ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆப்கான் மக்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம். October 29, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
மேற்குலகு தனக்கு ஆதரவானதை மாத்திரமே வைத்துக்கொள்ளும் என்பதற்கு நவம்பர் 07ஆம்திகதி ஆப்கானிஸ்தானில் நடக்கப் போகும் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நல்ல உதாரணமாகும்.
ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் திகதி மாகாண மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றன. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் 54.9 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அப்துல்லா 39 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இந்தத் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாகவும் அதனை இரத்துச் செய்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐ.நா. அடங்கலான கண்காணிப்பாளர்கள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் நவம்பர் 7ஆம்திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)
பாகிஸ்தானில் தொடரும் தலிபான்களின் தாக்குதல்கள் October 29, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
தலிபான்கள் பாகிஸ்தானில் ஆதிக்கத்தைப் பலப்படுத்திவிட்டனர் என்று எண்ணும் அளவுக்கு இப்போது அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. இதற்கு நேற்றும் பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் நடந்த பொலிஸ் நிலையங்கள் மீதான தற்கொலைத் தாக்குதல்களைக் குறிப்பிடலாம்.
பாகிஸ்தானில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நான்கு பொலிஸார் கொல்லப்பட்டனர் பாகிஸ்தானின் சங்லா மாவட்டத்தில் இந்த குண்டு வெடித்தது. இதில் இருபது பேர் காயமுற்றனர். ராவல்பிண்டி இராணுவத் தலைமையகத் தாக்குதலுக்கு பின்னர் நடந்த மற்றொரு தற்கொலைத் தாக்குதல் இதுவாகும்.
பாகிஸ்தான் இராணுவ தலைமை அலுவலகத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இராணுவத்தினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 6 இராணுவ வீரர்களும் பலியாகினர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகிலேயே அமைந்துள்ள ராவல்பிண்டி நகரத்தில் அந்த நாட்டின் இராணுவ தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. (more…)
அமெரிக்காவின் கைக்குவரும் அணுஆயுத விவகாரம். October 28, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
அமெரிக்காவின் கடும் போக்கினால் வடகொரியாவின் அணுஆயுதம் உலகளவில் பிரச்சினையாக உள்ளது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கிற அணுத்திட்டம் தொடர்பான பேச்சுக்களில் நாங்கள் பங்கு கொள்வது அமெரிக்காவின் கைகளிலேயே தங்கியுள்ளது என வட கொரியா கூறியிருப்பது அந்த நாட்டின் வளைந்து கொடுக்கும் தன்மையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது எனக் கொள்ளலாம்.
ஆறு நாடுகள் பங்கு பற்றும் அணுத்திட்டம் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தைக் குச் செல்லும் முன்னர் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப் பட வேண்டும் என வடகொரியா எதிர்பார்க்கிறது. இதற்கு அமெரிக் காவே காரணம். வடகொரியாவின் அணுஆயுத மேம்படுத்தலை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் குறியாக உள்ளது அமெரிக்கா.நீண்ட தூர ஏவுகணைப்பரிசோதனை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டமை காரணமாக ஏற்பட்ட சர்வதேச அளவிலான கண்டனங்கள் மற்றும் சர்ச்சைகளால் இந்த வருட முற்பகுதியில் ஆறு நாடுகள் பங்கு கொள்ளும் அணுத்திட்டப்பேச்சுக்களிலிருந்து வட கொரியா விலகியிருந்தது. (more…)
பாகிஸ்தானில் ஐ.நா.அலுவலகம் மீதான் தாக்குதல் கூறும் செய்தி October 28, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
தலிபான் போராளிகளின் பாகிஸ்தான் பிராந்திய முன்னாள் தலைவர் பெய்துல்லா மெஹ்சுத் எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டமைக்கு பழிதீர்க்கப் போவதாக புதிய தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சுத் சவால் விடுத்திருந்த நிலையில் பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் ஐ.நா. அதிகாரி உட்பட 5பேர் பலியாகினர்.
ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற அமெரிக்க எறிகணைத் தாக்குதலில் பெய்துல்லா மெஹ்சுத் கொல்லப்பட்டிருந்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு புதிய தலைவராக ஹக்கிமுல்லா மெஹ்கத் பொறுப்பேற்றிருந்தார். தலிபான்களுக்கெதிரான நடவடிக்கைகளி>ல் ஈடுபட்டு வரும் அமெரிக்காவையும் பிரிட்டனையும் எச்சரிக்கும் பொருட்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்த ஐ.நா. தலைமையகத்தை தாம் தாக்கியதாக தலிபான்கள் தெரிவித்திருக்கின்றனர். (more…)
கினியாவில் இராணுவ ஆட்சியாளர்களின் அட்டகாசத்துக்குப் பலியான போராட்டக்காரர்கள். October 28, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
இராணுவ அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கில் கினியாவில் திங்கட்கிழமை அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 157 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்கு இரு தினங்களுக்கு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் பாரிய கூட்டங்கள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இராணுவ அரசாங்கம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களையும் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியது. இந்த அறிவித்தலை இராணுவ ஆட்சியாளர் கப்டன் மௌஸா டாடிஸ் விடுத்தார். அதே வேளை கினியாவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதகுருமார், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் பொது ஒழுங்கைக் குலைக்கும் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)
சத்துருக்கொண்டான் படுகொலையின் 19ஆவது நினைவு October 6, 2009
Posted by Athiran in சிவராம், செய்திகள், தொகுப்புகள், புகைப்படங்கள்.Tags: Amparai, Batticaloa, East, News, Sathurukondan massacre, Sri Lanka, Trincomalee
add a comment
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினப் படங்களை எனக்கு இப்போதுதான் பதிவேற்றம் செய்யமுடிகிறது என்பதற்குக் கவலை கொள்கிறேன். சத்துருக்கொண்டான் படுகொலை என்றவுடன் எனக்கு அந்தப் படுகொலை குறித்து ஞாபகம் வருகிறதோ இல்லையோ என்னுடைய பத்திரிகைத்துறை ஆசிரியர் அனைவராலும் தராக்கி என அழைக்கப்படுகிற சிவாராம் பற்றியே ஞாபகம் வரும்.

