Home > செய்திகள் > மர்ம மனிதன் பிரச்சினைக்கு முற்றுப்புள் ளி வைத்து சேற்றுக்குடா பொலிஸ் அரணை அகற்றுமா று கோரி புதூரில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்.

மர்ம மனிதன் பிரச்சினைக்கு முற்றுப்புள் ளி வைத்து சேற்றுக்குடா பொலிஸ் அரணை அகற்றுமா று கோரி புதூரில் ரயர் எரித்து ஆர்ப்பாட்டம்.

மட்டக்களப்பு புது நகரில் நேற்று முன்தினம் இரவு வந்த மர்ம மனிதர்கள் பொது மக்கள் துரத்திச் சென்ற போது தப்பிச் சென்று சேத்துக்குடா பொலிஸ் அரணில் புகுந்ததாகத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை காலை புதூர் விமான நிலையத்துக்கு அருகாமையில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன்,
மண்முனைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் சசிதரன் கிரிஸ்ரினா, வவுணதீவு பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கே.விமலநாதன், மாநகர சபை உறுப்பினர் கிருபைராஜா உட்பட மக்கள் பிரதி நிதிகள், இவ் ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி அவர்களுடன் இணைந்து வீதியை மறித்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தற்போது மாணவர்களுக்கான
உயர்தரப்பரீட்சை இடம்பெறுகின்ற நிலையில் மாணவர்களை பரீட்சைக்குத் தயார்படுத்த முடியாத அளவுக:கு இந்த மர்ம மனிதர் பிரச்சினை பாரிய சிக்கலை ஏற்படுத்தி வருவதாகவும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரிய உளரீதியான பிரச்சினைக:கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்ததுடன், தங்களது பகுதிக்குள் நுழையும், மர்ம மனிதர்கள் விமான நிலையம், மற்றும் சேத்துக்குடா பொலிஸ் அரண் போன்ற பகுதிகளுக்குள்ளே தப்பிச் செல்வதாக தப்பிச் செல்வதாக குற்றம் சுமத்தியதுடன் ஊரின் மத்தியில் அமைந்துள்ள சேத்துக்குடா பொலிஸ் காவல் அரணை உடனடியாக அகற்றுமாறும் வேண்டுகோள் முன்வைத்தனர்

இங்கு வருகை தந்த மேற்படி மாநகர முதல்வர், பிரதேச சபைத் தவிசாளர் உட்பட மக்கள் பிரதிநிதிகள் பொது மக்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தாங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வீதிகளில் ரயர்களை எரித்து வீதித்தடையை ஏற்படுத்தினர், இதனால் மட்டக்களப்பு நகரிலிருந்து
படுவான்கரைப்பகுதிக:குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களும் விவசாய நடவடிக்கைகளுக்காகச் செல்பவர்களும், படுவான்கரையிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு வருபவர்களும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Advertisement
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.