Home > செய்திகள் > மர்ம மனிதனின் அச்சுறுத்தல்; வவுணதீவில் ஆ ர்ப்பாட்டம்

மர்ம மனிதனின் அச்சுறுத்தல்; வவுணதீவில் ஆ ர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் மற்றும் நடமாட்டம் என்பவற்றை கண்டித்து வவுணதீவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று புதன்கிழமை காலை ஈடுபட்டனர்.

கரவெட்டி, விளாவட்டவான், நாவற்காடு, ஈச்சந்தீவு, மங்கிக்கட்டு, வவுணதீவு ஆகிய கிராம மக்கள் வவுணதீவு பிரதேச செயலகத்தை நோக்கி சென்றவேளையில் பிரதேச செயலகம் மக்கள் வருகை கண்டு மூடப்பட்டது. அதையடுத்து பொதுமக்கள் வவுணதீவு பொலிஸ் நிலையத்தை சூழ்ந்து வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரவெட்டி என்னும் கிராமத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை சிவில் உடையில் இருவர் 4 உணவுப் பொதிகள் மற்றும் பனிஸ் போன்ற உணவு பொருட்கள் சகிதம் வந்ததாகவும் இன்னும் இருவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வேளை, மர்ம மனிதன் பிரச்சினையால் கிராமங்களில் பாதுகாப்பின் நிமித்தம் பொல்லுகளுடன் காவலில் இருந்த இளைஞர்கள், மேற்படி இருவரையும் கைதுசெய்து கட்டிப் போட்டுள்ளனர். ஆனால், தாங்கள் வவுணதீவு பொலிஸ் பிரிவினரென கூறியதும் விடுதலை செய்தனர். ஆனாலும் மர்ம மனிதன் பிரச்சினை உள்ள வேளை இவர்கள் சிவில் உடையில் வந்தமை குறித்து சந்தேகம்
தெரிவித்தனர். அதன் பின் வவுணதீவு பொலிஸ் பிரிவினர் ஜீப்பில் வந்தபோது மக்களுக்கு பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீதிகளில் டயர்கள் போட்டு எரித்தனர்.

இதன் பின் சம்பவ இடத்துக்கு மக்கள் அழைப்பின் பேரில் வந்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான
சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன் ஆகியோர் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் பிரிவு மேலதிகாரிகளுடன் தொடர்புகொண்டு வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கதைத்து நிலைமையை சீரமைத்தனர்.

இதன் நிமித்தம் வவுணதீவு பொலிஸார் மாலை 6.00 மணி தொடக்கம் மறுநாள் காலை 6.00 மணி வரை கிராம பாதுகாப்புக்கு செல்வது தற்காலிகமாக
தடைசெய்யப்பட்டதுடன் பகலில் அக்கிராமங்களில் கடமையின் நிமித்தம் செல்வோர் கிராம அதிகாரியுடன் செல்வதெனவும் வவுணதீவு பொலிஸ் நிலையத்திலுள்ளவர்களின் பெயர், புகைப்படங்களை பொலிஸ் நிலைய வாயிலில் ஒட்டி வைப்பது உட்பட்ட தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

இதன் பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் கதைத்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்தச் செய்துள்ளனர். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, பிரதேச தவிசாளர் எஸ்.பிறைசூடி, எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.நிமலன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

Advertisement
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.