பேசும் தாரகை

நீதிமன்றம் தீர்மானிக்கப் போகும் ஷிலேயாவின் ஜனாதிபதிப் பதவி
ஹொண்டுராஸ் நாட்டின் நாடுகடத்தப்பட்ட மானுவெல் ஷிலேயா செப்டம்பர் மாத இறுதியில் மீண்டும் நாட்டுக்குள் வந்தவு டன் அங்குள்ள பிரேஸில் தூதரகத்தினுள் தஞ்சம் புகுந்தார். எப்படியும் மீண்டும் ஆட்சியில் அமர்வேன் என்று உறுதியாக இருக்கின்ற ஷிலோயா விடாமுயற்சியுடன் இருக்கிறார்.

இந்நிலையில் ஹொண்டுராஸில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பின்பே பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மனுவல் ஷிலேயாவை மீண்டும் பதவியில் அமர்த்துவது தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என அந்நாட்டு காங்கிரஸ் இந்தவாரத்தில் தெரிவித்தது.

இம்மாதம் 29 ஆம் திகதி இங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற பின்னர் டிசம்பர் 2 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத் தொடரிலேயே ஷிலேயாவை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்து தீர்மானிக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் ஜோஸ் சாவேட்ரா கூறியிருக்கிறார்.

இதே வேளை தேர்தலுக்குப் பின்னர் ஜனவரி மாதம் புதிய ஜனாதிபதி பதவியேற்பார். அதுவரை ஷிலேயாவை மீண்டும் பதவியில் அமர்த்துவதா இல்லையா என்பது குறித்து உயர்நீதிமன்றம் அடுத்தவாரம் வழங்கவுள்ள தீர்ப்பே தீர்மானிக்கும் என்றும் தெரிகிறது.

இந்தவருடம் ஜூன் 28 இல் ஹொண்டுராஸில் இராணுவப் புரட்சி ஏற்பட்டு பதவி கவிழ்க்கப்பட்ட ஷிலேயா உடனடியாகவே கோஸ்டாரிகாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து ரொபேர்டோ மிச்செலெற்றி தலைமையிலான இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது.

நிலைமை இவ்வாறிருக்க ஹொண்டுராஸ் நாட்டின் அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமெரிக்க மத்தியஸ்தத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை ஷிலேயாவை மீண்டும் பதவியில் அமர்த்துவது குறித்து காங்கிரஸில் வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டுமெனக் கோரியிருந்தது.

இதற்கான பதில் கொடுக்கும் வகையிலேயே வாக்கெடுப்பை பிற்போடுவதற்கு காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் மீண்டும் பதவிக்கு வருவதற்கான ஆலோசனையை நிராகரித்துள்ள ஷிலேயா தனது ஆதரவாளர்கள் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஷிலேயா தொடர்பில் அக்கறை எடுத்துக் கொள்கிற மேற்குலகம் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையினை அமுல்படுத்துவதில் காலக்கெடு எதனையும் விதிக்கவில்லை என்பதுடன் இது குறித்து எதுவும் உள்ளடக்கவுமில்லை.

ஹொண்டுராஸில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு மானுவெல் ஷிலேயா முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும் இடைக்கால ஜனாதிபதியாக இருந்துவரும் ரொபேட்டோ மிச்லெற்றி, ஷிலேயாவுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதும் நாட்டுக்குள் வைத்திருப்பதும் வீணான பிரச்சினைகளைக் கொண்டுவரும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு ஷிலேயாவை ஆட்சியில் அமர்த்துவதற்கு ஆவன செய்யவேண்டியதாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாத இறுதியில் இராணுவ புரட்சி மூலம் வெளியேற்றப்பட்ட ஹொண்டுராஸ் ஜனாதிபதி, கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி விமானம் மூலம் நாடு திரும்பினார். அவ்வேளை விமான நிலைய ஓடுபாதையில் தடைகளை ஏற்படுத்தி விமானம் தரை இறங்கமுடியாமல் தடை செய்யப்பட்டது. இதனால் அவருடைய நாடு திரும்பும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

அதன்பின்னர் காடு, மலைகள் வழியாக ஹொண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பா திரும்பியிருந்தார் மானுவெல் ஷிலேயா. பிரேஸில் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்து கொண்டு ஆட்சி தனக்கு வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ஹொண்டுராஸ் இடைக் காலத் தலைவர் ரொபேட்டோ மிச்லெற்றி பிரேஸில் ஷிலேயாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனத்தெரிவித்திருந்தார். அத்துடன் நாட்டில் வன்முறை எதுவும் நடந்து உயிர் இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு பிரேஸில் தான் பொறுப்பேற்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்படி நிலைமையில் மாற்றம் எற்பட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

அமெரிக்காவுக்கு அண்மையிலுள்ள மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் கடந்த ஜூன் மாதத்தில் திடீர் புரட்சியை நடத்திய அந்நாட்டு இராணுவம், ஜனாதிபதி ஷிலேயாவைக் கைது செய்து நாடுகடத்தியது. இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தால் இடைக்கால ஜனாதிபதியாக ரொபேட்டோ மிச்லெற்றி நியமிக்கப்பட்டார்.

நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி மானுவெல் ஷிலேயாவை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். அத்துடன் இராணுவப் புரட்சி நடத்தி அமைக்கப்பட்ட அரசாங்கம் தவறிழைத்திருக்கிறது என்றெல்லாம் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

ஹொண்டுராஸில் ஜனாதிபதி ஷிலேயாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரியில் நிறைவடையும் நிலையில் இராணுவப் புரட்சி நடத்தப்பட்டது. அன்றைய நாள் முதல் ஆரம்பமான வன்முறைகள் இன்னமும் நிறைவடைந்ததாக இல்லை.

ஜனவரியில் பதவிக்காலம் முடிவடையவிருந்த நிலையில் ஹொண்டுராஸின் ஜனாதிபதி ஷிலேயா, தனது பதவிக்காலத்தை நீடிக்கும் பொருட்டு சர்ச்சைக்குரிய அபிப்பிராய வாக்கெடுப்பொன்றை நடத்தத் திட்டமிட்டிருந்த வேளையிலேயே இராணுவப் புரட்சி இடம்பெற்றிருந்தது.

ஹொண்டுராஸின் அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவர் ஒரு முறை மட்டுமே ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும். தான் தொடர்ந்து பதவி வகிக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த ஷிலேயா இதற்காக பொதுமக்கள் மத்தியில் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் படி அவர் நாடுகடத்தப்பட்டார்.

மத்திய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நாடான ஹொண்டுராஸில் இராணுவப்புரட்சி மேற்கொள்ளப்பட்டு ஷிலேயா நாடுகடத்தப்பட்ட பின்பு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்துவது என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கோஸ்டாரிக்காவில் தங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மானுவெல் ஷிலேயாவை நாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் உலக நாடுகள் உள்ளிட்ட யாரையும் ஈடுபட வேண்டாம் என்று இடைக்கால அரசாங்கம் கேட்டிருந்தது. இந்த நிலையிலேயே அவர் வந்து சேர்ந்திருந்தார். அது போதாமைக்கு உடன்படிக்கையும் ஏற்படுத்தி பதவியில் மீண்டும் அமர்த்தும் படியும் சொல்லியிருக்கிறது மேற்குலகம்.

மக்களாட்சி நாடான ஹொண்டுராஸில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கம் தமக்கு ஆதரவானவர்களை மட்டுமே ஆட்சியில் வைத்தக் கொள்ள வேண்டும் என்றும் வெளிநாடுகள் எண்ணுகின்றன.

