மொரித்தானியாவில் இராணுவ ஆட்சியாளர் ஜனாதிபதியானார். July 26, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
மொரித்தானியா என அழைக்கப்படும் மவுரித்தேனியா (Mauritania) வில் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இராணுவ ஆட்சியாளர் அப்டெலஷிஸ் 52 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இராணுவ சதிப்புரட்சி மூலம் அப்துல் அஷிஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தார். 
ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிட்ட இத் தேர்தலில் 61 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அந் நாட்டின் தேர்தல் ஆணையகம் தெரிவித்திருந்தது. இந் நிலையில் இந்த முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே தேர்தல் பெறுபேறுகள் போலியானவையெனத் தெரிவித்திருந்த எதிரணியினர் சர்வதேச விசாரணைக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். (more…)
மத்தியகிழக்கின் சமாதானத்தை தள்ளிப் போடும் ஜெருசலேம் July 25, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
இஸ்ரேல் தமது குடியேற்றங்களை நிறுத்த முடியாது என அறிவித்துள்ள நிலையில் மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் விசேடபிரதிநிதி பஹ்ரைன், பலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் சமாதானத் தூதுவர் ஜோர்ஜ் மைக்கல் இவ்வாரக் கடைசியில் மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க வெளிநாட்டமைச்சு தெரிவித்திருக்கிறது.
(more…)
ஜப்பானின் பாராளுமன்றத்தைக் கலைக்கிறார் பிரதமர் தரோ அசோ July 24, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
பாராளுமன்றத்தைக் கலைத்து ஆகஸ்ட் 30 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தப்போவதாக ஜப்பானியப் பிரதமர் தரோ அசோ தெரிவித்ததைத் தொடர்ந்து ஜப்பானின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஏனைய எதிரணிக் கட்சிகளுடன் நம் பிக்கைல்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது.
ஜப்பானியப் பிரதமரது அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமையானது ஜப்பானின் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு இக்கட்டான நிலையாகக் கருதப்பட்டாலும் 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் நான்காவதாகப் பதவி விலகும் பிரதமர் என்ற பெருமை தாரா அசோவுக்குக் கிடைக்கிறது.
(more…)
மந்தைக் கூட்ட ஆட்சேர்ப்பு July 23, 2009
Posted by Athiran in கவிதைகள்.add a comment
எனக்குத் தெரிந்ததை மட்டுமே
நீ செய்ய வேண்டும்.
யாரையும் எனக்கு
ஏற்றுக்கொள்ள முடியாது
நீ உன்னை
விட்டுவிட்டு வா
என்னிடம் வரும்போது!
வெற்று மனிதனாகவே வாழ்
அப்போது தான்
நீ என்னால் நிரப்படலாம்
இது கட்டாயமும் கூட.
உனக்கேன் அக்கறை வேண்டும்
உலகத்தை மாற்ற
எத்தனை பேர்
உனக்குக் கீழே இருக்கிறார்கள் சொல்.
எனக்குக் கீழே இருப்பவர்
கணக்கைக் கூட்டியே ஆகுவேன்.
நீயும் வா.
ஆனால் உன்னை
விட்டுவிட்டு வந்தால் மட்டுமே
உன்னையும் சேர்ப்பேன்
இந்த மந்தைக் கூட்டத்தில்.
மாற்றீடுக்கான சந்தர்ப்பமே இல்லை
நீ வெற்று வேட்டாக இரு.
அப்பொதுதான் என்போல்
ஒன்றுமில்லாதோரால்
இந்த நாசமறுத்த உலகில்
காலந்தள்ளமுடியும்.
