வுவுனியா மாவட்ட ஊடகவியலாளர் தம் பு விவேகராசா காலமானார்
வுவுனியா மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் தம்பு விவேகராசா, தனது 56ஆவது வயதில் இன்று அதிகாலை காலமானார்.
கடந்த 10 நாட்களாக சுகவீனமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தம்பு விவேகராசா கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் சேவையாற்றி வருவதோடு வன்னி ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Advertisement
Categories: செய்திகள்
Amparai, Batticaloa, East, Journalist, News, Sri Lanka, tamil Journalist, Trincomalee, Vavunia, War


















Recent Comments