ஹொண்டுராஸின் எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்று சந்தேகம் கொள்ள வேண்டியளவில் இப்போதைய நடவடிக்கைகள் இருக்கின்றன. ஜனவரிவரையில் ஆட்சியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் ஆட்சிக் காலத்தின் போது அவர் செய்து முடிக்கப் போகின்ற வேலைகள் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தேயாக வேண்டும்.

ஒருவர் தனது நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்காக யாரை வேண்டுமானாலும் பயன்படுத்தி எப்படி வேண்டுமானாலும் செயற்பட்டு வெற்றியடையலாம் என்பதற்கு ஹொண்டராஸின் ஷிலேயா நல்ல உதõரணம்.

19.11.09

ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் நோக்கங்களில் இருக்கும் அரசியல்
நெருக்கடியிலிருந்து உலக பொருளாதாரத்தை மீட்பது எவ்வாறு என்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தும் வகையில் உலகத் தலைவர்கள் சிங்கப்பூரில் இம்முறை நடைபெற்ற ஆசியப் பசுபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளித்தல் வடகொரியா விவகாரத்தைக் கையாளுதல் என்பனவும் ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டின் கலந்துரையாடலில் முக்கியப்படுத்தப்பட்ட விடயங்களாகும்.

ஆனாலும் அபெக் எனப்படுகிற ஆசிய பசுபிக் பொருளாதார உச்சிமாநாடு காலநிலை மாற்றம் தொடர்பில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படாத நிலையில் நிறைவுக்கு வந்திருக்கிறது.

20 நாடுகளின் தலைவர்கள் பங்கு பற்றிய ஆசியபசுபிக் பொருளாதார மாநாட்டின் முடிவுகளிலிருந்து எதிர்வரும் டிசெம்பர் மாதம் டென்மார்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தையொட்டியதாக இம்மாநாட்டில் காலநிலை மாற்ற உடன்படிக்கையொன்று செய்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இருப்பினும் 2050 ஆம் ஆண்டுக்குள் பச்சை இல்ல வாயுக்களை குறைப்பது தொடர்பான இலக்கு சம்பந்தமாக உடன்படிக்கையொன்றை உருவாக்குதல் என்ற திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவே அறியமுடிகிறது.

ஆனாலும் இது தொடர்பான முடிவினை 2010 ஆம் ஆண்டு டோஹாவில் நடைபெறவுள்ள உலகளாவிய வாணிப பேச்சுவார்த்தைகளின் போது காணலாம் எனத் தீர்மானித்துள்ளனர்.

ஆசியபசுபிக் பொருளாதார மாநாட்டின் முடிவில் பெரியளவில் முக்கியப்படுத்திச் சொல்லக் கூடிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லையாயினும் உலக காலநிலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சர்ச்சைக்குரியதாகவே கொள்ளப்படுகிறது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் அபிவிருத்தியடை ந்த நாடுகளுக்கும் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையில் காலநிலை மாற்றம் சம்பந்தமாக பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது இப்போதைய நிலையில் கடுமையானதொரு பிரச்சினையாகவேயுள்ளது.

பச்சை இல்ல வாயுக்களை 50 சதவீதத்தால் குறைப்பது தொடர்பான இலக்கு உலகளாவிய சமூகங்களைப் பொறுத்தவரை மிகவும் தேவையான ஒன்றாக இருக்கையில் சர்ச்சைக்குரிய பிரச்சினையாக அது இருப்பதானது உலகில் ஏற்படப்போகும் வீணான தொல்லைகளுக்கு ஏதுவானதாகவே அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையில் சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை மையப்படுத்தி வடகொரியாவை அடக்கிவைக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்பதற்கு ஆசியா பசுபிக் மாநாட்டுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமõ மேற்கொண்ட நடவடிக்கைகளிலிருந்து தெரியவருகிறது.

ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடேவ் மற்றும் ஒபாமா ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் அடுத்து ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்திருந்த நாங்கள் எதிர்வரும் டிசெம்பரில் ஆயுத உடன்படிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்க முடியும் என்ற கருத்து மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

இரு நாடுகளுக்குமிடையில் உள்ள தந்திரோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் எதிர்வரும் டிசெம்பர் 5 ஆம் திகதி காலாவதியாகிறது. இதற்குப் பதிலாக புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தும் முகமாக மேற்படி இரு உலகத் தலைவர்களும் ஏற்கனவே பேச்சு நடத்தியிருக்கின்றனர். இருந்த போதும் அபெக் உச்சிமாநாட்டையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெட்வேடேவும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர்.

இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆசிய சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக ஜப்பான் சென்ற வேளை பிராந்திய பாதுகாப்பு தொடர்பான அமெரிக்காவின் உறுதிமொழி அசைக்க முடியாதது என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் ஆசியாவில் பாரிய பொருளாதாரமாக வளர்ந்துவரும் சீனாவுடன் நடைமுறை சாத்தியமான பொருளாதார ஒத்துழைப்புக் கொள்கையை அமெரிக்கா தொடர விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

பசுபிக்கிலுள்ள தமது அயல் நாடுகளை விட கிழக்கு ஆசிய நாடுகள் நிதி நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்டு வருகின்ற போதும் அமெரிக்கச் சந்தையில் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இந்நாடுகள் ஒபாமாவிடமிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைக்கான சமிக்ஞைகளை எதிர்பார்த்திருப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்.

ஆனாலும் சீனாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உலகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் இணைந்து செயற்படுவதற்கு விடுத்த அழைப்பிற்கு சீனத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர்.

இதில் காலநிலை மாற்றம் தொடர்பில் அடுத்த மாதம் கொபன்ஹேகனில் நடைபெறவுள்ள மாநாட்டில் விரிவான உலகளாவிய உடன்படிக்கையொன்று எட்டப்படவேண்டியமை, வடகொரியாவின் அணுநிகழ்ச்சித் திட்டம் தொடர்பான பேச்சுகளில் வடகொரியாவை மீண்டும் பங்குபற்ற வைப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பது போன்றன முக்கியப்பட்டிருக்கின்றன.

ஒபாமாவுக்கும் சீன ஜனாதிபதி ஹூஜிந்தாவோவுக்கும் இடையில் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மண்டபத்தில் இருமணிநேரம் நடைபெற்ற சந்திப்பில் இந்த இணக்கம் ஏற்பட்டிருக்கிறது.

உலக அரங்கில் சீனா தற்போது முக்கிய பாத்திரத்தை வகித்து வருகின்றனது. ஆனாலும் ஜப்பானுக்கு எதிரியான நாடாகவே இருந்து வருகிறது. காலநிலை மாற்றம் தொடக்கம் அணுவாயுதப் பரவல் மற்றும் பொருளாதார நெருக்கடி வரை 21 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய சவால்களுக்கான தீர்வை ஒரு நாட்டினால் மட்டும் எட்டமுடியாது என்ற உண்மை மாத்திரம் உண்மை என்ற நிலையில் அமெரிக்கா முக்கியப்படுத்தப்படுகின்ற நாடான சீனாவையும் இதில் இழுத்துக் கொள்ளப்பார்க்கிறது என்பதே முக்கியமானது.

