jump to navigation

வெறுத்துப்போனேன். May 5, 2009

Posted by Athiran in கவிதைகள்.
2 comments

மனசே உனக்குத்
தெரிந்தவைதான் என்னுள்
இருக்கென்பதை நானறிவேன்.

வெறுப்பே வாழ்க்கையாய் போகிறதே.
நீ எதற்காக என்னை இம்சிக்கிறாய்.
குற்றம் செய்தவனாய்
நான் கூண்டில் நிற்கிறேன்.

கௌரவம் என்பதற்காக
எத்தனை வலியைத் தான்
தாங்கமுடியும் நீயே சொல்.

நாளைக்கே காற்றுப்போனால்
நாறிப்போகும் உடம்புக்காக
எத்தனை அகௌரவத்தனம்
வெளியில்.

நீ மட்டும் சுத்தமாயிருந்தால்
எல்லாம் நல்லதுதானே நடக்கும்.

யாரையும் காயப்படுத்தாத
வாழ்க்கையைத் தானே
சொல்லிக் கொடுத்திருக்கிறாய எனக்கு!

ஆனால் என்ன செய்யலாம்
தனக்கு குழியை
தானே தோண்டும் உலகத்தில்
யாரைத்தான்
உன்னால் காக்கமுடியும்.

மொட்டையடித்து வைத்திருக்கும்
மனச்சாட்சியின் ஒதுக்குப்புறத்தில்
காலம் கடத்தலாம்
என்றே நினைக்கிறேன்.

ஆனால் முடிவதாக இல்லை.
வெறுத்துப்போனேன்.