சத்துருக்கொண்டான் படுகொலையின் 19ஆவது நினைவு October 6, 2009
Posted by Athiran in சிவராம், செய்திகள், தொகுப்புகள், புகைப்படங்கள்.Tags: Amparai, Batticaloa, East, News, Sathurukondan massacre, Sri Lanka, Trincomalee
add a comment
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினப் படங்களை எனக்கு இப்போதுதான் பதிவேற்றம் செய்யமுடிகிறது என்பதற்குக் கவலை கொள்கிறேன். சத்துருக்கொண்டான் படுகொலை என்றவுடன் எனக்கு அந்தப் படுகொலை குறித்து ஞாபகம் வருகிறதோ இல்லையோ என்னுடைய பத்திரிகைத்துறை ஆசிரியர் அனைவராலும் தராக்கி என அழைக்கப்படுகிற சிவாராம் பற்றியே ஞாபகம் வரும்.

நான் மட்டக்களப்பில் தினக்கதிர் பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளனாக வேலை செய்து கொண்டிருந்த வேளை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசிப் பகுதியில் ( திகதி சரியாக ஞாபகத்தில் இல்லை) தினக்கதிரின் ஆசிரியராக இருந்த றுசாங்கன் அண்ணா ஒரு வாரமளவில் கொழும்புக்குச் சென்றிருந்தார். அப்போது சிவராம் என்னை அழைத்து சத்துருக்கொண்டான் படுகொலை பத்தாவது ஆண்டு வருது அது பற்றி ஒரு கட்டுரை எழுது என்று சொன்னார்.
அன்றைய நாளே சைக்கிளை எடுத்துக் கொண்டு சத்துருக்கொண்டான் புறப்பட்டேன். அப்போது எனக்கு சத்துருக் கொண்டான் படுகொலை என்பது ஒன்று நடந்ததாக மட்டுமே தெரியும். ஆனாலும் எனக்கிருந்த துடிப்பு அதைப் பற்றி முழுதாக எழுதி விட வேண்டும் என்று தூண்டி விட்டது. என்பதை விடவும் அவர் (சிவாராம் என்று அவருடைய பெயரை மரியாதை கருதி அடிக்கடி உச்சரிப்பதில் எனக்கு இஸ்டமில்லை என்பதால் அவர் என்று குறிப்பிடுகிறேன்) சொல்லியது எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுத்தது.
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாளான 09.09.க்கு முதல் நாள் நான் எழுதிய கட்டுரை பக்க வடிவமைப்பு முடிந்த வேளை அதனை வாசித்துப்பார்த்த அவர் இன்னமும் போதாது மீண்டும் அங்கு போய் தகவல் திரட்டு என திரும்பவும் சத்துருக்கொண்டான் அனுப்பினார்.
றுசாங்கன் அண்ணா வரும் வரை தினக்கதிரின் பிரதான வேலைகளை அவரே பொறுப்பேற்று நடத்தினார். அந்த குறிப்பிட்ட நாட்களில் எங்களுக்கு அவர் பல விடயங்களை கற்றுத் தந்தார்.
அது போல அவர் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வரும் போதெல்லாம் எங்களுடைய தினக்கதிர் அலுவலகத்திற்கு வருவது வழக்கம்.
அவருடைய பக்குவப்படுத்தல்கள் உண்மையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு பத்திரிகையாளனை உருவாக்குவார் என்பதனைக் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. ஊக்கப்படுத்துவதும் கற்றுக் கொடுப்பதும் ஒரு பத்திரிகை ஆசிரியரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
சத்துருக்கொண்டான் படுகொலை போல பல விடயங்கள் அவருடன் இணைந்து செய்யப்பட்டிருந்தாலும் அவருடைய நினைவுகள் மீட்கும் போது சத்துருக் கொண்டான் படுகொலை வந்து விடுகிறது.
சிவராம் பற்றி அவருடைய மறுபக்கம் பற்றித் தெரிந்தவர்கள் முன்வைக்கி்ன்ற விவாதங்கள் எனக்கு இரண்டாம் பட்சமானவை எனக்குத் தெரிந்தவகையில் ஒரு பத்திரிகைக்காரனாகவே அவரைத் தெரிந்து கொண்டேன். அவ்வாறு இறந்தும் போனார் நினைத்துப் பார்க்கையில் நிச்சயமாக அவருடைய நினைவுகள் நிசப்தமாகா நிஜங்களாகவே இருக்கின்றன.
