11.03.09 செய்தியரங்கம் March 12, 2009
Posted by Athiran in பி்.பி.சி. செய்தித் தொகுப்புகள்.add a comment
இந்திய மருத்துவ குழு திருகோணமலை சென்றுள்ளது
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்
இலங்கை வந்துள்ள இந்திய மருத்துவ உதவிக் குழு திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையைச் சென்றுள்ளது.
இலங்கையின் வடக்கே இடம்பெற்றுவரும் மோதல்களினால் இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் மக்களுக்கான மருத்துவ வசதிகளை வழங்குவது 52 பேர் கொண்ட இந்திய மருத்துவ குழுவின் நோக்கம். (more…)
11.03.09 செய்தியறிக்கை March 12, 2009
Posted by Athiran in பி்.பி.சி. செய்தித் தொகுப்புகள்.Tags: 1992ல், அரசியல், இஸ்லாமாபாத், கூட்டங்களுக்கு, கோபன்ஹெகனில், சதாம் ஹுசைன், ஜெர்மனி, டென்மார்க், தாரிக் அஜீஸு, தாரிக் அஜீஸ், நவாஸ் ஷெரீஃப், பஞ்சாபிலும் சிந்திலும், பர்வேஸ் முஷாரஃப்ப, பாகிஸ்தானின், பாக்தாத் நீதிமன்றம், பொலிசார், மரண தண்டனை, வழக்கறிஞர்களும், வினிண்டென்
add a comment
பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக சுட்டிருந்தான் அந்தத் துப்பாக்கிதாரி
ஜெர்மனியில் பதின்ம வயது மாணவனின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 16 பேர் பலி
ஜெர்மனியில் நிறைய பேரை சுட்டுக்கொன்ற ஓர் பதின்ம வயது துப்பாக்கிதாரியை பொலிசார் சுட்டுவீழ்த்தியுள்ளனர்.
பி.பி.சி. தமிழ் 10.03.09 செய்தியரங்கம் March 11, 2009
Posted by Athiran in பி்.பி.சி. செய்தித் தொகுப்புகள்.Tags: அமைச்சர்கள், இலங்கை, சீனா, சுயாட்சி, தற்கொலைத் தாக்குதல், தலாய் லாமா, திபெத், பள்ளிவாசல், பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண், மீலாத் விழா, வட அயர்லாந்து
add a comment
இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; குறைந்தபட்சம் 14 பேர் பலி
இலங்கையின் தென்மாகாணத்தில் அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்த ஓர் முஸ்லிம் விழாவிலே நடந்த ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில், இலங்கையின் மாத்தறை கொடபிட்டியவில் அமைந்துள்ள அக்குரஸ்ஸ பகுதியில், ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் மீலாது நபி விழாவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் ஒருவர் உட்பட 46 பேர் காயமடைந்திருக்கின்றனர். (more…)
பி.பி.சி. தமிழ் 10.03.09 செய்தியறிக்கை March 11, 2009
Posted by Athiran in பி்.பி.சி. செய்தித் தொகுப்புகள்.Tags: அபு கிரெய்ப், அஸ்ஸாம் லக்ஷ்மி ஒராயன், இந்தியா, இராக், ஏற்றுமதி, கவுஹாத், கிளர்ச்சிக்காரர்கள், சீன உற்பத்தி நிறுவனங்கள், சீனப் பொருளாதாரம், தற்கொலை குண்டுதாரி, தேசிய ஒற்றுமை, தேசிய மக்கள் காங்கிரஸ், பழங்குடியினத் தலைவர்கள், பாக்தாத், பி.பி.சி. தமிழ், பிரிகேடியர் ஜெனரல் எட்மண்ட் ரசொலொமஹண்ட்ரி, மடகாஸ்கர் அதிபர் மார்க் ரவாலோமனானா, மடகாஸ்கர் இராணுவம், மலைவாசிப் பெண், வடகிழக்கு
add a comment
மடகாஸ்கர் நெருக்கடியைத் தீர்க்க அரசியல் தலைவர்களுக்கு இராணுவம் காலக்கெடு
மடகாஸ்கரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்க்க அந்நாட்டின் சிவிலியன் தலைவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை வரையிலான ஒரு காலக்கெடுவை அந்நாட்டின் இராணுவத்தின் தலைவர் வழங்கியுள்ளார்.
அடுத்த எழுபத்து இரண்டு மணி நேரத்தில் தீர்வு எட்டப்படவில்லை என்றால் தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையில் தேச விவகாரங்களை முன்னெடுக்கும் பொறுப்பை இராணுவம் ஏற்கும் என்று பிரிகேடியர் ஜெனரல் எட்மண்ட் ரசொலொமஹண்ட்ரி கூறினார். (more…)
பி.பி.சி.யின் 09.03.2009 செய்திகள். March 10, 2009
Posted by Athiran in பி்.பி.சி. செய்தித் தொகுப்புகள்.Tags: அகதிகள், அதிபர் பராக் ஒபாமா, அதிபர் ஹூ ஜிண்டாவு, அமெரிக்க அரசு, இலங்கை, கம்யுனிஸ்ட் கட்சி, குருத்தணு பரிசோதனை, சீனா, பரிசோதனைகள், மனித கருவில்குருத்தணு, யூடியூப், stemcell
add a comment
செய்தியறிக்கை
குருத்தணு பரிசோதனை தடையை அதிபர் ஒபாமா விலக்கியுள்ளார்
மனித கருவில்குருத்தணு (stemcell) பரிசோதனைகள் செய்வதற்கு அமெரிக்க அரசு விதித்திருக்கும் தடையை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றிய ஒரு அறிவிப்பை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ளார். 
மனிதக் கருக்களை இத்தகைய பரிசோதனைகளில் பயன்படுத்துவது, தார்மீக அடிப்படையில் தவறானது என்று எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு ஓரளவு முகம் கொடுக்கும் வகையில், அதிபர் ஜார்ஜ் புஷ்ஷால் 2001ல் இந்தத் தடை விதிக்கப்பட்டது.
அல்ஸெய்மர்ஸ் , பார்க்கின்ஸன்ஸ், மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு சிகிச்சை வழங்குவதில் புதிய முன்னேற்றத்துக்கு அதிபர் ஒபாமாவின் இந்த நடவடிக்கை இட்டுச்செல்லும் என்று நம்பப்படுகிறது. (more…)

















