட்த்திய கலந்துரையாடலில் தற்போதைய நிலைகுறித்து கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கலந்துரையாடலில் நால்வர் கலந்துகொண்டனர்.. பிரித்தானியாவின் தமிழ் போருமைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன், தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் றொபேட்ஈவன்ஸ் ஆகியோர் ஒருதரப்பாகவும், எதிர்த் தரப்பில் பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரின் பிரதிநிதி டக்ளஸ் விக்கிரமரட்ண, மற்றும் கொன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லோர்ட் நஸ்பி ஆகியோரும்; கலந்து கொண்டு தமது வாதங்களை முன்வைத்தனர்.
இந்த போருமில் பார்வையாளர்களும் கருத்துரைத்தோரிடம் கேள்விகளை கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த முக்கிய கலந்துரையாடலை ஒளிவடிவில் பார்க்கலாம்,
இவ்வாறான கலந்துரையாடல்கள் மூலம் வெளிநாடுகளிலுள்ளவர்களுக்கு நமது விடயம் தெரிகிறது என்பது மட்டுமே தகவலாக இருக்கிறது.
 இங்கே அழுத்துங்கள்.

ஈழத்தில் தமிழர்களின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு காரணம் யார்? March 18, 2009

Posted by Athiran in தொகுப்புகள்.
add a comment

வட அயர்லாந்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் மரணத்தால் குழப்பம் March 12, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , , , , , , , , , , , , , , , , ,
add a comment

வடஅயர்லாந்துப் பிராந்தியத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றி பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண்ஸ் ஒருவாரத்துக்குள்ளாகவே இரண்டு தடைவைகள் பேசியிருக்கிறார். இதன் மூலம் அந்தக் சம்பவங்களின் காரணமாக பிரிட்டிஷில் ஏற்பட்டிருக்கிற பிரச்சினையின் கடுமை தெரிகிறது.IRISH-ATTACK/

இந்த விடயம் குறித்து பேசிய அவர் ஒரு பெரிய அரசியல் நடவடிக்கையை ஒரு சிலர் மட்டும் குலைத்துப் பாழ் பண்ண ஒரு போதும் இடமளிக்கப்படமாட்டாது. பொலிஸ் உத்தியோகத்தர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கேட்டவுடனேயே எனது சிந்தனையில் முதலில் வந்தவர்கள் அவருடைய குடும்பத்தினரும் வீரமும் தைரியமும் மிக்க அந்தப்பொலிஸ்காரரும் தான். தினம் தினம் அதிகரித்து வரும் ஆபத்துக்களை எதிர் கொள்ளும் அதுவும் வட அயர்லாந்தில் அதிகரித்துவரும் ஆபத்துக்ளை எதிர்கொள்ளும் பொலிஸ்காரர்களும் தான்.

ஆனாலும் முந்தைய இருண்ட காலம் ஏற்படுவதற்கு இடம் தரப்பட அயர்லாந்தின் அரசியல்வாதிகள் அனைவரும் திட்டவட்டமாக விரும்ப மாட்டார்கள் என்பதனைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் என நான் நம்புகிறேன். அத்துடன் வெளிச்சத்தை நோக்கி நகர வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள் வன்முறையை வேரறுக்க வேண்டும் என்றே அவர்கள் தெளிவாக இருக்கிறர்கள். தற்போது நடந்திருக்கிற இந்த இரண்டு சம்பவங்கள் பற்றி விபரமறிந்தவர்கள் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார். (more…)

தாலாய் லாமாவுக்கு பிறகு திபெத்தின் எதிர்காலம் March 12, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
add a comment

திபத்தின் ஆன்மீகத் தலைவர் தாலாய் லாமா இந்தியாவுக்குத் தப்பிவந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் திபெத்தின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும் என்ற வகையிலான கருத்துக்கள் நிலவத் தொடங்கியிருக்கின்றன.

எதிர்காலத்தில் திபெத்தியர்களுக்கு எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்று சொல்லமுடியாது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும். இந்தியா வில் பெருமளவான திபெத் அகதிகளாக இருக்கிறார்கள்.CHINA-TIBET/

அங்கிருந்தும் போராடுகிறர்கள். தாலாய் லாமா இந்தியாவில் இருக்கிறார். அவரை இன்றும் திபெத்தியர்கள் வணங்குகிறார்கள். தாலாய் லாமா மீது இருக்கும் அன்போ மதிப்போ மரியாதையோ மறையவில்லை. அதனால் கடந்த வருடம் நடந்த போராட்டம் மிகவும் கடுமையாக இருந்தது. இந்த வருடம் அது இருக்குமோ இல்லையோ என்பது சந்தேகமாகவே இருக்கிறது. ஏனென்றால் திபெத்தில் சீனாவின் இராணுவம் குவிக்கப்பட்டு அந்தப்பகுதிகளில் ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து விடக் கூடாது என்பதில் சீன அரசாங்கம் கவனமாக இருக்கிறது. (more…)