மிகுதிப்படங்களைப் பார்க்க
சத்துருக்கொண்டான் படுகொலை 19ஆம் ஆண்டு நினைவு தினம் September 9, 2009
Posted by Athiran in செய்திகள்.Tags: 90ஆம்ஆண்டு செப்ரம்பர் 9, கொக்குவில், சத்துருக்கொண்டான், சத்துருக்கொண்டான் படுகொலை, சின்னஊறணி, பனிச்சையடி, பிள்ளையாரடி, மட்டக்ளப்பு
add a comment
மட்டக்ளப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டானில் 1990ஆம்ஆண்டு செப்ரம்பர் மாதம் 9ஆம்திகதி படுகொலை செய்யப்பட்ட 188 பொதுமக்களின் நினைவு தின நிகழ்வு சத்துருக்கொண்டான் பனிச்சையடியிலுள்ள படுகொலை செய்யப்பட்வர்களின் நிiவாக அமைக்கப்பட்டுள்ள தூபிக்கருகில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அனைத்துப் பெர்துமக்களையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்னர். ஆம்ஆண்டு செப்ரம்பர்9ஆம்திகதி பனிச்சையடி, கொக்குவில், சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, சின்னஊறணி ஆகிய கிராமங்களைச் சோர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் 188பேர் ஆயுத முனையில் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களைப் படுகொலை செய்தது இராணுவம் மற்றும் ஊர்காவல் படையினர் இணைந்த கூட்டணியினர் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் இது தொடர்பிலான குற்றவாளிகளாக யாரும் தண்டிக்கப்பட்வில்லை. இந்நிலையில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டு 19 வருடங்கள் நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பனிச்சையடிச் சந்தியில் அமைந்துள்ள தூபிக்கருகில் நினைவுக்கூட்டம் நடைபெறுவதுடன், இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
சர்வதேச தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகளைக் குறைக்குமாறு இலங்கை அரசு அறிவிப்பு July 9, 2009
Posted by Athiran in செய்திகள்.add a comment
இலங்கையில் செயற்பட்டுவரும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களை அவற்றின் செயற்பாடுகளைக் குறைக்குமாறு இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
இதற்கு ஏற்ப கிழக்கிலுள்ள தனது முக்கியமான நான்கு கிளைகளை மூடி வீடுவதற்கு செஞ்சிலுவைச் சங்கம் முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. கிழக்கில் மாத்திரம் 150 வரையான பணியாளர்கள் செங்சிலுவைச் சங்கத்திற்குப் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் யுத்தம் நடைபெறும் காலத்திலேயே தேவைப்பட்டதாகவும் அதற்கான தேவை யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தேவையற்றதாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவித்தலை இலங்கையின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமர சிங்க விடுத்திருக்கிறார். அரசாங்கத்தின் இந்த முடிவால் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய நிறுவனங்களில் செஞ்சிலுவைச் சங்கம் முதன்மைனயானது. இதே நேரம் இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர நேர்ந்த சுமார் மூன்று லட்சம் மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப் பொருட்களுக்கான பெரும் தேவை இருப்பதாகவும், அந்த மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப உதவிகள் தேவைப்படுவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் அவர்களுடைய தேவைகள் குறத்து தாம் செயற்படப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுக்கள் நடத்தி வருவதாக ஜெனிவா தலைமையகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதே Nநுரம் அரசாங்கங்களுடன் இணைந்து செய்ற்ட:டு வரும் அமைப்பான நாங்கள் இலங்கையை விட்டுப் போகப் போவதில்லை தேவையாக உள்ள அனைத்து விடயங்களுக்காகவும் நாங்கள் செயற்பட விருக்கிNறூம் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தபணியாளர் குறைப்பு நடவடிக்கைகளின் பின்னர் எத்தனை பேர் இலங்ககையில் இருப்பார்கள் போன்ற கருத்துக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
SAJA Journalism Awards 2009 March 20, 2009
Posted by Athiran in செய்திகள்.Tags: SAJA Journalism Awards 2009, SAJA's 15th Anniversary Convention
add a comment
SAJA Journalism Awards 2009
Deadline extended to Monday, March 23, 11 pm EST
Winners announced SAJA’s 15th Anniversary Convention, July 10-11, 2009 in NYC.