நான் மட்டக்களப்பில் தினக்கதிர் பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளனாக வேலை செய்து கொண்டிருந்த வேளை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசிப் பகுதியில் ( திகதி சரியாக ஞாபகத்தில் இல்லை) தினக்கதிரின் ஆசிரியராக இருந்த றுசாங்கன் அண்ணா ஒரு வாரமளவில் கொழும்புக்குச் சென்றிருந்தார். அப்போது சிவராம் என்னை அழைத்து சத்துருக்கொண்டான் படுகொலை பத்தாவது ஆண்டு வருது அது பற்றி ஒரு கட்டுரை எழுது என்று சொன்னார்.
அன்றைய நாளே சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்துருக்கொண்டான் புறப்பட்டேன். அப்போது எனக்கு சத்துருக் கொண்டான் படுகொலை என்பது ஒன்று நடந்ததாக மட்டுமே தெரியும். ஆனாலும் எனக்கிருந்த துடிப்பு அதைப் பற்றி முழுதாக எழுதி விட வேண்டும் என்று தூண்டி விட்டது. என்பதை விடவும் அவர் (சிவாராம் என்று அவருடைய பெயரை மரியாதை கருதி அடிக்கடி உச்சரிப்பதில் எனக்கு இஸ்டமில்லை என்பதால் அவர் என்று குறிப்பிடுகிறேன்) சொல்லியது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது.
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாளான 09.09.க்கு முதல் நாள் நான் எழுதிய கட்டுரை பக்க வடிவமைப்பு முடிந்த வேளை அதனை வாசித்துப்பார்த்த அவர் இன்னமும் போதாது மீண்டும் அங்கு போய் தகவல் திரட்டு என திரும்பவும் சத்துருக்கொண்டான் அனுப்பினார்.
றுசாங்கன் அண்ணா வரும் வரை தினக்கதிரின் பிரதான வேலைகளை அவரே பொறுப்பேற்று நடத்தினார். அந்த குறிப்பிட்ட நாட்களில் எங்களுக்கு அவர் பல விடயங்களை கற்றுத் தந்தார்.
அது போல அவர் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வரும் போதெல்லாம் எங்களுடைய தினக்கதிர் அலுவலகத்திற்கு வருவது வழக்கம்.
அவருடைய பக்குவப்படுத்தல்கள் உண்மையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு பத்திரிகையாளனை உருவாக்குவார் என்பதனைக் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. ஊக்கப்படுத்துவதும் கற்றுக் கொடுப்பதும் ஒரு பத்திரிகை ஆசிரியரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
சத்துருக்கொண்டான் படுகொலை போல பல விடயங்கள் அவருடன் இணைந்து செய்யப்பட்டிருந்தாலும் அவருடைய நினைவுகள் மீட்கும் போது சத்துருக் கொண்டான் படுகொலை வந்து விடுகிறது.
சிவராம் பற்றி அவருடைய மறுபக்கம் பற்றித் தெரிந்தவர்கள் முன்வைக்கி்ன்ற விவாதங்கள் எனக்கு இரண்டாம் பட்சமானவை எனக்குத் தெரிந்தவகையில் ஒரு பத்திரிகைக்காரனாகவே அவரைத் தெரிந்து கொண்டேன். அவ்வாறு இறந்தும் போனார் நினைத்துப் பார்க்கையில் நிச்சயமாக அவருடைய நினைவுகள் நிசப்தமாகா நிஜங்களாகவே இருக்கின்றன.
மிகுதிப்படங்களைப் பார்க்க
ஈரான் அணுஆயுதத்தில் தங்கியிருக்கும் மத்திய கிழக்கின் அமெரிக்க ஆதிக்கம். October 2, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
அமெரிக்க, இஸ்ரேல் அட்டூழியங்களே மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம் என்று ஈரானின் சபாநாயகர் அலிலர்ஜானி குற்றம் சாட்டியிருக்கிறார். ஈரானுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கம் கண்டுள்ள நிலையில் அலிலர்ஜானி இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
ஈரான் தமது நாட்டில் யுரேனியத்தைச் செறிவாக்கி மின்சக்தி உள்ளிட்ட சக்தி வளங்களுக்குப் பயன்படுத்தவுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ள போதும் அதனை நிறுத்த வேண்டும் என்றே அமெரிக்கா கூறிவருகிறது.
இந்த வேளையில் மத்திய கிழக்கின் முரண்பாடுகளுக்கு அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்வு பெரும் பேராபத்தானதென ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலிலர்ஜானி தெரிவித்திருக்கிறார். பலஸ்தீனத்தின் ஹமாஸை ஆயுதங்களை ஒப்படைக்கும்படியும் இஸ்ரேலுடன் இணங்கிச் செல்லுமாறும் கூறும் அமெரிக்கா இஸ்ரேலின் அநீதிகளைக் கண்டிக்கவில்லையெனவும் அலிலர்ஜானி குற்றம் சாட்டியிருக்கிறார். (more…)

















