jump to navigation

ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆப்கான் மக்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம். October 29, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

மேற்குலகு தனக்கு ஆதரவானதை மாத்திரமே வைத்துக்கொள்ளும் என்பதற்கு நவம்பர் 07ஆம்திகதி ஆப்கானிஸ்தானில் நடக்கப் போகும் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நல்ல உதாரணமாகும்.

ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் திகதி மாகாண மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றன. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் 54.9 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அப்துல்லா 39 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் இந்தத் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாகவும் அதனை இரத்துச் செய்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐ.நா. அடங்கலான கண்காணிப்பாளர்கள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் நவம்பர் 7ஆம்திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)

பாகிஸ்தானில் தொடரும் தலிபான்களின் தாக்குதல்கள் October 29, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

தலிபான்கள் பாகிஸ்தானில் ஆதிக்கத்தைப் பலப்படுத்திவிட்டனர் என்று எண்ணும் அளவுக்கு இப்போது அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. இதற்கு நேற்றும் பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில் நடந்த பொலிஸ் நிலையங்கள் மீதான தற்கொலைத் தாக்குதல்களைக் குறிப்பிடலாம்.
பாகிஸ்தானில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நான்கு பொலிஸார் கொல்லப்பட்டனர் பாகிஸ்தானின் சங்லா மாவட்டத்தில் இந்த குண்டு வெடித்தது. இதில் இருபது பேர் காயமுற்றனர். ராவல்பிண்டி இராணுவத் தலைமையகத் தாக்குதலுக்கு பின்னர் நடந்த மற்றொரு தற்கொலைத் தாக்குதல் இதுவாகும்.

பாகிஸ்தான் இராணுவ தலைமை அலுவலகத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இராணுவத்தினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 6 இராணுவ வீரர்களும் பலியாகினர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகிலேயே அமைந்துள்ள ராவல்பிண்டி நகரத்தில் அந்த நாட்டின் இராணுவ தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. (more…)

அமெரிக்காவின் கைக்குவரும் அணுஆயுத விவகாரம். October 28, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

அமெரிக்காவின் கடும் போக்கினால் வடகொரியாவின் அணுஆயுதம் உலகளவில் பிரச்சினையாக உள்ளது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முக்கியத்துவம் கொடுக்கிற அணுத்திட்டம் தொடர்பான பேச்சுக்களில் நாங்கள் பங்கு கொள்வது அமெரிக்காவின் கைகளிலேயே தங்கியுள்ளது என வட கொரியா கூறியிருப்பது அந்த நாட்டின் வளைந்து கொடுக்கும் தன்மையைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது எனக் கொள்ளலாம்.

ஆறு நாடுகள் பங்கு பற்றும் அணுத்திட்டம் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தைக் குச் செல்லும் முன்னர் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தப் பட வேண்டும் என வடகொரியா எதிர்பார்க்கிறது. இதற்கு அமெரிக் காவே காரணம். வடகொரியாவின் அணுஆயுத மேம்படுத்தலை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் குறியாக உள்ளது அமெரிக்கா.நீண்ட தூர ஏவுகணைப்பரிசோதனை மற்றும் அணு ஆயுதச் சோதனைகளில் ஈடுபட்டமை காரணமாக ஏற்பட்ட சர்வதேச அளவிலான கண்டனங்கள் மற்றும் சர்ச்சைகளால் இந்த வருட முற்பகுதியில் ஆறு நாடுகள் பங்கு கொள்ளும் அணுத்திட்டப்பேச்சுக்களிலிருந்து வட கொரியா விலகியிருந்தது. (more…)

பாகிஸ்தானில் ஐ.நா.அலுவலகம் மீதான் தாக்குதல் கூறும் செய்தி October 28, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

தலிபான் போராளிகளின் பாகிஸ்தான் பிராந்திய முன்னாள் தலைவர் பெய்துல்லா மெஹ்சுத் எறிகணைத் தாக்குதலில்  கொல்லப்பட்டமைக்கு   பழிதீர்க்கப்  போவதாக  புதிய தலைவர் ஹக்கிமுல்லா மெஹ்சுத் சவால்  விடுத்திருந்த நிலையில்  பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் தற்கொலை  குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதில் ஐ.நா. அதிகாரி உட்பட 5பேர் பலியாகினர்.