இதே வேளை விடாப்பிடியாக இருக்கும் சீனாவின் திபெத் விவகாரத்தினைப்பற்றியும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ள போதும் வர்த்தகப் பாதுகாப்புக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவரவேண்டுமென அழைப்பு விடுத்துள்ள ஹூ ஜிந்தாவோ சமத்துவம், பரஸ்பரம், மரியாதை மற்றும் மற்றைய நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடாத கொள்கை என்ற தத்துவத்தின் அடிப்படையில் இரு நாடுகளும் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபடுமென தெரிவித்திருக்கிறார்.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அரசியல் ரீதியற்ற உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துவதே நோக்கம் என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருக்கின்ற போதும் அரசியல் மயப்படாத எந்தச் செயற்பாடும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.

ஆசியப் பசுபிக் பிராந்திய பொருளாதார மாநாட்டிற்கு வந்த ஒபாமõ சீனாவுக்குச் செல்லவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது என்று சிந்தித்தால் இதற்கான பதில் கிடைத்துவிடும்.

19.11.09

அப்பாஸின் அரசியல் ஒதுங்கல் மேற்குலகில் சலனத்தை ஏற்படுத்துகின்றது
மத்திய கிழக்கு இருதரப்புப் பேச்சுவார்த்தை விவகாரத்தில் வித்தியாசமானதும் புதியதுமான அணுகு முறையை ஒபாமா நிருவாகம் கையாளவேண்டும் என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வெளிவிவகாரக் கொள்கையில் உள்ள சிக்கல்களை கடந்த 10 மாத ஆட்சியில் இஸ்ரேலிய பலஸ்தீன விவகாரத்திற்கு முடிவு அல்லது சமாதானத்தை எற்படுத்த முடியாததை ஒபாமா தலைமையிலான ஆட்சி காட்டி நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் கிலாரி கிளின்ரன் மத்திய கிழக்குக்கு விஜயம் செய்திருந்த வேளை பலஸ்தீன ஜனாதிபதி கிளின்ரனின் கோரிக்கையை நிராகரித்திருந்ததுடன் இஸ்ரேல் தமது குடியேற்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளாத வரையில் பேச்சுக்களுக்கு இடமில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

எந்த வித பிரயோசனமும் இன்றி மத்திய கிழக்கு விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருக்கிறார். இது ஒன்றே வெளிவிவகாரச் செயற்பாடுகளில் உள்ள சிக்கலைக் காண்பிப்பதற்கு ஒருசாட்சியாகும். இதில் அவருடைய கோரிக்கை சரியாக இருந்தாலும் அரபிய உலகைப் பொறுத்தவரையில் இது ஒத்துவராததாகும். இந்நிலையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹூ வட அமெரிக்க யூதத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றியிருக்கிறார்.

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அடுத்த வருடம் ஜனவரியில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று அறிவித்த பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றிப் பேசும்பொருட்டே பென்ஜமின் நெதன்யாஹூ அமெரிக்காவுக்கான இந்தப் பயணத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேலின் யூதக்குடியேற்றங்களை பராக் ஒபாமாவின் நிர்வாகம் தடுத்து நிறுத்தவில்லையென்பதால் ஆத்திரமடைந்த மஹ்மூத் அப்பாஸ் அரசியலிலிருந்து ஒதுங்குவதாகவும் தெரிகிறது.

மஹ்மூத் அப்பாஸின் இந்தமுடிவு மேற்குலகுக்கு நீண்ட நாள் நண்பர் ஒருவரை இழக்க வேண்டிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதவாதத் தலைவர் ஒருவரை இழந்தால் மத்திய கிழக்கின் சமாதான முயற்சிகள் பாதிப்படையலாம் என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் கவலையடைந்து ள்ளமையே இதற்குக் காரணமாகும்.

பேச்சுவார்த்தைக்குத் தயார் எனத் தெரிவித்திருக்கின்ற இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ பலஸ்தீனர்கள் அதற்குத் தயாராக இல்லை இது தான் உண்மை எனத் அமெரிக்காவில் வைத்துக் கூறியிருக்கிறார். இது இவ்வாறிருக்க பலஸ்தீனின் மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவம் திடீர் சோதøனயொன்றை நடத்தியதுடன் 14 பேரைக் கைது செய்துமுள்ளது. அத்துடன் நூறு வீடுகளைத் தரைமட்டமாக்கப் போவ தாகத் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இத்தேடுதல் நடவடிக்கை திங்கட்கிழமை வரை நீடித்தது.

மேற்குக் கரையில் இஸ்ரேல் இராணுவத்தினால் கைது செய்யப் பட்டவர்கள் விசாரணைக்காக மறைமுக இடமொ ன்றில் வைக்கப்பட் டுள்ளனர். என்பதுடன் நூறு வீடுகளை உடைக்கும் பொருட்டு அடையாளமிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மேற்குக் கரையிலுள்ள அனுமதியுடன் கட்டப்பட்ட பலஸ்தீனப் பெண்கள் தலைமை அலுவலகத்தை உடைக்கப் போவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியிருக்கிறது. பலஸ்தீனில் இன்னல்களை எதிர் கொள்ளும் பெண்கள், சிறுவர்களுக்கான உதவிகளையும் இப்பெண்கள் தலைமையகம் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் நடைபெற்று வருகின்ற இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகளுக்கிடையில் ஜனவரியில் நடைபெறவுள்ள தேர்தலில் பங்கேற்க வேண்டாமென பாலஸ்தீனர்களுக்கு ஹமாஸ் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதற்கு தமது இணக்கப்பாடு பெறப்படாமையைக் காரணமாகச் சொல்லியிருக்கிறது. ஜனவரி 24 இல் நடைபெறவுள்ள தேர்தல் சட்டரீதியற்றதென அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

காஸாவில் உள்ளவர்கள் இத் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் அவர்கள் சட்டரீதியிலோ அல்லது வேறு வகையிலோ அதற்கான விளைவை எதிர்கொள்ள நேரிடுமெனவும் ஹமாஸ் எச்சரித்துள்ளது.

பாலஸ்தீன சட்ட சபையின் நான்கு வருட பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரியில் முடிவடையவுள்ளதை முன்னிட்டு பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை அப்பாஸின் நிர்வாகம் ஜனவரியில் நடத்த திட்டமிட்டுள்ளது. அப்பாஸின் ஜனாதிபதி பதவிக்காலம் இவ்வருட முற்பகுதியில் முடிவடைந்துள்ளபோதும் தேர்தல்கள் நடைபெறாமையால் அவர் தொடர்ந்தும் பதவியில் நீடித்து வருகிறார்.

இவ்வாறான சிக்கல்களுக்கிடையில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஜனவரியில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பதாஹ் அமைப்பின் சார்பாக மஹ்மூத் அப்பாஸ் பெரும்பாலும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்குக் கரையிலும், கிழக்கு ஜெரூஸலத்திலும் இஸ்ரேல் யூதக் குடியேற்றங்களை நிறுவுவதில் ஈடுபட்டுள்ளது. இதை நிறுத்தும் படி பல தடவைகள் கோரப்பட்ட போதும் அமெரிக்கா அதற்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதனால் மனஞ் சோர்வடைந்த மஹ்மூத் அப்பாஸ் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதில்லையென்ற முடிவுக்கு வந்ததாகஅவரது பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

