jump to navigation

ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் கட்சி மீண்டும் வெற்றி June 21, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் இன்றைய நிலையில் மிக  முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே உலகளவில் பார்க்கப்படுகிறது.
கடந்த வாரத்தில் முடிவடைந்திருக்கும் இத்தேர்தலில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் சார்ந்த கட்சி தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளது என்பதே முக்கியப்படுத்தப்படுகிறது.
375 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐரோப்பிய தேர்தல்  உங்கள் முடிவு என்ற கோஷத்தின் கீழ் மிகப் பெரிய விளம்பரத்துடனும் செலவுடனும் இத் தேர்தல் ஜூன் 4 முதல் 7 வரை நடைபெற்றது. EUROPE-ELECTION/
தேர்தலில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் இருக்கும் வாக்காளர்கள் 736 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்தனர்.
இருந்தாலும் மக்கள் இந்தத் தேர்தலில் அக்கறையை வெளிக்காட்டியமை குறைவாகவே இருந்தது. (more…)

மியன்மாரின் ஆன்சான்சூகிக்கு தொடர்ந்தும் சிறைத்தண்டனை June 20, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

மியன்மாரின் ஆங் சாங் சூகி மீதான விசாரணை உள்நாட்டு விவகாரம் வெளிநாடுகள் எதுவும் அதில் தலையிடக்கூடாது என அந்நாட்டு அரசு இவ்விவகாரத்தில் ஏனைய நாடுகள் தலையிடத் தேவையில்லையெனவும் கூறியிருக்கிறது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான பிரிட்டிஷ் அமைச்சர் ஆன் டெய்லர் ஆகியோரும் சூகியை உடனடியாக விடுதலை செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ள நிலையில் மியன்மார் இந்த அறிவித்தலை விடுத்திருக்கிறது.Myanmar104062009_
மியன்மாரின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அயே மைன்ட் ஆங் சாங் சூகிக்கெதிரான சட்ட நடவடிக்கை முற்றுமுழுதான உள்நாட்டு விவகாரமாகும் உள்நாட்டு சட்ட முறைமைகளுக்கு அமைவாகவே அவருக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் யாரும் தலையிடுவதற்கு உரிமையில்லை என சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்திருக்கிறார். (more…)

மீண்டும் தெளிவுபடுத்தப்பட்ட இஸ்ரேலின் ஆதிக்க நோக்கம். June 19, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

IRAN-VOTE-AHMADINEJAD-RALLYஇஸ்ரேலின் புதிய பிரதமாராக பென்ஜமின் நெத்தன் யா{ஹ_ தெரிவு செய்யப்பட்டால் பலஸ்த்தீனத்தில் அமைதி நிலை திரும்பும் அந்த மக்களுக்கு ஒரு நிம்மதி நிறைந்த வாழ்க்கை கிட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அண்மையில் அவர் தெரிவித்த இராணுவ பலம் இல்லாத பலஸ்த்தீனத்தையே இஸ்ரேல் அங்கீகரிக்கும் என்ற கருத்து மத்திய கிழக்கில் பெரும் குழப்பத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

ISRAEL-BUDGET/இன்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன் யா{ஹவின் உரையை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றுள்ளார். பென்ஜமின் நெத்தன் யா{ஹ_ வின் கருத்தானது சமாதான முயற்சிகளில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியிருக்கிறார். கடந்த வாலரத்தில் பென்ஜமின் நெத்தன் யா{ஹ_  பலஸ்தீனை ஒரு தனி பிராந்தியமாக ஏற்றுக் கொள்ளத் தயார். அதேபோல் இஸ்ரேலை யூதர்களின் நாடாக பஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அத்துடன் இராணுவ பலமற்றதாக பலஸ்த்தீனம் மாற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

(more…)

ஈரானியத் தேர்தல் குழப்பம் மேற்குலகுக்குச் சொல்லப்போகும் செய்தி June 19, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு அந்நாட்டு உச்சநிலைத் தலைவர் ஆயத்துல்லாஹ் அல் கொமெய்னி பிறப்பித்திருக்கிறார். ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நிஜாத் இம்முறை நடைபெற்று முடிந்த தேர்தலிலும் வெற்றி பெற்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. IRAN-ELECTION/
இவ்வாறு செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் பின்னர் தலைநகரிலுள்ள இராணுவத் தளமொன்று தாக்கப்பட்டது. அதன்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமமுமடைந்தனர். இதனையடுத்தே ஆயத்துல்லாஹ் அல் கொமெய்னி இந்த உத்தரவினைப்பிறப்பித்திருக்கிறார். (more…)

அணுஆயுதக்களைவு தேவையை உணர்த்தியுள்ள வட கொரியாவின் அணுகுண்டுச் சோதனை June 19, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

1945ஆம் ஆண்டு ஜப்பானின் நாகசாகியில் தாக்குதல் நடத்தப்பயன்பட்ட அணு குண்டுக்கு நிகரான அணுகுண்டை வடகொரியா சோதனைக்குட்படுத்தியுள்ளதாக சீனா குற்றச்சாட்டியிருக்கிறது.
வடகொரியாவின் அணுகுண்டுச் சோதனையை உலகின் முக்கிய நாடுகள் பல கண்டித்திருக்கின்றன. இதில் அமெரிக்காவும் அடங்கும்.
கொரியா இரண்டான படிபின் உருவான வடகொரியா இப்போது சர்வதேச எச்சரிக்கைகளுக்கு மத்தியில் மீண்டும் அணுகுண்டுப் பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறது. வடகொரியாவின் அரச ஊடகம் வெற்றிகரமான அணுகுண்டுப் பரிசோதனையொன்றை திங்கட்கிழமை நடத்தியிருப்பதாக உத்தியோக பூர்வமாக திங்கட்கிழமை அறிவித்திருந்தது.
இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட இப் பரிசோதனை, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டதை விடவும் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததாக அந்நாட்டின் அரச செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளது. (more…)

நேட்டோ படையினரின் தாக்குதல்களும் ஆப்கான் பொது மக்களும். June 18, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

ஆப்கானில் பொது மக்களின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் கூட்டுப்படையினர் இப்போது உள்ளனர். தலிபான்கள் கடந்த மாதம் முதல் வெளிநாட்டுப் படைகளுக்கு எதிராக ஆப்கானில் ஆரம்பித்த தாக்குதல்களுக்குப்பதிலடியாக விமானத் குண்டு வீச்சுகள் அவர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டன. இத்தாக்குதல்களில் பொது மக்கள் பலருடன் தலிபான் போராளிகள் சிலரும் தினமும் கொல்லப்பட்டு வருகின்றனர். AFGHANISTAN-US-NATO-DEFENCE
இந்த நிலையில் ஆப்கானில் நடந்து வரும் விமானத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட வண்ணமிருக்கின்றன. ஆனாலும் அவை தலிபான்களின் அழிவிலேயே நிறைவேறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. (more…)