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற அமெரிக்க எறிகணைத் தாக்குதலில் பெய்துல்லா  மெஹ்சுத் கொல்லப்பட்டிருந்தார். அவருடைய மரணத்திற்குப் பிறகு புதிய  தலைவராக  ஹக்கிமுல்லா மெஹ்கத்  பொறுப்பேற்றிருந்தார்.  தலிபான்களுக்கெதிரான  நடவடிக்கைகளி>ல் ஈடுபட்டு வரும் அமெரிக்காவையும்    பிரிட்டனையும் எச்சரிக்கும் பொருட்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்த ஐ.நா. தலைமையகத்தை தாம் தாக்கியதாக தலிபான்கள்  தெரிவித்திருக்கின்றனர். (more…)

கினியாவில் இராணுவ ஆட்சியாளர்களின் அட்டகாசத்துக்குப் பலியான போராட்டக்காரர்கள். October 28, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

இராணுவ அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் நோக்கில் கினியாவில் திங்கட்கிழமை அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 157 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அங்கு இரு தினங்களுக்கு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்துடன் பாரிய கூட்டங்கள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இராணுவ அரசாங்கம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களையும் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியது. இந்த அறிவித்தலை இராணுவ ஆட்சியாளர் கப்டன் மௌஸா டாடிஸ் விடுத்தார். அதே வேளை கினியாவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதகுருமார், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் பொது ஒழுங்கைக் குலைக்கும் நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

ஈரான் அணுஆயுதத்தில் தங்கியிருக்கும் மத்திய கிழக்கின் அமெரிக்க ஆதிக்கம். October 2, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

அமெரிக்க, இஸ்ரேல் அட்டூழியங்களே மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம் என்று ஈரானின் சபாநாயகர் அலிலர்ஜானி குற்றம் சாட்டியிருக்கிறார். ஈரானுக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கம் கண்டுள்ள நிலையில் அலிலர்ஜானி இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

ஈரான் தமது நாட்டில் யுரேனியத்தைச் செறிவாக்கி மின்சக்தி உள்ளிட்ட சக்தி வளங்களுக்குப் பயன்படுத்தவுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ள போதும் அதனை நிறுத்த வேண்டும் என்றே அமெரிக்கா கூறிவருகிறது.

இந்த வேளையில் மத்திய கிழக்கின் முரண்பாடுகளுக்கு அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்வு பெரும் பேராபத்தானதென ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலிலர்ஜானி தெரிவித்திருக்கிறார். பலஸ்தீனத்தின் ஹமாஸை ஆயுதங்களை ஒப்படைக்கும்படியும் இஸ்ரேலுடன் இணங்கிச் செல்லுமாறும் கூறும் அமெரிக்கா இஸ்ரேலின் அநீதிகளைக் கண்டிக்கவில்லையெனவும் அலிலர்ஜானி குற்றம் சாட்டியிருக்கிறார். (more…)

நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதியின் மீள் வருகையும் ஹொண்டுராஸின் எதிர்காலமும். September 25, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

உலக நாடுகளின் அழுத்தம், அமெரிக்கா அடங்கலான மேற்குலக நாடுகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஹொண்டுராஸ் நாட்டின் நாடுகடத்தப்பட்ட மானுவெல் ஷிலேயா காடு மலைகள் தாண்டி நாட்டுக்குள் வந்து சேர்ந்திருக்கிறார். ஷிலேயா மீண்டும் நாட்டுக் குள் வந்தவுடன் அங்குள்ள பிரேஸில் தூதரகத்தினுள் தஞ்சம் புகுந்திருக்கிறார்.

ஹொண்டுராஸில் மானுவெல் ஷிலேயா அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருவ தற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும் இடைக்கால ஜனாதிபதியாக இருந்துவரும் ரொபேட்டோ மிச்லெற்றி,  ஷிலேயாவுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதும் நாட்டுக்குள் வைத்திருப்பதும் வீணான பிரச்சினைகளைக் கொண்டுவரும் என்று தெரிவித்திருக்கிறார். (more…)

