Home > செய்திகள் > மர்ம மனிதர்களின் தொல்லையால் குறிஞ்சாமுனையில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் போக்குவரத்து 11மணிவரை துண்டிப்பு.

மர்ம மனிதர்களின் தொல்லையால் குறிஞ்சாமுனையில் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் போக்குவரத்து 11மணிவரை துண்டிப்பு.

மர்ம மனிதர்களின் தொல்லையினைக் கண்டித்து நேற்று காலை முதல்
மு.ப.11.00மணிவரை குறிஞ்சாமுனையில் பிரதான வீதியை மறித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால்மு.ப. 11மணிவரை வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தொடர்ச்சியாக இரவில் இனந்தெரியாத மர்ம மனிதர்கள் வருவதாகவும் வீடுகளுக்குள் புகுவதாகவும் பெண்களை குறிவைத்து பலாத்காரத்தில் ஈடுபட முயற்சிப்பதாகவும் இதனால் இரவில் நித்திரை கொள்ள முடியதுள்ளதாகவும் தெரிவித்தனர்.இதனால் தங்களது பிள்ளைகளின் கல்வி பாதிப்பதாகவும் பரீட்சை எழுதுவம் மாணவர்கள் பரீட்சைக்கு தயார்படுத்த முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன.செல்வராசா,சீ.யோகேஸ்வரன,பா.அரியநேத்திரன் ஆகியோரிடம் தங்களுக்கு வவுணதீவுப் பொலிஸ் பொலிஸ் மீது நம்பிக்கையில்லை பொலிஸ் நிலையத்தை அகற்ற வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தனர்.

இதற்குப் பதிலழித்த பாராளுமன்ற ஊறுப்பினர்கள் பொலிஸ் சிவில் பாதுகாப்பினை மேற்கொள்வது பொலிஸ் நிலையத்தை அகற்ற முடியாது எங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் இருந்தே ஆக வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொது மக்கள் தற்போது சேவையில் உள்ளவர்களை இடமாற்றி பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒருவரை தமிழராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சரிடம் தொடர்பு கொண்டு பொது மக்களின் கோரிக்கையை முன்வைத்தபோது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இன்று மாலை 5 மணிக்கு கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் இவர்கள் சார்பில் 10பேரை கலந்து கொள்ளுமாறும் அக் கூட்டத்தில் அவர்களிடம் பிரச்சினையை கேட்டறிந்து அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களிடம்
தெரிவித்ததுடன் தாங்கள் பொலிஸாரை மாற்றித் தருவதாக வழங்கிய
உத்தரவாதத்தினை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Advertisement
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.