Note two new awards:
* Outstanding piece or series covering the Mumbai Attacks: All media
* Outstanding piece or series covering the conflict in Sri Lanka: All media
Direct all questions to Jigar Mehta, awards chair and SAJA board member: mehta@nytimes.com (subject line = “SAJA Awards”)
Awards Homepage: http://saja.org/programs/awards
ONLINE SUBMISSION FORM: http://bit.ly/sajaawards09 (more…)
வீரமுனை படுகொலை நினைவாக நினைவுத்தூபி August 13, 2008
Posted by Athiran in செய்திகள்.Tags: Amparai, Batticaloa, East, News, police, Sri Lanka, Tamil Nation, Tamils, Trincomalee, Veeramunai massacre
add a comment
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு வீரமுனை படுகொலை நினைவாக நினைவுத்தூபியொன்று செவ்வாய்க்கிழமை காலை (12.08.08) காலை ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி நினைவுத்தூபியைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
1990.-8-.12 ஆம் திகதி வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து இனவெறியர்கள் நடாத்திய காட்டுத்தர்பாரில் 55 தமிழர்கள் கொல்லப்பட்டமையை நினைவு கூரும் 18 ஆவது ஆண்டு நிறைவு செவ்வாய்க்கிழமை அனுஸ்ட்டிக்கப்பட்டது. (more…)
கல்முனையில் மெத்தை வியாபாரிகள் மூவர் சுட்டுக் கொலை July 10, 2008
Posted by Athiran in செய்திகள்.Tags: Amparai, Army, Batticaloa, East, News, police, Sri Lanka, STF, Trincomalee
add a comment
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவில் வியாழக்கிழமை (10.07.08)காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் இரத்தினபுரி மாவட்டம் மாவத்ததகம எஸ்.யூ. இந்திக்க ஜயசேன (23) வி.பிரேமகுமார (24) ஏ.நாமல் புத்திக்க (22) என்ற பெயருடைய மெத்தை வர்தத்தகர்கள் மூவர் கல்முனை குவாரி வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். (more…)
66 தொழிற்சங்கங்களின் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் நாளை வேலை நிறுத்தம். July 9, 2008
Posted by Athiran in செய்திகள்.Tags: Amparai, Batticaloa, colombo, East, FMM, Jornalist, News, Sri Lanka, Trincomalee
1 comment so far
66 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் அங்கத்தவர்களும் இன்றைய வேலை நிறுத்தத்தில் குதிப்பர் என தொழிற்சங்க இணைச் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். (more…)
மட்டு. ஏறாவூர் பொலிஸ் நிலையம் முன்னால் பொலிஸ் ஜீப் மீது கிளைமோர் தாக்குதல் July 3, 2008
Posted by Athiran in செய்திகள்.Tags: Amparai, Batticaloa, East, News, Sri Lanka, Trincomalee
add a comment
மட்டக்களப்பு ஏறாவூர் புகையிரத நிலையத்தின் முன்னால் பொலிஸ் ஜீப் வண்டியை இலக்கு வைத்து வியாழக்கிழமை இரவு 8.20 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சைக்கிள் கிளைமோர்த் தாக்குதலில் 3 பொலிசாரும் 2 பொதுமக்களும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு 8.15 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் வண்டியில் ஏறாவூரிலிருந்து பயணிக்கும் பயணிகளை சோதனையிடுவதற்காகச் சென்ற பொலிசாரை இலக்கு வைத்தே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தினமும் 7 முதல் 8 பொலிசார் இவ்வாறு இரவு சென்று புகையிர நிலையத்தில் பயணிகளைச் சோதனையிடுவது வழக்ககமாகும். இன்றும் இவர்கள் சென்ற வேளை ஏறாவூர் எல்லை வீதி சந்திக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் ஜீப் வண்டி பலத்த சேதத்திற்குள்ளானதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஏறாவூர் மாவட்ட வைத்திசாலையில் அனுமதிக்கபபட்டு அவசர சிகிச்சைகள் நிமித்தம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் மட்டக்களப்பிலிருந்து புறப்பட்ட ரயில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
தாக்குதலைத் தொடர்ந்து இப்பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகயில் பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பில் கடந்த மூன்று தினங்களில் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது July 3, 2008
Posted by Athiran in செய்திகள்.Tags: Amparai, Army, Batticaloa, Earvur, East, News, Sri Lanka, Trincomalee
add a comment
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக பொலிசாரும் விசேட அதிரடிப்படையினருமு; கூட்டாக இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்புத் தேடுதல்களில் 15க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அரசடி, தாமரைக்கேணி, தாண்டவன்வெளி, மட்டக்களப்பு நகரப்பகுதி, புது முகத்துவாரம் பிரதேசம், உள்ளிட்ட பகுதிகளில் இத் தேடுதல் நடைபெற்றுள்ளது.
மட்டக்கப்பின் பல பிரதேசங்களில் தொடர்ந்தும் பெருந் தொகையான இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வருவதுடன் பிள்ளையான தரப்பினரும் பெருந் தொகையான இளைஞர்களை கடத்திச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான கைதுகளால் மட்டக்களப்பு பிரதேசங்களில் பதற்றம் நிலவுகின்றது.
