மந்தைக் கூட்ட ஆட்சேர்ப்பு July 23, 2009
Posted by Athiran in கவிதைகள்.add a comment
எனக்குத் தெரிந்ததை மட்டுமே
நீ செய்ய வேண்டும்.
யாரையும் எனக்கு
ஏற்றுக்கொள்ள முடியாது
நீ உன்னை
விட்டுவிட்டு வா
என்னிடம் வரும்போது!
வெற்று மனிதனாகவே வாழ்
அப்போது தான்
நீ என்னால் நிரப்படலாம்
இது கட்டாயமும் கூட.
உனக்கேன் அக்கறை வேண்டும்
உலகத்தை மாற்ற
எத்தனை பேர்
உனக்குக் கீழே இருக்கிறார்கள் சொல்.
எனக்குக் கீழே இருப்பவர்
கணக்கைக் கூட்டியே ஆகுவேன்.
நீயும் வா.
ஆனால் உன்னை
விட்டுவிட்டு வந்தால் மட்டுமே
உன்னையும் சேர்ப்பேன்
இந்த மந்தைக் கூட்டத்தில்.
மாற்றீடுக்கான சந்தர்ப்பமே இல்லை
நீ வெற்று வேட்டாக இரு.
அப்பொதுதான் என்போல்
ஒன்றுமில்லாதோரால்
இந்த நாசமறுத்த உலகில்
காலந்தள்ளமுடியும்.
23.07.09
வெறுத்துப்போனேன். May 5, 2009
Posted by Athiran in கவிதைகள்.2 comments
மனசே உனக்குத்
தெரிந்தவைதான் என்னுள்
இருக்கென்பதை நானறிவேன்.
வெறுப்பே வாழ்க்கையாய் போகிறதே.
நீ எதற்காக என்னை இம்சிக்கிறாய்.
குற்றம் செய்தவனாய்
நான் கூண்டில் நிற்கிறேன்.
கௌரவம் என்பதற்காக
எத்தனை வலியைத் தான்
தாங்கமுடியும் நீயே சொல்.
நாளைக்கே காற்றுப்போனால்
நாறிப்போகும் உடம்புக்காக
எத்தனை அகௌரவத்தனம்
வெளியில்.
நீ மட்டும் சுத்தமாயிருந்தால்
எல்லாம் நல்லதுதானே நடக்கும்.
யாரையும் காயப்படுத்தாத
வாழ்க்கையைத் தானே
சொல்லிக் கொடுத்திருக்கிறாய எனக்கு!
ஆனால் என்ன செய்யலாம்
தனக்கு குழியை
தானே தோண்டும் உலகத்தில்
யாரைத்தான்
உன்னால் காக்கமுடியும்.
மொட்டையடித்து வைத்திருக்கும்
மனச்சாட்சியின் ஒதுக்குப்புறத்தில்
காலம் கடத்தலாம்
என்றே நினைக்கிறேன்.
ஆனால் முடிவதாக இல்லை.
வெறுத்துப்போனேன்.
காலம் கற்பழித்துவிடுகிறது. April 23, 2009
Posted by Athiran in கவிதைகள்.Tags: அஸ்த்திவாரங்கள், கற்பனைகள், கற்பழிப்பு, காலம், சிந்தனை, நாளை, புதிய மனிதன், மனச்சாட்சி, வக்கிரங்கள், வாழ்வு, வைராக்கியங்கள், Life, Mind
2 comments
வாழ்வின் வைராக்கியங்களுக்காகவே
வக்கிரங்களை வளர்த்துக்கொண்டு
காலம் கடத்துகிறேன்.
காலம் கற்பழித்துவிடுகிறது
நம் சிந்தனைகளை
கட்டாயம் கவனமாக
இருந்தேயாகவேண்டும்
மாற்றானைப்பார்த்து.
மனசைப்பாத்துக்கத்
தெரிந்த எனக்கு
மற்றவரைப்பார்க்கத்
தெரியலையோ என்று கவலை.
இது வெறுந்தனமானது
என்று தெரிந்திருந்தும்
சிந்தனை சிக்கலில்.