23.07.09
உய்குர் இனத்தவர்களுக்கு ஆதரவான நடவடிக்கையில் இறங்குமா அல்கொய்தா .? July 23, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
சீனாவின் வடமேற்குப் பிராந்தியத்திலுள்ள உரும்கியில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கும் நடவடிக்கைக்கு அல் கொய்தா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனப் பத்திரிகையொன்று அல்கொய்தா குறித்த செய்தியை வெளியிட்டிருந்தது. இந்தத் தகவலில் அல் கொய்தா அமைப்பு உரும்கி நகரில் உய்குர் முஸ்லிம் இனத்தவர்களுக்கெதிராக சீனா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்குப் பழிவாங்கும் வகையில் வடமேற்கு ஆபிரிக்காவிலுள்ள சீனத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)
தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை July 22, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
ஆப்கான் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுக்கு உதவத் தயார் என பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. அதற்குப் பிரதியுபகாரமாக இந்தியா தொடர்பான பாகிஸ்தானின் கவலைகளுக்கு அமெரிக்கா உதவவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து தலிபான் தலைவர் முல்லா ஒமருடனும் ஏனைய தளபதிகளுடனும் பேசுவதற்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல்களால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பேச்சுகளே சிறந்த வழி என இப்போது கருத்துகள் நிலவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
(more…)
அடக்குதலால் கிளர்ந்தெழுந்துள்ள சீனாவின் உய்குர் இனம் July 12, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
திபெத் போன்று போராட்டம் நடந்துவரும் இன்னுமொரு சுதந்திரத்துக்கான போராட்டம் பெரியளவில் வெளியில் வந்திருக்கிறது. சீனாவின் மேற்குப்புற மாகாணமான ஜின்சியாங் மாகாணத்தில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் உலகுக்கு மீண்டும் ஒரு சிறுபான்மையினருக்கெதிரான அடக்குதலை வெளிக் கொணர்ந்திருப்பதாகவே கொள்ள முடியும். சீனாவின் ஜின்சியாங் மாகாணத்திலுள்ள உய்குர் இன முஸ்லிம் அமைப்பினர் இந்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனை அடக்குவதற்கு சீன இராணுவம் மிக்க கடுமையாக முயன்று வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உய்குர் இன முஸ்லிம்கள் மிக நீண்ட காலமாகவே இப்பிராந்தியத்தில் சிறுபான்மையினராக இருந்து வருகின்றனர். (more…)
அமெரிக்க ரஷ்யத் தலைவர்களுக்கிடையில் அணுஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் July 11, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
உலகளவில் அணு ஆயுதமே பிரச்சினைக்குரிய விடயமாக இருந்து வருகிறது. சர்வதேச காவல் காரனாக இருக்கும் அமெரிக்கா தன் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து விதமான மனித உரிமை நிறுவனங்கள் சர்வ÷துச தொண்டு நிறுவனங்களை வைத்தக் கொண்டு ஆட்டம் காட்டி வருகிறது. இது ஈராக் மீதான ஆக்கிரமிப்பின் மூலம “உலகுக்கு உணர்த்தப்பட்டிருந்தது.
இப்போது உலகிலுள்ள தமது எதிரி நாடுகளை தனது சாதகத் திட்டங்களுக்காக கூட்டுச் சேர்த்து வருகிறது. இதற்கு இந்த வாரத்தில் ரஷ்யாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த (more…)
மக்களின் ஜனநாயகத்துக்காக களமிறங்கிய ஹொண்டுராஸின் இராணுவம் July 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.1 comment so far
உலக நாடுகளின் அழுத்தம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வலியுறுத்தல்கள் ஹொண்டுராஸ் நாட்டின் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருமா இல்லையா என்பது தெளிவில்லாததாகவே இருக்கிறது.
இராணுவ ஆட்சியை நடத்தும் மியன்மார் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஹொண்டுராஸ் சாதாரணமானதே. ஆனாலும் இராணுவம் இருப்பது நாட்டு மக்களது ஜனநாயகத்தினை நிலைநாட்டுவதற்காக என்பதைச் சில வேளைகளில் பலர் மறந்து விடுகின்றனர். இதனை ஹொண்டுராஸ் இராணுவம் உலகுக்கு ஒரு முறை ஞாபகப்படுத்தியிருப்பதாகவே உணர முடிகிறது.