அப்பாஸின் இந்த முடிவு அமெரிக்காவுக்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கிறது இருந்தாலும் மத்திய கிழக்கு சமாதான முயற்சிகளையும் இஸ்ரேல் பலஸ்தீன் தகராறுகளையும் இது மேலும் சிக்கலுக்குள்ளாக்குமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை ஐ.நா.வால் கடந்த வியாழக்கிழமை வாக்களிப்புக்கு விடப்பட்டு வெளியிடப்பட்ட காஸா போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு 114 நாடுகள் ஆதரவாகவும் 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 44 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன. ஐ.நா. பொதுச் சபையில் 192 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேல், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட 18 நாடுகள் போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன. ஐரோப்பிய நாடு களில் பெரும்பாலானவை இஸ்ரேலுடன் இணைந்து விசாரணைக்கெதிராக வாக்களித்தன. பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் நடுநிலைமை வகித்தன.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் முஸ்லிம் நாடுகளும் விசாரணை அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. காஸாவில் 22 நாட்கள் நடந்த யுத்தத்தில் இஸ்ரேல், ஹமாஸ் இராணுவங்கள் நடந்து கொண்ட விதங்கள் பற்றி அந்நாடுகளை விசாரணை செய்ய வேண்டுமென ஐ.நா. வால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பேரழிவு ஆயுதங்களைப் பாவித்தமை, மக்களை யுத்தக் கேடயமாக பாவித்தமை போன்ற குற்றங்களுக்காக இவ்விசõரணைகள் ஆரம்பமாகவுள்ளன. இஸ்ரேலின் தாக்குதலில் 1300 பலஸ்தீனர்களும் ஹமாஸின் தாக்குதலில் 12 இஸ்ரேலியப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருந்தனர்.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நீதியரசர் ஜுரிஸ்ட் ரிச்சார்ட் கோல்ஸ்டோன் தலைமையிலõன குழு இந்த அறிக்கையை தயாரித்தது இஸ்ரேலையும், பலஸ்தீனையும் விசாரணை செய்தபின் பெறப்பட்ட அறிக்கைகள் மூன்று மாதத்தின்பின் ஐ. நா.வின் பாதுகாப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஐ.நா. பொதுச் சபைக்கு தீர்மானம் நிறை÷வற்றப்படுவதற்காக அனுப்பி வைக்கப்படவேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விசாரணையை பகிஷ்கரிக்கப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஐந்து நாடுகளுக்கு வீட்டோ அதிகாரமுள்ள போதும் ஐ.நா. பொதுச் சபையில் எந்த நாட்டுக்கும் வீட்டோ அதிகாரமில்லை. என்பதனால் இந்த விசாரணை ஒப்புதலுக்கு வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. யூதர்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே உலக நாடுகளின் நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அரசியல் மயப்பட்ட போராட்டங்களும் பேச்சுக்களும் இணக்கப்பாடுகளும் அந்த வகையிலேயே நடைபெற்றும் வருகின்றன.

மேற்குக்கரையில் யூதக் குடியேற்றங்களை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கும் இஸ்ரேலுடன் நல்லுறவைப் பேணவேண்டுமென அரபு நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுத்த வண்ணமுள்ளது. இஸ்ரேலின் குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ஏற்படும் பிரச்சினைகள் அதற்கெதிரான முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது போகலாம் என்று நம்பப்படுகிறது.

ஆனாலும் மஹ்மூத் அப்பாஸ் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதனால் மத்திய கிழக்கில் இஸ்ரேல் நினைத்த விடயத்தைச் சாதித்துக்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. அத்துடன் மேற்குலகு அப்பாஸின் நட்பை இழந்து உறவுகள் பலமிழந்து போனாலும் அமெரிக்காவின் நேசநாட்டின் நலனுக்கு பாதிப்பற்றுப் போகும்.

1967 இல் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட அரேபியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிராந்தியமான கிழக்கு ஜெருசலேம் பகுதியில் 20 அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களை அமைக்கும் முயற்சிகளில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. இந்த ஜெருசலேமில் புதிய குடியேற்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று பலஸ்தீனம் கோரியிருக்கிறது அதன் பின்னரே பேச்சுக்களில் ஈடுபட்ட முடியும் என்றும் சொல்லியிருக்கிறது.

இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேமை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு ஜெருசலேமை தமது நிலையான தலைநகராகப் பிரகடனப்படுத்தியது. இந்நிலையில், இரு அரசுகள் என்ற அமைதி உடன்படிக்கையின் பிரகாரம் கிழக்கு ஜெருசலேமை தமது தலைநகராகப் பிரகடனப்படுத்த பாலஸ்தீனர்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறான குழப்பங்களுக்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி மீது சுமத்தப்படுகின்ற அல்லது சந்தேகிக்கப் படுகிற அரசியல் சாணக்கியம் தொடர்பான விடயத்தில் ஏற்படப் போகும் மாற்றம் மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுக்களுக்கான நல்ல மாற்றத்தினைக் கொண்டு வரும் என்று நம்புவோம்.

12.11.09

உங்களுக்கே இவ்வுலகம் 1 – முட்டாள்களை மதியுங்கள்
தனக்கு ஆதரவானவர்களைப் பயன் படுத்துவதை விடுத்து தன்னுடன் குறிப்பிட்ட சிலர் உறவாடுகிறார்கள் என்று காட்டிக் கொண்டு இருப்பவருடன் நீண்டகாலமாக நான் இருந்திருக்கிறேன் என்பது கவலையைத் தருகிறது.

யாரெல்லாம் நன்றாக மகிழ்ச்சியாக எல்லோருடனும் பழகுகிறார்களோ அவர்களையெல்லாம் பிரித்து துருவங்களாக்கி விடுவது நல்லதொரு இராஜதந்திரத்தனமாகவே தெரிகிறது.

இது அரசியலில் சிறந்ததொரு நடவடிக்கையாக இருக்கிறது. இருப்பினும் இந்த நடைமுறையைக் கையாளுபவரைச் சரியாக இனங்கண்டு கொள்ள சிரமப்படுகின்றனர் என்பதே உண்மையானது.

பிரித்தாளுவதே சிறந்த அரசியல் தந்துரோபாயம் என பிரித்தானியர் இலங்கையில் இருக்கும் போதும் அதன் பின்னரான காலத்திலும் இப்பொழுதும் நாம் உணர்ந்தே இருக்கிறோம்.

அறிவாளிகள் தமது அறிவைப் பெருக்கிக் கொள்வதில் மிகுந்த அக்கறையுடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியாதவர்களும்அதற்கு முயற்சி செய்யாதவர்களும் தமது அறிவு நிலையில் நின்று மாத்திரமே யோசிப்பதுடன் செயற்பட்டும் வருகின்றனர்.

இதில் என்ன முக்கியமானது என்றால் பொறுப்பான பதவிகள் எப்படியோ கிடைத்து விடுமானால் அதனைப் பயன்படுத்தி தமது அறிவு நிலைமையில் மாத்தரம் தமக்குக் கீழ் இருப்பவர் அனைவரும் சிந்திக்க வேண்டும் இயங்க வேண்டும் என்றும் உறுதியாக இருப்பதுதான் அபாண்டத்தனம்.

இவ்வாறான அறிவிலித்தனமானவர்கள் அறிவூட்டவேண்டிய துறைகளில்இருந்து கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதானது இத்துறை சார்ந்து பயன் பெறும் மக்கள் கூட்டத்தை அறிவிலிகளாகவே மாற்றிவிட்டுவிடும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

தான் நினைப்பது மாத்திரமே சரியென்று நினைப்பதும் மட்டுப்பாடுகளுடன் மாத்திரமே செயற்படுவதும் பொதுத் துறை சார்ந்து பொது மக்களின் அறிவு நிலைசார்ந்து மேம்பாட்டைக் கொண்டுவருபவர்களுக்கு நல்லதொரு நிலைப்பாடா என்பதே எனது கேள்வியாக இருக்கிறது.