மட்டக்களப்பின் அனைகமான வீதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்க்படப்டு பொலிசாரும் படையினரும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப்பிரதேசங்களிலும் சோதனைச் சாவடிகளும் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சரின் உறுதி மொழியை அடுத்து மட்டு. வேலையற்ற பட்டதாரிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு June 26, 2008
Posted by Athiran in செய்திகள்.Tags: Amparai, Batticaloa, East, News, Sri Lanka, Trincomalee
add a comment
அரச நியமனம் வழங்கக்கோரி மட்டக்களப்பு கல்வி அலுவலகத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வேலையற்ற பட்டதாரிகள் தமது போராட்டத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சரின் உறுதிமொழியை அடுத்து கைவிட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை உண்ணாவிரதப் போராட்டத்தினை வேலையற்ற பட்டதாரிகள் ஆரம்பித்திருந்தனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் அன்றிரவு 11 மணியளவில் நேரடியாகச் சென்று வழங்கிய உறுதிமொழியினையடுத்தே வேலையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட்டுள்ளனர்.
வேலையற்ற அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவேண்டும் என்னும் கோரிக்கையினைத் தாம் ஜனாதிபதியிடம் நேரடியாகச் சென்று பேசி இவ்விடயத்தில் நல்ல தீர்வினைப் பெற்றுத் தருவதாக முதலமைச்சர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கொடுத்த வாக்குறுதியில் நம்பிக்கை வைத்தே செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியுடன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் இருந்த இழுபறி நிலைக்கும் முடிவு காணப்படவுள்ளது. நேர்முகப் பரீட்சையின் ஊடாக ஆசிரியர் நியமனம் பெறத் தகுதி பெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க முடியாத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன.
படையினரின் கெடுபிடியால் களுதாவனள மக்கள் பயமும் பீதியுடனும் உள்ளனர் – கூட்டமைப்பு எம்.பி. June 26, 2008
Posted by Athiran in செய்திகள்.Tags: Amparai, Batticaloa, East, News, Sri Lanka, Trincomalee
add a comment
களுதாவளையில் அரசுப் படையினரால் இரு அப்பாவி குடும்பஸ்தர்கள் படுகொலை செய்யப்பட்ட தன் மூலம் அங்கு படையினரின் கொடூரச் செயல்கள் தொடர்வது நிரூபிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் த.கனகசபை எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
களுதாவளையில் ஞாயிற்றுக்கிழமை அரச படையினரால் எந்தவொரு சம்பவத்திலும் ஈடுபடாத இரண்டு அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டும் இருபது பேருக்கு மேற்பட்டோர் காயமுற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாக்கப்பட்டுமுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு எனது தலையீட்டினால் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன் தாக்குதல் இடம்பெற்ற இடத்திற்கு அருகிலுள்ள வீடுகளுக்குள் புகுந்த படையினர் வீட்டிலுள்ள பொருட்களையும் சேதமாக்கியுள்ளனர்.
படையினரின் இத்தகைய அத்துமீறிய செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது கவலையையும் தெரிவிக்கின்றேன்.
படையினரின் இவ்வாறான செயலினால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றமும் பீதியுமடைந்துள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
இச்சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுவதை நிறுத்த வேண்டும்.
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்த மற்றும் வீடுகள், பொருட்கள் சேதமாக்கப்பட்டமைக்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகதிகள் மற்றும் புனரமைப்பு அமைச்சரின் செயலாளர் மற்றும் அரச அதிபரிடம் கேட்டுள்ளேன்.
எனவே, கிராம அதிகாரிகள் மூலம் பிரதேச செயலாளரிடம் விண்ணப்பிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்து தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம் June 26, 2008
Posted by Athiran in செய்திகள்.Tags: Amparai, Batticaloa, East, News, Sri Lanka, Trincomalee
add a comment
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து நாட்டுத் தூதுவர் திருமதி ரூத் பிலின்ட் புதன்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரனைச் சந்தித்து மாநகர சபை மண்டபத்தில் கலந்துரையாடினார். அமெரிக்க இலங்கை மிசனுக்கு விஜயம் செய்த சுவிஸ் தூதுவர், அமெரிக்க மிசன் தலைவர் கலாநிதி எஸ்.ஜெயநேசனுடன் பேச்சு நடத்தினார்.
சமாதானக் குழுத் தலைவர் அருட் தந்தை மில்லர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வதிவிடப் பிரதிநிதி உட்பட சர்வமத அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசினார்.
இவரது சந்திப்புக்களின் போது தற்போதைய சமாதான நடவடிக்கைகள், சுனாமி மற்றும் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள், மீள் குடியேற்றம் உட்பட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.
இவரது வருகைக்குச் சில தினங்களுக்கு முன்னர் சமாதான செயலகப்பணிப்பாளர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து உரையாடியிருந்தார்..

