ஆப்கானில் அல் – கொய்தாவால் நெருக்கடிப்படும் அமெரிக்கா September 25, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தை எதிர்த்துப் போரிட தலிபான்களுக்கு யார் தைரியம் கொடுப்பது என்ற எல்லோருக்குமே இருந்து வருகிறது. இதனை அமெரிக்க இராணுவத் தலைமை தளபதி ஸ்டான்லி மெக்கிறிஸ்டைல் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார் அவருடையது வெறும் தகவலல்ல, பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ. வை. குற்றமே சாட்டியிருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் பகுதியில் நடைபெற்று வரும் போர் நிலைமை குறித்து ஆய்வு நடத்தி முடித்திருக்கிற தளபதி ஸ்டான்லி மெக்கிறிஸ்டைல் வெள்ளை மாளிகைக்கு அனுப்பியிருக்கிற விரிவான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. வெளிப்படையாகவே உதவி வருவதாக உறுதியாகத் தெரிவித்திருக்கிற அவர் குவாட்ஸ்போர்சஸ் என்ற ஈரானிய உளவு நிறுவனமும் தலிபான்களுக்கு உதவி வருகிறது என்றும் கூறியிருக்கிறார். (more…)

சரியும் ஆதரவை சரிப்படுத்தவாரா ஒபாமா? September 21, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பதவி நிலைக்கான மக்கள் அங்கீகாரமானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதாக தகவல்கள் கருத்துக் கணிப்புக்கள் வெளியாகி வருகின்ற நிலையில் ஒபாமாவின் சுகாதாரத்திட்டத்திற்கு எதிரான அமெரிக்காவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.US-POLITICS-OBAMA-PROTEST

சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 46 சதவீத மக்கள் அங்கீகாரத்தை மட்டுமே ஒபாமா பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற போது ஒபாமாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கைவிடவும் 19 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. ரஸ்முஸன் றிபோர்ட்ஸ் தினசரி நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் 53 சதவீதமானவர்கள் அவரது பதவி நிலை குறித்து நிராகரிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. (more…)

ஈராக் ஊடகவியலாளர் விடுதலையில் மறைந்திருக்கும் உண்மை September 21, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் கலந்து கொண்ட வேளை அவர் மீது சப்பாத்து வீசிய ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி ஒன்பது மாத சிறைத் தண்டனையின் பின்னர் செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஈராக்கிற்கு விஜயம் செய்திருந்த வேளை ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார். இதில் கலந்து கொண்ட ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி, புஷ் மீது சப்பாத்துக்களை வீசினார். கைது செய்யப்பட்ட இவருக்கு ஈராக் நீதிமன்றம் மூன்று வருட சிறைத் தண்டனையை விதித்தது.

இத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்த போது ஒரு வருட சிறைத் தண்டனையாக அது குறைக்கப்பட்டது.. அவருடைய சிறை நடத்தை காரணமாக ஒன்பது மாதகாலத்தில் விடுவிக்கப்பட்டார்.

(more…)

உலக ஒழுங்கைத் தீர்மானிக்கும் யூதர்களின் எதிரிகள் September 8, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

யூதர்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே உலக நாடுகளின் நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது இஸ்லாமியர்களின் நிலைப்பாடாகும். அத்துடன் அதற்கெதிராக செயற்படுவதும் அவர்களது கொள்கையாக நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

அரசியல் மயப்பட்ட போராட்டங்களும் பேச்சுக்களும் இணக்கப்பாடுகளும் அந்த வகையிலேயே நடைபெற்றும் வருகின்றன.

இந்த வாரத்தில் மடஸ்காரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மொஸாம்பி யாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  2010 ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)

இழுபறியில் ஆப்கானிஸ்தான் தேர்தல் முடிவுகள் August 28, 2009

Posted by Athiran in கட்டுரைகள்.
add a comment

ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கார்ஸாய் முன்னணியில் இருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.

நடைபெற்ற தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் எண்ணப்பட்ட 524 444 வாக்குகளில் 212927 வாக்குகளை ஹமீட் கர்ஸாய் பெற்றுள்ளார். 202889 வாக்குகளை அப்துல்லா பெற்றுள்ளார். அடுத்த நிலை வேட்பாளர்களான ரம்ஸான் 53740 வாக்குகளையும் அஷ்ரப்கான் 15143 வாக்குகளையும் பெற்றுள் ளனர். இதன் பிரகாரம் கர்ஸாய் 40.06 வீதத்தையும் அப்துல்லா 38.06 வீதத்தையும் பெற்றுள்ளனர். பெரியளவான வித்தியசம் இல்லை என்பதால் இதில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (more…)