வெடித்துச் சிதறப்போகும்
என் கற்பனைகளின்
கட்டுமானத்தை எப்படிக்காப்பது.
…………………..!
வழிதேடுகிறேன்.
…………………………
நிரந்தரமான ஒரு
கூட்டத்தை மாத்திரமே
வைத்துக்கொள்ள
கற்றுக்கொள்ள வேண்டும்.
மனச்சாட்சியின் குரலாய்
என்னுள்ளிருக்கும்
அத்தனை அஸ்த்திவாரங்களையும்
உடைத்தாக வேண்டிய
நிலைப்பாட்டை நான்
மாற்றி விடுகிறேன்.
நாளைக்கே
நான் ஒர் புதிய மனிதனாக
மாறிவிடுவதற்காக.
23.04.2009
கயாங்களின் பித்தலாட்டம். April 20, 2009
Posted by Athiran in கவிதைகள்.Tags: அன்பு, காயங்கள், பித்தலாட்டம்., வாழ்க்கை, Life, Mind, moon, normal life
1 comment so far
அடிக்கட்டைகளைத்தேடி
விறகு பொறுக்கிய
அந்த நாட்களில்
கால்களில் தான்
எத்தனை காயங்கள்.
காணாமல்போன
எனது வாழ்க்கையின்
நாட்களைத் தேடுகையிலும்
அப்படித்தான்.
நாளையை எண்ணி
வாழும் ஒவ்வொருவனும்
எத்தனை காயங்களுக்காய்
காத்திருக்கிறான்.
நாம் என்ன கட்டிக்கொண்டா
போகப்போகிறோம்
என்று சொல்பவனும்
இதிலிருந்து
விலக்கப்பட்டவனல்ல.
சொல்லாததை
சொல்வதற்காக மட்டும்
எமக்கிருக்கும்
பித்தலாட்டத்தனத்துடன்
காலம் கடத்துகிறோம்.
நாளிகைகளின்
உண்மைகளை உணராமல்
எம்மால் எதனைத்தான்
நடத்தி முடிக்க முடியும்.
சிந்திக்கலாமா??????…………..??????
20.04.2009
மடயனானவனே.! March 31, 2009
Posted by Athiran in கவிதைகள்.Tags: இருப்பு, கவலை, பிச்சைக்காரன், மடையன், மனம், முயற்சி, வாழ்க்கை, Lifeline, Mind, very long list, words
add a comment
வெறுப்புக்கே உரியதான முகத்துடன்
காலந்தள்ளும் எத்தனை பேர்
வாழ்கிறார்கள்.
காட்டிக்கொடுப்பும்
வெட்டுக் குத்தும்
எதற்குத்தான் பயன்படும்.
நாளைக்குக் காணாமல் போகும்
இல்லாமையை
புரிந்துகொள்ளத் தலைப்படாத
மனத்துடன் யாத்திரை செய்யலாமா?
மாதிரிகளான எமக்குள்
இருப்பதைத் தெரிந்து
யார்தான் இயங்குகிறோம்.
சோதிப்பிளம்பான
இருக்கையை தெரிந்து
கொள்ளமுடியாமல்
வனாந்தரத்தின்
இருட்டுக்குள்ளாலே இருக்கிறோம்.
சோற்றுக்கு லாட்டியடிக்கும்
பிச்சைக்காரனும்
இருப்பே கொள்ளாது
அலையும் வியாபாரியும்
வித்தியாசம்தான்.
சேற்றில் புரண்டு
சிரமத்தை சொர்க்கமாக
எண்ணும் விவசாயி போல்
யாரால்தான் வாழமுடியும்.
கால ஓட்டத்தில்
காணாமல் போக
விருப்பப்படாதவராய்
இயங்கமுடிந்தால் முயற்சிசெய்.
31.03.09
இருப்பை மாத்திரம் நம்பி! March 4, 2009
Posted by Athiran in கவிதைகள்.Tags: இருப்பு, இறுமாப்பு, எண்ணம்., ஒடுக்கப்பட்டவன்., கவிதை, குரல், குறுக்கு வழி, குழந்தை, கொள்கைகள்., சேலைத்தலப்பு, துயரம், நாளை, நிம்மதி, பிடிவாதம்., புத்தி, மனம், வெட்கம்.