எவ்வளவு சொல்லிலும் கேட்காத மனிதர்கள் வாழும் உலகத்தில் வாழ்க்கை நடத்தும் எமக்கெல்லாம் எப்போதுதான் விமோசனம் கிடைக்கும். இவ்வாறு நான்மட்டும் தான் புலம்புகிறேனோ என்னவோ என்று கவலை இருந்தது.

இதற்குப் பதில் யாரிடமிருந்து கிடைக்கும் என்று காத்திருக்கிறேன். நான் மட்டுமே அடைந்து கொண்;ட அறிந்து வைத்திருப்பவற்றைச் சொல்லி அத்திவாரங்களில் உடைந்து போபவர்களை ஏற்றிவிடலாம் என்று நினைக்கிறேன். ஆனாலும் யாரும் கேட்பதாக இல்லை.

பாத்திரம் இருக்கும் போதுதான் நமக்கான எதனையும் அதில் இட்டுச் சாப்பிட முடியும் என்று நினைவிருக்க வேண்டும். அதனைப் பழுதாக்கிக் கொண்ட பின்னர் யாராலும் அதனை பயனுக்காக்க முடியாது. விஞ்ஞானத்தில் சொன்னால் பக்ரீரியாக்களால் நோய் பரப்பும் ஒன்றாக அது மாற்றப்பட்டுவிடும்.

இதனைத் தெரியாத, அறிவிருந்தும் அதனைப் பயன்படுத்தாதவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது. மனம் உள்ள பகுத்தறிவுள்ள நாம் ஏன் யாரையும் அறிந்து கொள்ளாது நடந்து கொள்கிறோம் என்று தான் என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

யாரையும் காட்டிக்கொடுக்கா, தீங்கு நினையா வாழ்க்கை வாழலாம் என சிந்திக்கிறேன். இருந்தாலும் நானும் பன்றியுடன் சேர்ந்த பசுவாக மாற்றப்படும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதற்கெல்லாம் உங்களிடம் பதிலிருக்குமோ என்னவோ? இருக்குமானால் கட்டாயம் எழுதுங்கள். பெற்றோரும் சமூகமும் நல்லது கெட்டது என்று தெரிய வைத்தே வளர்த்து விட்டு விடுவதானது சிறந்ததே.

அவ்வாறில்லாமல் விட்டிருந்தால்  இந்தச் சமூகத்தில் ஒரு தறிகெட்டவர்களாக பெரும்பாலாக உள்ள எல்லோரையும் போல் வாழ்ந்துவிட்டுப் போகும் நிலை தோன்றிவிடும்.

ஆனால் ஒன்று தான் உண்மை நமக்கெல்லாம்  நல்லது கெட்டது தெரியாமலிருந்திருந்தால் குதிரைக்கு கொம்பு இருந்திருந்தால் நடக்கும் விபரீதம் நடந்தேறியிருக்கும். ஒரு வகையில் நம் பெற்றோருக்குக் கட்டாயமாக நன்றிக்கு கடமைப்பட்டவர்கள் என்பதை நாம் மறந்தேவிடக்கூடாது.

இருக்கட்டும் என்னதான் உலகம் எப்படிப் போனாலும் மரணம் ஒன்று மட்டும் நிரந்தரமானது. வாழ்க்கையில் மாற்றானை வாழவைத்து பெற்ற இன்பத்தை விடவும் எதுவும் பெரிதில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளும் காலம் வரும். என்பதில் உறுதியாகவே இருந்து வா அந்த நம்பிக்கை நிமிர்ந்து நிற்க வைக்கும்.

அமெரிக்கா என்கிற வெறும் 300 வருடத்தைத் தாண்டிய நாட்டின் கதை எல்லோரும் அறிந்ததாகவே இருக்கும். ஆனாலும் அது உலகின் சர்வாதிகாரியாகவே இருக்கிறது. அழித்து அழித்தே உலகத்தை நாலாபக்கமும் சிதறவைத்து தன் பக்கம் எடுத்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என்பதை புரிந்து வாழ பழகிக் கொள்ளுவோம்.

முட்டாள்களை மதித்து நடந்தால் மாத்திரமே இவ்வுலகில் நிம்மதியாக வாழமுடியும் என்பதைப் புரிந்து கொள்ளக் கற்றுக்கொள்தலே வாழ்க்கையில் முக்கியமான காலங்களை நாசமாக்கியிருக்கிறோம் என்ற கவலையை மறக்க ஒரே வழி என்பது மட்டுமே உண்மை.

17.11.2009

மேற்குலகின் சோசடியை நிரூபித்திருக்கும் ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலின் மீள் வாக்களிப்பு நாளை நடைபெறவிருந்த நிலையில் ஜனாதிபதி ஹமீத் அல் கர்ஸாய்க்கு எதிராகப் போட்டியிட்ட பிரதான வேட்பாளரான அப்துல்லாஹ் அப்துல்லாஹ் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து இரண்டாம் கட்ட வாக்களிப்பு ரத்து செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக ஹமீத் அல்கர்ஸாய் மீண்டும் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.

அதன்படி ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஹமீத் அல் கர்ஸாய் பதவியேற்று இருக்கிறார். தனது பதவியை மீண்டும் பொறுப்பேற்ற ஜனாதிபதி ஹமீத் அல் கர்ஸாய் இன ஐக்கியம் மிக்க தேசத்தின் ஒருமைப்பாட்டுக்காக உறுதியாக உழைக்கவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் மற்றும் மேற்குலக நாடுகளின் தலைவர்களும் ஹமீத் அல் கர்ஸாய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட வாக்களிப்பு தலிபான்களின் வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாக அமையும் என்பதால் அப்துல்லாஹ் அப்துல்லாஹ் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய பின்வாங்கல் காரணமாக வாக்களிப்பின்றியே மீண்டும் ஜனாதிபதியாக ஹமீத் அல் கர்ஸாய் அறிவிக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 20 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஊழல் மோசடிகள் நடந்த தாக அப்துல்லாஹ் அப்துல்லாஹ் குற்றம் சாட்டியிருந்தார். இக் குற்றச்சாட்டை ஐ. நா. கண்காணிப்பாளர்களும் முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றன. பின்னர் மோசடிகள் நடைபெற்றமை நிரூபிக்கப்பட்டு நவம்பர் 07 இல் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நடத்த ஏற் பாடு செய்யப்பட்டது.

ஆப்கானில் 7ஆம் திகதி நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக ஆப்கான் தேர்தல் திணைக்களத்தின் முக்கிய பணியாளர்கள் சிலர் இராஜிநாமா செய்ய வேண்டுமென அப்துல்லாஹ் அறிவித்திருந்தார். அவ்வாறானால் ஊழல்களில் முக்கியமாக ஈடுபடுபவர்கள் தேர்தல் திணைக்களத்திலும் இருக்கின்றனர் என்பது அர்த்தமாகும். இறுதிவரை உறுதியாக இருந்த அப்துல்லாஹ் அப்துல்லாஹ் திடீரென விலகிக்கொண்டமையானது பெரியள வில் சந்தேகங்களைத் தோற்றுவித்தன.