இந்நிலையில், திடீர் இராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஹொண்டுராஸில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஷிலேயாவை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவதைப்பற்றி யாரும் நினைத்துப் பார்க்கக் கூடாது என அதன் இடைக்கால ஜனாதிபதியான ரொபேட்டோ மிச்லெற்றி தெரிவித்திருக்கிறார்.
மூன்று நாட்களுக்குள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவேன் என்று நாடு கடத்தப்பட்ட ஜனாதிபதி ஷிலேயா அறிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இடைக்கால ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்திருக்கிறார். (more…)
வன்முறைகள் தொடரும் என்ற எதிர்பார்புடன் வெளியேறும் அமெரிக்கப் படைகள் July 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
அமெரிக்கப் படைகள் வெளியேற ஆரம்பிக்கும் தினத்தை ஈராக் கோலாகலமாகக் கொண்டாடியது. அங்கு 30 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் ஜூன்30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சதாம் தலைமையிலான ஈராக் அரசு அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிக்கிறது. ஏராளமான இரசாயன ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கிறது. அதனால் பிராந்தியத்துக்கே ஆபத்து என்று அமெரிக்கா தொடர்ந்து (more…)
இருதரப்பு பேச்சுக்களில் தங்கியுள்ள மத்திய கிழக்கின் அமைதி July 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
பலஸ்தீனம் என்ற நாடு விரைவில் அமைக்கப்படும் என்று மீண்டும் தெளிவுபடுத்தப்பட்ட இஸ்ரேலின் ஆதிக்க நோக்கத்தை முறியடிக்கும் வகையில் பலஸ்தீன அதிகார சபையின் பிரதமர் சலாம் பயாட் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்திருக்கிறார்.
இஸ்ரேலின் புதிய பிரதமராக பென்ஜமின் நெத்தன் யாஹூ தெரிவு செய்யப்பட்டால் பலஸ்தீனத்தில் அமைதி நிலை திரும்பும். அந்த மக்களுக்கு ஒரு நிம்மதி நிறைந்த வாழ்க்கை கிட்டும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் இரு வாரங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்த இராணுவ பலம் இல்லாத பலஸ்தீனத்தையே இஸ்ரேல் அங்கீகரிக்கும் என்ற கருத்து மத்திய கிழக்கில் பெரும் குழப்பத்தைக் கொண்டுவந்திருந்தது. இன்நிலையில் பாலஸ்தீனப்பிரதமர் பலஸ்தீன நாடு குறித்த கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன் யாஹூவின் உரையை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வரவேற்றிருந்தார். நெத்தன் யாஹூ வின் கருத்தானது சமாதான முயற்சிகளில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியிருக்கிறார். கடந்த வாரத்தில் பென்ஜ மின் நெத்தன் யாஹூ பலஸ்தீனை ஒரு தனி பிராந்தியமாக ஏற்றுக் கொள்ளத் தயார். அதேபோல் இஸ்ரேலை தங்களின் நாடாக பஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் இராணுவ பலமற்றதாக பலஸ்தீனம் மாற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். (more…)
வஸிரிஸ்தான் நோக்கி பாக்.இராணுவம் July 10, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
வஸிரிஸ்தானை நோக்கி அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அங்கிருந்து மக்களை வெளியேறுமாறும் பாக். அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள வஸிரிஸ்தானில் இருந்து பொது மக்கள் வெளியேறி வருகின்றனர்.
அப்பகுதியில் பதுங்கி இருக்கும் தலிபான்களை விரட்யடிப்பதற்காக இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாக். இராணுவத்தினருக்கும் தலிபான்களுக்குமிடையில் நடந்துவரும் சண்டையில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக அங்கு வசிக்கும் மக்கள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறத் தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

