4 comments
1.
மன எரிப்பின்
சோதிப்பிளம்பில்
கொட்டப்பட்டுக்கொண்டே
எரியும் கிடக்கைகள்.
வெட்கிக் குனிய வேண்டிய
எக்கொள்கைகள்
எதற்கெல்லாமோ பிடிவாதமாய்.
ஒடுக்கப்பட்டவனின்
குரலாய் ஒலிக்கும்
குறுக்குவழியில்லாத் தனம்
எனக்குமட்டுமா?
சேலைத் தலப்பை
பிடித்துக்கொண்டே தொடரும்
குழந்தையின் நோக்கமாய்
மாறிப்போனால் என்ன.
நாளையை மட்டுமே எண்ணி
எத்தனை காலத்தை ஓட்டலாம்,
இன்றை நினைத்து
நிரப்பி வைத்தவை
என்னதான் ஆகும்.
2.
இருப்பை மாத்திரமே நம்பி,
இறுமாப்பும் வெறுப்புகளும்
இருக்கிற பிடிப்புகளும்
இல்லாதவையே.
சோரம் போகாத மனத்தை
நிசப்தத்துள் வைத்து
தியானிக்கிறேன், எங்கோ,
அதற்கான நிம்மதி.
புத்தியின் மட்டுமானத்தை
எடுத்துக் கொள்ளமுடியாத அளவு
எதுவரைக்கும் நீளும்
சொல்லொணாத் துயரம்.
3.
தவழும் குழந்தையின்
சிரிப்புக்கு நிகரான சிந்தனை
கிட்டுமா என்ன?
காற்றே இல்லாத கணப்பொழுதுகளில்,
நித்திரை செய்து
வெறுமையைக் காணுமா மனம்,
4.
கொடுப்பினை இல்லாத
வாழ்க்கையில் ஏனிந்த
நம்பிக்கையோ?.
குருவிக் கூடு கலைத்து…….! February 18, 2009
Posted by Athiran in கவிதைகள்.Tags: alert, bired, brother, ChildLine, Connect, emergency, EMOTIONAL, family focused, father, GENDER WELLNESS, helping, Life, Lifeline, long-term treatment, mother, normal life, peace, personal medical, physical needs, prevent, response, sister., spiritual, Tamils
add a comment
என் குடி முழ்கிப்போனது
என்னால் இனி….?
ஒரு அழுகுரல்
என்காதுகளில் கேட்டவண்ணமிருக்கிறது.
இதனை
நீண்ட வனாந்தரத்திலல்ல
என் வாழ்பரப்பான நகரங்களில்
…………………
சாதாரணமாகக் கேட்கிறேன்.
இது எப்படி நிகழ்ந்தது.
குடிசைகளிலும்
வயல் வரம்புகளிலும்
எந்தவித தடையும் இடைஞ்சலுமின்றி
வாழ்வு நடத்திய மக்கள்
பாதுகாப்பினர் கடும்செயலால்,
கொடுமையான
குரவிக்கூடு கலைப்பினால்
குலைந்து போயினர்.
நாட்களை எண்ணி உழுது விதைத்து
நீர்பாய்ச்சி குருவி கலைத்து
கண்விழித்து காவல் பார்த்து
அறுத்து அறுவடைசெய்து
சாக்குகளில் பக்குவமாகக்கட்டி
சேர்த்த நெல்லை வீட்டுப்பரண்களில்
அடுக்கி வைத்து அழகுபார்த்து
தினமும் உண்டவர்கள்,
பட்டினியால் முடியாமல்
கையில் கபோதிகளாய்
தட்டேந்தி வாய் பார்த்து
உண்டி கழுவும் நிலை
எதனால் வந்தது.
கொங்சம் கூட
மனிதராய் நினைக்காத
மனம் படைத்தவர்களை
எப்படி நம்பி காலம் கடத்துவது…
பாரம்பரியம் பண்பாடு
என்று வாழ்ந்த
பண்ணையாரின் வார்த்தையல்ல
அன்றாடம் பண்ணையில்
பால் கறந்து ஆறு, குளத்தில்
மீன்பிடித்து கறி சமைத்து
உண்டு வாழ்ந்த குடிமகனின்
அடிமன ஆதங்கம்.