இருப்பினும் இப்போது எதிரணி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஹமீத் அல் கர்ஸாய் ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அப்படியானால் அவர் ஒரு மோசடியான முறையில் பதவிக்கு வந்தவராகவே பார்க்கப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக படைகளை அனுப்புவதில் குறியாக இருக்கின்ற அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இப்போதும் அதனைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார். உலகின் சர்வாதிகாரத்தை வைத்துக் கொண்டிருக்கத் துடிக்கும் நாடுகளைப் பொறுத்தவரை உலக நாடுகளில் உள்ள பிரச்சினைகள் முடிந்து விட வேண்டும் என்று எண்ணுவதே இல்லை என்பது மாத்திரமே உண்மையாகும்.

கர்சாய்க்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் புலனாய்வுப் பிரிவிற்குமிடையே உள்ள உறவானது மிகவும் இறுக்கமானது. மேற்குலகின் ஆதரவு பெற்றவர்களே ஆப்கானிஸ்தானில் பதவியில் இருக்க முடியும் என்பதற்கு உத்தியோக பூர்வமான ஆதாரமாக ஆப்கானில் நடந்திருக்கின்ற மோசடியைக் குறிப்பிட முடியும்.

மேற்குலக நாடுகள் இந்த அளவுக்கு நெருக்குதல்களைக் கொடுத்து ஜனநாயகத் தேர்தல் ஒன்றில் போட்டியிடும் ஒருவரை விலகிக்கொள்ளச் செய்கின்றன.

நிதியியல் ரீதியான மற்றும் அரசியல் ரீதியான உறவும் கர்சாய்க்கும் அமெரிக்க புலனாய்வுத் துறைக்குமிடையில் காணப்படும் நெருக்கமான உறவு என்பன அண்மைக்காலச் சிக்கல்களுக்குக் காரணம் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆப்கான் போரில் அமெரிக்காவின் புதிய தந்திரோபாயக் கொள்கையை கர்சாயின் நடவடிக்கைகள் கேள்விக்குள்ளாக்கியிருக்கின்ற போதிலும் அவரே பதவியில் இருக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. ஆப்கானில் நடப்பது அமெரிக்காவின் பொம்மை ஆட்சி என்பது இப்போது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிலிருந்து அப்துல்லாஹ் அப்துல்லாஹ் வெளியேறும் பட்சத்தில் தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பலத்த சந்தேகம் தோன்றுமென அரசியல் நிபுணர்கள் தெரிவித்திருந்த நிலையில் அப்துல்லாஹ் அப்துல்லாஹ் விலகிக் கொண்டமையானது அதனை உறுதிப்படுத்தினாலும் அமெரிக்காவின் கைப்பொம்மை ஆட்சி என்பதால் உலகமும் ஏற்றுக்கொள்ளும்.

மேற்குலகு தனக்கு ஆதரவானவரை மாத்திரமே வைத்துக்கொள்ளும் என்பதற்கு ஆப்கானிஸ்தானில் நடந்திருக்கின்ற நாடகம் நல்ல உதாரணமாகும். ஆப்கானிஸ்தானின் தேர்தல் சட்டத்திற்கமைய ஜனாதிபதி வேட்பாளர் 50 சத வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லையானால் மீண்டும் வாக்களிப்பு நடத்தப்பட வேண்டும்.

உண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் கர்சாய் 47 சதவீதமான வாக்குகளையே பெற்றிருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லா வகையிலும் முரண்பட்டுள்ள கர்சாய் பதவியில் இருந்து எதனைச் சாதிக்கப் போகிறார் என்றால் அதற்கும் பதில் இருக்கும்.

05.11.09

பலஸ்தீனம் முன் நிபந்தனையைக் கைவிட வேண்டிய நேரம்
மரபு ரீதியான விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவே அனைவரும் விரும்புகின்றனர். இருப்பினும் அதற்குள் சிக்கிக் கொண்டிருப்பவர்களை ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு உலக நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் உதாரணமானதாகும்.

இந்த வாரத்தில் மத்திய கிழக்கில் முக்கியத்துவமான நடவடிக்கைகள் நடைபெற்றன. அவற்றில் பலஸ்தீன விவகாரத்துக்கான பேச்சுவார்த்தையை நடத்தவதற்கு அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் மத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

தவறு செய்பவன் எப்படியிருந்தாலும் பரவாயில்லை பாதிக்கப்பட்டவனே அமைதியாக இருக்க வேண்டும் என்பது போல் நடைபெற ஏற்பாடாகி வரும் பேச்சு வார்த்தைக்கு முன்நிபந்தனை விதிக்கக்கூடாது என பலஸ்தீனத்திற்கு ஹிலாரி கிளின்டன் தெரிவித்திருக்கிறார்.

இஸ்ரேலினுடைய நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ள பலஸ்தீனம் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு முன்நிபந்தனைகளை வைத்திருக்கிறது. பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மேற்கு கரைப் பகுதியில் யூதர்களைக் குடியேற்றம் செய்வது குறித்த பேச்சுவார்த்தைக்கு எந்த முன் நிபந்தனையும் விதிப்பது சரியல்ல எனத் தெரிவித்திருக்கின்ற ஹிலாரி கிளின்டன் இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு பலஸ்தீனர்கள் உடனடியாக தயாராக வேண்டும் எனறும் தெரிவித்திருக்கிறார்.

யூதர்களைக் குடியமர்த்துவது தொடர்பான பிரச்சினையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அண்மைக்காலமாக இஸ்ரேல் ஆர்வம் காட்டி வருகிறது. மத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுக்கான சாதகமான நடவடிக்கைகளில் இருதரப்பும் ஈடுபடுவதற்கு இழுத்தடிப்புச் செய்தும்

வருகின்றன.

இரு நாடுகளும் பேச்சுவார்த் தையில் நீடிக்கும் முட்டுக் கட்டையை தகர்த்து பிரச்சினையை தீர்க்க முன் வர வேண்டும் என்று தெரிவித்திருக்கிற ஹிலாரி கிளின்டன் இதையே அமெரிக்கா விரும்புகிறது என்றும் கூறியிருக்கிறார். அதே வேளை பலஸ்தீனம் பணிந்தே போக வேண்டும் என்ற வகையிலான கருத்துகளையும் முன்வைத்திருக்கிறார்.

கடந்த வாரத்தில் இஸ்ரேலுக்கு அந்நாடு ஆரம்பித்துள்ள யூதக் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. முக்கியமானதொரு வேண்டுகோளை விடுத்திருந்தது. அதில் பலஸ்தீனின் கிழக்குப் பகுதியிலுள்ள முஸ்லிம்களின் வீடுகளை அழித்து அவர்களை பலாத்காரமாக வெளியேற்றுதல் தவறானது. இதனை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அத்துடன் இந்நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதை ஐ.நா. வன்மையாக கண்டிப்பதாகவும் அறிவித்திருந்தது.பலஸ்தீனர்களை பலாத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் மேற்குக் கரைப் பகுதியில் ஐ.நா. மீள் கட்டுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க அனுமதிக்கும் படியும் இஸ்ரேலிடம் ஐ.நா. கேட்டிருந்தது.

இஸ்ரேல் இராணுவம் கடந்த வாரத்தில் சுமார் 16 குடும்பங்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றியிருந்ததுடன் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கியது எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத் துக்கும் இடையிலான மத்திய கிழக்கின் அமைதிப் பேச்சுகள் அமெரிக்காவின் புதிய வழிகாட்டலில் நடத்தப்படுமென ஹிலாரி தெரிவித்திருப்பதானது நியாயமான பேச்சுவார்த்தையாக இருக்குமா அல்லது பலஸ்தீனத்துக்கு நியாயத்தைப் பெற்றுத்தருமா என்பதில் சந்தேகங்கள் தோன்றியிருக்கின்றன.

