ஊடகங்கள்அணிய வேண்டிய கண்ணாடிகள் March 23, 2009
Posted by Athiran in உரைகள்.Tags: உரை, ஊடகங்கள், கருத்தரங்கம், சு.பொ.அகத்தியலிங்கம், சென்னை பல்கலைக்கழகம், தமிழக ஊடகங்கள், தொடர்பியல் துறை, மக்கள் ஊடகம், மா. சிங்காரவேலர், மார்க்சியப் பார்வை
add a comment
(சென்னை பல்கலைக்கழகம் – மக்கள் ஊடகம் மற்றும் தொடர்பியல் துறை 16-3-2009 அன்று நடத்திய மா. சிங்காரவேலர் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவுக் கருத்தரங்கில் தமிழக ஊடகங்கள் மார்க்சியப் பார்வை என்ற தலைப்பில் சு.பொ. அகத்தியலிங்கம் ஆற்றிய உரை)
கருத்தரங்கின் தலைவர் அவர்களே! மேடையிலே வீற்றிருக்கும் மேனாள் துணைவேந்தர் ஜெகதீசன் அவர்களே! புலவர் ப.வீரமணி அவர்களே! ஊடகத்துறை பேராசிரியர்களே! மாணவ கண்மணிகளே! அனைவருக்கும் வணக்கம். தலைமையேற்று உரையாற்றிய துறைத்தலைவர் கோ.ரவீந்திரன் அவர்கள் வடசென்னையை பற்றிக் குறிப்பிட்டார். பிஅண்ட்சி மில் பற்றி குறிப்பிட்டார். வடசென்னை பின் தங்கியிருப்பது பற்றி குறிப்பிட்டார். ஊடக மாணவர்கள் வடசென்னையை பயில வேண்டும் என்றார். இது என்னுள் நச்சென பதிந்துவிட்டது அதையொட்டி சில கேள்விகளோடு என் உரையைத் துவங்க விழைகிறேன். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் பணியாற்றிய பி அன்ட் சி மில் மூடிக்கிடக்கிறது. அதைப்பார்க்கிற போதெல்லாம் பத்தாயிரம் தொழிலாளர் வாழ்வை புதைத்த சமாதியாகவே எனக்கும் தோன்றுகிறது. அதுபோல் மெட்டல் பாக்ஸ், டன்லப், ஸ்டான்டர்ட் மோட்டார் (இத்தொழிற்சாலை வடசென்னை அல்ல எனினும் ) உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. (more…)

