எதற்காக இந்தக் கொடுமை
இடம்பெயர்ந்து
எமது வீடுகளை விட்டு
வாழத்தான் வேண்டுமா?
சாவு நிச்சயம் அதற்கு
கொடுமைகள் சாதாரணமா?
குடிசை வீட்டில் நிம்மதியாக
சொத்து சேர்த்து பிள்ளைகளுக்கு
உணவு ஊட்டி மகிழ்ந்;த
செந்தங்கள் பிள்ளைகளின்
வயிற்றை நிரப்ப பந்தியி;ல்
ஏந்த வேண்டிய காலம் ஏன் வந்தது.
யாருக்காகவும் எதனையும்
விட்டுக்கொடுக்காத
சுதந்திரமான சிந்தையுடைய
கொடூரர்களின் செயலால்
காலஓட்டத்தை கட்டுப்படுத்த
முடியாதவரானோம்.
காலம் கொடிது
அதனிலும் கொடிது சொந்தநாட்டில்
ஏதிலிகளாய் வாழ்தல்.
குருவிபோல் சேர்த்ததெல்லாம்
காணாமல் போனது கண்முன்னால்
என் சேர்க்கைகளில்லா
பாலைவனம் போன்ற
என் வீட்டைப் பார்க்கிறேன்.
நான் என் கைகளில் மனதில்
தெம்பே யில்லாமல் போனேன்.
15.11.2007
கல்லான மனசு. February 11, 2009
Posted by Athiran in கவிதைகள்.Tags: beach, Dream on, heart, human, Interpretations, moon, river, sea, Sun setting, Sunset, waves, world's only
add a comment

1
சொடுக்கெடுக்கும் அந்தக் கைகளில்
எனக்கிருக்கும் அன்பை எப்படி
எடுத்துரைப்பேன்.
சாதகத்தை நம்பும் சோதரத்தின்
துயரத்தின் வண்ணங்கள்
எத்தனை எத்தனை!!
2
சோகத்தின் வரிகளை எண்ணியபடி
வாழ்தலை அனுபவிக்கலாமே.
வாருங்கள் என்னோடு சேர்ந்து
படித்தும் பார்க்கலாம்.
நிச்சயமாக நிம்மதி கிடைக்காது
முடியுமா உங்களுக்கு.
மடிந்திருக்கும் என் மறுபக்கத்தின்
வாசிப்பை மாத்திரமே தேடும்
என் சுற்றங்களுக்கு….
தெரியாததொன்றுமில்லையோ?,
போர்த்தியே வைத்திருக்கிறேன்
பார்க்கலாம்…….
என்றெல்லாம் சொல்லிவிட மாட்டேன்.
முயலுங்கள் முடியாததிருக்குமா என்ன?
3
ஓற்றையான அந்தச் சிறுவனுக்கு
ஏனிந்த குரட்டுப்புத்தி
மகிழ்ச்சியை அனுபவிப்பதில் தான்
அவனுக்கேன் அத்தனை வெறுப்பு.
கேள்வி கேட்கிறேன் உள்ளேயிருக்கம்
பதில் மாத்திரம் வருவதாகவேயில்லை.
ஏத்தனை கல்லான மனசு.
கள்ளமற்ற அவனுக்கு அப்படியிருந்தால்
நானும் அப்படியா?
11.02.2009.
நீண்ட இரவு நிலா. January 28, 2009
Posted by Athiran in கவிதைகள்.Tags: pome, Sleeping, train traveling, Windows
add a comment
மல்லாந்து படுத்திருக்கிறேன்
ரயிலின் யன்னல் கம்பிகளினு}டு
அசைந்து கொண்டே
நகரும் அரை நிலா,
இந்த நிலா வளர்கிறதா? தேய்கிறதா?
எனக்குள்ளான கேள்வி.!
நீண்ட இரவின் நித்திரையை
நீட்டியே வைத்திருக்கும்
து}ரத்திலிருக்கும்
என்னவளின் நினைவுகளுக்குள்
யாத்திரை செய்கிறேன்
என்னை அவள் நிச்சயமாக
கட்டியணைத்திருக்கிறாள்.