இஸ்ரேலால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பலஸ்தீனத்தின் மேற்குக்கரைப் பகுதிகளில் குடியிருப்புகள் அமைப்பதையும் மக்களை வெளியேற்றுவதையும் இஸ்ரேல் நிறுத்தினால் மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளலாம் என பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் கூறியிருக்கிறார்.

இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன் யாகு பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸின் இக்கருத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார் இந்நிலையிலேயே நெத்தன்யாகுவைச் சந்தித்துப் பேசிய பின்னர் ஹிலாரி பலஸ்தீனத்தை நிபந்தனை விதிக்க வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.

மத்திய கிழக்கின் அமைதிப் பேச்சுகளை மீள ஆரம்பிப் பதைத் தடுப்பதற்கான சாக்குப்போக்கான காரணங்களைத் தேடும் இஸ்ரேல் பிரச்சினைகளை ஏற்பாடு செய்த வண்ணமே உள்ளது என்பதற்கு இந்த குடியேற்றம் நல்லதொரு உதாரணமாகும். ஆக்கிரமிப்பின் உச்சம் என்றால் அத மத்தியகிழக்கில் நடந்து வருவதுதான் என்று சொல்லும் அளவிற்கு இஸ்ரேலின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

அப்படியிருந்த போதும் அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகின்றமை கவலைக்குரியதாகும். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்கு விஜயம் செய்த அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் பலஸ்தீனத்துடனான அமைதிப்பேச்சுகளை மீள ஆரம்பிப்பதற்கான அழைப்பை இஸ்ரேல் பிரதமர் விடுத்திருந்தார். அத்துடன் அமைதிப் பேச்சுகளை மீள ஆரம்பிக்கின்ற போது பலஸ்தீனக் குடியிருப் பாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கருத்துகளை முன்வைப்பதாகவும் நெத்தன் யாகு தெரிவித்திருந்தார்.

மத்திய கிழக்கின், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இடையேயான பேச்சுகளை மீள ஆரம்பிக்க வேண்டிய தேவையை உணர்ந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த வருட இறுதிக்குள் பலஸ்தீன விவகாரத்திற்கு முடிவு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

பலஸ்தீனக் குடியிருப்புகள் தொடர்பான தமது கொள்கை களிலிருந்து சில குறிப்பிட்ட விடயங்களில் இஸ்ரேல் பிரதமர் விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்திருக்கின்ற ஹலாரி கிளின்டன் பலஸ்தீனர்களின் பிரதேசத்துக்குள் யூதக் குடியேற்றங்களை அமைப்பது தவறு என்று எந்தவிதமான கருத்தையும் முன்வைக்கவில்லை.

இஸ்ரேல், பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான பேச்சுகள் நடைபெற்று அமைதி ஏற்படுவதில் மேற்குலகுக்கு நன்மைகள் கிடைக்கப் போவதில்லை என்றால் அது ஏன் இவ்வளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்கிறது. அமைதிப் பேச்சுகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டு மென்பதையே அமெரிக்கா விரும்புகிறது. தனது முழு ஆதரவு நாடாக மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலை விட்டுக் கொடுக்க அமெரிக்காவால் முடியாமல் இருக்கிறது. இதனாலேயே இவ்வாறான பிரயத்தனங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

எதுவானாலும் நாம் பார்க்க விரும்பும் அமைதியான பலஸ்தீனம் உருவாவதற்கு மேற்குலகுடன் இணைந்து இஸ்ரேல் செய்து வருகிற ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்படுதல் வேண்டும் என்பதே ஒரே வழி>யாகும். அதற்கு இப்போதைக்கு பலஸ்தீனம் விட்டுக் கொடுத்தேயாக வேண்டும்.

05.11.09

ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஆப்கான் மக்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்.
மேற்குலகு தனக்கு ஆதரவானதை மாத்திரமே வைத்துக்கொள்ளும் என்பதற்கு நவம்பர் 07ஆம்திகதி ஆப்கானிஸ்தானில் நடக்கப் போகும் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நல்ல உதாரணமாகும்.

ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் திகதி மாகாண மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றன. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் 54.9 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அப்துல்லா 39 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் இந்தத் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாகவும் அதனை இரத்துச் செய்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐ.நா. அடங்கலான கண்காணிப்பாளர்கள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் நவம்பர் 7ஆம்திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற தேர்தலில், தான் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்த கர்சாய் மீள் வாக்களிப்புக்கு ஒப்புக்கொள்ள மறுத்திருந்த நிலையில் மேற்குலகத்தின் திரைமறைவு பேச்சுக்களையடுத்து அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் தேர்தல் சட்டத்திற்கமைய ஜனாதிபதி வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லையானால் மீண்டும் வாக்களிப்பு நடத்தப்பட வேண்டும். உண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் கர்சாய் 47 சத வீதமான வாக்குகளையே பெற்றிருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கு ஏற்பாடாகி வருகிறது.

மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு கர்சாய் தலையசைத்ததையடுத்து ஐக்கிய நாடுகள் சபை வாழ்த்துத் தெரிவித்ததுடன் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. நவம்பர் 7ஆம்திகதி தேர்தலை நடத்த ஏற்பாடாகி வருகின்ற நிலையில் கர்சாய் மற்றும் அப்துல்லா ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஜனாதிபதி ஹமீட் கர்சாய் அதிக வாக்குகள் பெற்றார். எனினும், அவருக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கையானது பதிவான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் குறைவானதாகவே இருந்தது என்று ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து தேர்தல் நடத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 7ஆம்திகதி நடைபெறவுள்ள தேர்தலில் கர்சாயும் அப்துல்லாவும் போட்டி

யிடுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர் அடுத்த ஜனாதிபதியாவார்.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி ஹமீட் அல் கர்சாயியும் மற்றொரு முன்னணி வேட்பாளரான முன்னாள் வெளிநாட்டமைச்சர் அப்துல்லாவும் தாமே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தமையினால் பெரும் சிக்கல் தோன்றியது.  இவ்வாறான அறிவித்தல்களினால் இரு தரப்பினருடைய ஆதரவாளர்களிடையே வன்முறைகள் பெருகும் அபாயம் தோன்றியதுடன் பெரும் பிரச்சினைகளும் உருவாகியிருந்தன.

ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி, மாகாண சபை தேர்தல்களில் வன்முறைகள் நடைபெற்றதாகவும் மோசடிகள் இடம்பெற்றதாகவும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். அதே வேளை வாக்குப் பெட்டிகளைக் கைமாறும் விடயத்தில் அதிகாரங்கள் மாற்றப்படவேண்டும். அத்துடன் இதற்கேற்றாற்போல் அரசியலமைப்பில் மாற்றங்கள் தேவையென்றும் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

தலிபான்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் என்ற வகையில் இத் தேர்தல் தலிபானியர்களின் அச்சுறுத்தல் வன்முறைகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே இருந்த தலிபான்களின் சிக்கல்களுடன் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் போதும் பெரும் வன்முறைகள் எழ வாய்ப்புள்ளதாக அஞ்சப்பட்டது.

நடைபெற்ற தேர்தலில் வரப் போகும் வெற்றி யாரைத் திருப்திப்படுத்துமோ இல்லையோ மேற்குலகைத் திருப்திப்படுத்துவதாக இருந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கர்சாயியின் வெற்றியை ஏற்றுக் கொள்ள மேற்குலகம் மறுத்த அல்லது விரும்பாமையால் நவம்பரில் தேர்தல் நடைபெறுகிறது என்பதுதான் உண்மை.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று முடிந்த தேர்தல் தலிபான்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டு வருவதாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நடைபெற்ற வன்முறைகள் அதிகம் என்றே கணக்கிடப்பட்டுள்ளது. தலிபான்களின் மிரட்டல்களையும் தாண்டி இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையே தலிபான்களின் மூச்சாக இருந்து வருகிறது.

