jump to navigation

அமெரிக்க ரஷ்யத் தலைவர்களுக்கிடையில் அணுஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் July 11, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
trackback

உலகளவில் அணு ஆயுதமே பிரச்சினைக்குரிய விடயமாக இருந்து வருகிறது. சர்வதேச காவல் காரனாக இருக்கும் அமெரிக்கா தன் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து விதமான மனித உரிமை நிறுவனங்கள் சர்வ÷துச தொண்டு நிறுவனங்களை வைத்தக் கொண்டு ஆட்டம் காட்டி வருகிறது. இது ஈராக் மீதான ஆக்கிரமிப்பின் மூலம “உலகுக்கு உணர்த்தப்பட்டிருந்தது.OBAMA-RUSSIA/
இப்போது உலகிலுள்ள தமது எதிரி நாடுகளை தனது சாதகத் திட்டங்களுக்காக கூட்டுச் சேர்த்து வருகிறது. இதற்கு இந்த வாரத்தில் ரஷ்யாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரு நாடுகளுக்குமிடையில் சில ஒப்பந்தங்களைச் செய்து கொண்டது நல்ல அடையாளமாகும். அதில் முக்கியமானது தங்களிடமுள்ள அணுவாயுதங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தமாகும்.
1991ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஸ்டார்ட் ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பரில் முடிவுக்கு வருகின்ற நிலையில் இந்த ஆயுதக் கட்டுப்பாட்டுக்கான புதிய ஒப்பந்தம் அதன் முடிவு முதல் தொடரும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன் ஆரம்பக் கட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி டிமித்ரி மித்விடேவ்வும் கைச்சாத்திட்டுள்ளனர். பராக் ஒபாமா ரஷ்யத் தலைநகரில் ரஷ்யாவின் ஜனாதிபதி டிமித்ரி மித்விடேவுடன் நடத்திய பேச்சுகளைத் தொடர்ந்தே  உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.
ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பில் புதியதொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு முன்னோடியாகவே இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் குண்டுவீச்சு விமானங்கள் உட்பட அணுவாயுதங்கள் குறித்த விடயங்கள் அதற்கான விநியோகக்கட்டுப்பாடுகள் அடங்குகின்றன.
நீண்ட பேச்சுக்களில் இரு நாடுகளின் தலைவர்களும் ஈடுபட்டதாகவும் தலைவர்களுக்குமிடையிலான பேச்சுகள் தெளிவானதாகவும் உண்மைத் தன்மையானதாகவும் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் கிழக்கு ஐரோப்பாவிற்கான ஏவுகணைப் பாதுகாப்பு முறைமையை அமைக்கும் அமெரிக்காவின் திட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தெரிகிறது. இதனை இரு நாட்டுத் தலைவர்களு ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பதவிக்கு வந்தது முதல் எதிர்பார்க்கப்பட்ட பல விடய்களில் முக்கியமானது ஈராக்கில் இருந்து படைகள் வெளியேற்றப்படுவதாகும் அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய நாடுகளுடனான உறவுகளைப் பலப்படுத்துவதன் மூலம் உலகளவில் உள்ள குரோதத் தனமான போக்கினை இல்லாமல் செய்வதற்கான முயற்சியைச் செய்திரக்கிறார்.
ஆனாலும் ஈரான் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளின் அணு ஆயுத நடவடிக்கைகளைக் கட்டப்படுத்த இன்னமும் சரியான திட்டங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இப்போதைய ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கப் படையினரை ரஷ்யாவின் ஊடாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைப்பது தொடர்பிலான உடன்
பாடும் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் நலன்களே நிறைவேற்றப்படப்போகின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகள் பலப்படுதல் ரஷ்யாவிடமிருந்து பயங்கரவாதத்திற்கெதிரான ஒத்துழைப்பை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்களும் ஒபாமாவின் விஜயத்தின் பொது பேசப்பட்டுள்ளன.
போர் அழிவு போன்ற விடயங்களை விரும்பாத ஒபாமா மேற்கொண்டு வருகின்ற உலகளவிலான முயற்சிகள் ஆயுதக்கலாசாரத்தை உலகளவில் இல்லாமல் செய்தால் நல்லதாகவே இருக்கும்.
10.07.2009

Comments»

No comments yet — be the first.