07.11.2008
வீழ்த்த முடியுமா? January 28, 2009
Posted by Athiran in கவிதைகள்.Tags: Love, Moon mind, pome
add a comment
ஒரு கருப்பு இரவில்
கொட்டிக்கிடக்கும்
நட்சத்திரத் துகள்களிடையே
கண்களை மூடியிருக்கிறேன்.
து}க்கமேயில்லை
நிம்மதியான என் மனம்
ஆலயத்தின் கொடிக் கம்பத்தைச்
சுற்றியிருக்கும் கொடியாக!
கடித உறையுள் மடித்து
வைக்கப்பட்டே இருக்கையில்
எதனைத்தான் வாசிக்கமுடிகிறது.
சொட்டையான இருண்ட
மொட்டைத்தலையில் ஏன்
விண்மீன்கள் ஒட்டப்பட்டன.
வேட்டைக்காரனைப் பிடித்து
குறி பார்க்கச் சொல்கிறேன்
அவனால் வீழ்த்தமுடியுமா?
16.10.2008.
எதுவுமேயில்லை.!!!!!. September 29, 2008
Posted by Athiran in கவிதைகள்.Tags: aim, feeling, forest, Life, Mind, tamil poem, very long list
add a comment
போக்கணம் கெட்ட
வாழ்க்கை வாழ யாருக்குத்தான்
விருப்பம் வரும்.
விதிவிலக்கு சித்தனுக்கிருக்குமா?
கட்டவிழ்த்துவிட்ட
முரட்டுக் காளைபோல் மனம்
குதர்க்கமாய் அலைகிறது.
காலம் கடந்து கிடைக்கும்
ஞானமாய் அத்தனையும்
சித்திக்கலாம்.
அதற்குள் நிரப்பிவிடப்படும்
முழுமையை அனுபவிக்கிறேன்.
யோசனைகளின் து}ரத்தில்
நின்றுகொண்டிருக்கும்
யாருக்கும் எட்டிப்பிடிப்பதற்கு
முடியாமல்தான் இருக்கும்
என்பது எனக்கு
அப்போதும் விளங்கியது.
ஆனாலும் ………. எதுவுமேயில்லை.!!!!!.
மலைக்காட்டில் அந்த
ஏற்ற இறக்கங்களில்
இருப்பதையெல்லாம் படித்துப்பார்த்து
மனக்கனத்தை உணர்ந்து
சுவைக்கலாம்.
வெற்றி பெற்ற வெறித்தனத்தை
அது நினைவூட்டும். கட்டாயமாக.
29.09.08
காணாமல் போனவை.; September 2, 2008
Posted by Athiran in கவிதைகள்.Tags: Circle, Count, Created, crime, Deadly Shadows, Dictionary.com, drama, dream of leading, fantasy, first-person, normal life, poem, Thief
1 comment so far
ஒற்றையடிப் பாதையில்
சம்மட்டியால் செம்மையாய்
வாங்கும் வழிப்பறித் திருடன் போல் நீ.
வெறிப்பிடித்த குரங்காய்
பாய்கிறதோ உன் மனம்?
உன்னிடம் பதில் இருக்கிறதல்லவா
சொல்லி முடித்து விட்டேன்
யாருக்கும் உபத்திரவமில்லாமல்.
சோவென்ற மழையில்
நனைந்தாயானால்
அந்த சுகத்திற்கு உன்னை
விற்றே விட்டிருப்பாய்
ஒரு முறை நனைந்து பாரேன்!
வெட்கம் கெட்ட தனமாய்
அலைந்து திரிகிறாய்
ஆரவாரங்கள் எத்தனை
நாட்களுக்குத்தான் இருக்கும்.
வேலையற்றவனின் வெட்டிப் பேச்சாய்
கரைந்து செல்கிறது சுகம்,
காணாமல் போனதாய்
நீயெண்ணும் அத்தனையும்
உன்னிடமே
அத்திவவாரமிட்டிருக்கின்றன…..!
அவசரப்படாதே அமைதிபடு.
18.08.08

