மேற்குலக ஆதரவுடன் பதவிக்கு வந்த ஜனாதிபதி ஹமீட் கர்சாய் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் அவர் தெரிவு செய்யப்படுவதனையே மேற்குலகம் விரும்புவதாகவும் பார்க்கப்பட்ட நிலையில் மீள் தேர்தலுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டமை சந்தேகங்கள் பலவற்றை தோற்றுவித்துள்ளது.

ஆப்கானில் பொருளாதாரத்தை மேம்படுத்தி தொழில்களை ஏற்படுத்துவதுடன் இளைஞர்களை மேம்படுத்துவதுமே முக் கியமான பணியாக உள்ளது. முன்னாள் வெளிநாட்டமைச்சர் அப்துல்லா இவ்வாறானதொரு நல்ல நிலைமையைத் தோற்றுவிப்பதாக வாக்குறுதியளித்துள்ளார்.

ஆப்கான் ஓர் இஸ்லாமிய நாடு என்ற வகையில் அங்குள்ள வெளிநாட்டுப் படைகளின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்குரியதாகவே இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் சண்டைகள், தாக்குதல்களால் பெண்கள், சிறுவர்கள் உயிரிழந்து வருகின்றமை நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் கேள்விக் குறியையே கொண்டிருக்கிறது. இந் நிலையில் மீண்டும் கர்சாய் பதவிக்கு வருவது விமர்சனங்களை அதிகமாக்கும்.

ஆப்கானின் தென்பகுதியிலுள்ள சில மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களை தலிபான்களே ஆட்சி செய்கின்றனர். ஆப்கான் நாட்டின் 365 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. நாட்டில் பொருளாதார அபிவிருத்தியைச் செய்கிற, அழிந்து போயிருக்கிறவற்றை மீளவும் கட்டி எழுப்புகிற, கல்வியில் மேம்பாட்டை ஏற்படுத்துகிற, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிற, சிறுவர்கள், பெண்களுக்குப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்ற உறுதியான ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென ஆப்கான் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

தலிபான்களின் பிரச்சினைகளே ஆப்கானில் பெரியது என்ற வகையில் அதற்கான தீர்வை முதலில் கொண்டு வருவதே அடுத்த ஜனாதிபதியின் கடமையாக இருக்கும் என்ற வகையில் புதியவர் ஒருவர் ஜனாதிபதியõக பதவிக்கு வருவதே சிறந்ததொரு தெரிவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ள அடுத்த ஜனாதிபதி செய்து முடிக்கவுள்ள பணிகள் ஆப்கானில் அமைதியைக் கொண்டு வருமா என்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளே தீர்மானிக்கும்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவது சம்பந்தமாக அமெரிக்கர்களிடையே பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏ.பி.சி. செய்திச் சேவை நடத்திய கருத்துக் கணிப்பீட்டில். இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 47 சதவீதமானோர் படைகள் அனுப்பப்படுவதை ஆதரிக்கின்ற அதேவேளை 49 சதவீத மானோர் எதிர்க்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் யுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்திடமுள்ள திட்டத்தில் பாரிய குறைபாடுகள் உள்ளன என்பதற்கு ஏற்றாற் போல் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், புஷ் நிருவாகம் ஆப்கான் விடயத்தை சரியாகக் கையாளவில்லை எனத் தெரிவித்ததன் மூலம் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக அமெரிக்கா தன் படைகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த இருக்கிறது.

ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான போர்களில், ஈராக்கில் பெருமளவுக்கு தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றே அமெரிக்கா சார்க் நாடுகள் நம்புகின்றன.

ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக படைகள் தேவைப்படுவதாக அங்குள்ள நேட்டோ தளபதிகள் அறிவித்துள்ள நிலையில், தாம் விட்ட குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்கா மேலதிக படைகளை அங்கு அனுப்புவதற்கு முயற்சித்து வருகிறது. ஆனாலும் ஜனாதிபதித் தேர்தலை ஒரு சாக்காகச் சொல்லி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் 2 இலட்சத்து 60 ஆயிரம் இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் 90 ஆயிரம் பேர் அமெரிக்க படையினராகும். இராணுவ பலத்தை 4 இலட்சமாக உயர்த்த அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒபாமா இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராணுவத்துக்கு உதவுவதற்காக மேலதிகமாக 17 ஆயிரம் படைகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது.

இப்போதுள்ள படைகளுக்குரிய ஆப்கானிஸ்தான் அரசுக்கான செலவு 5500 கோடியாகும். இதில் பெரும்பகுதியை அமெரிக்க அரசாங்கம் வழங்கி வருகிறது. படைகளை இரட்டிப்பாக்கினால், செலவும் இருமடங்காகும். பாதுகாப்புச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள அமெரிக்காவை உடனடியாக முடிவு எடுக்க விடாமல் செலவுகளே கட்டுப்படுத்துகின்றன. இதற்கிடையில் இங்கிலாந்து அரசும் தன்பங்குக்கு இராணுவ வீரர்கள் பலத்தை அதிகரிக்க இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்காக நடந்த தேர்தலில் ஏற்படும் மாற்றங்கள் அமெரிக்கச் சார்பு அரசாங்கத்தை மீண்டும் ஆப்கானிஸ்தானில் கொண்டு வந்து விடுமோ என்ற பயம் அரபு நாடுகள் மத்தியிலும் ஆப்கான் மக்கள் மத்தியிலும் இருந்தது.

தலிபான்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி அவர்களை அரசியலுக்குள் கொண்டுவர நினைக்கும் அமெரிக்க அதிபர் அங்கு உறுதியான அரசாங்கம் அமையும் வரை படைகளை மேலதிகமாக அனுப்புவதில்லை என முடிவு செய்திருக்கிறார்.

தலிபான்கள் பலமடைந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கைப்பற்ற முன்னர் தலிபான்களை ஒழித்துக் கட்ட மேலதிக படைகள் அனுப்பப்பட வேண்டுமெனவும் கருதப்படுகிறது. எது எவ்வாறானாலும் ஆப்கானிஸ்தானில் நவம்பர் 07ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்களிப்பு முடிவு வெளிவந்து, அடுத்த ஜனாதிபதி பதவியேற்கும் வரை அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் பிரச்சினைகள் இருக்கவே செய்யும்.

யுத்தத் திருப்புமுனைகளுடனான வரலாற்றைக் கொண்ட ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள், மிரட்டல்களையும் தாண்டி இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் ஏற்பட்ட குழப்பங்கள் மீள் வாக்களிப்பு நிலையை உருவாக்கியிருக்கிறது. எப்படியானாலும் இந்த வருட இறுதிக்குள் ஆப்கானிஸ்தானின் அடுத்த தலைவரது பெயர் கண்டு பிடிக்கப்பட்டு விடும் என்று நம்புவோம்.

தமக்கு ஆதரவான ஒரு அரசாங்கத்தையே விரும்பும் மேற்குலகுக்கு, நடக்கவுள்ள தேர்தலில் நல்ல முடிவு கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது. இருப்பினும் ஜனநாயகத்தை நிரூபிப்பதற்கு மீண்டும் தமக்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பை ஆப்கான் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்துவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

22.10.09