உலக ஒழுங்கைத் தீர்மானிக்கும் யூதர்களின் எதிரிகள் September 8, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
யூதர்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவே உலக நாடுகளின் நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது இஸ்லாமியர்களின் நிலைப்பாடாகும். அத்துடன் அதற்கெதிராக செயற்படுவதும் அவர்களது கொள்கையாக நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
அரசியல் மயப்பட்ட போராட்டங்களும் பேச்சுக்களும் இணக்கப்பாடுகளும் அந்த வகையிலேயே நடைபெற்றும் வருகின்றன.
இந்த வாரத்தில் மடஸ்காரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மொஸாம்பி யாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2010 ஆம் ஆண்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. (more…)
இழுபறியில் ஆப்கானிஸ்தான் தேர்தல் முடிவுகள் August 28, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கார்ஸாய் முன்னணியில் இருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது.
நடைபெற்ற தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் எண்ணப்பட்ட 524 444 வாக்குகளில் 212927 வாக்குகளை ஹமீட் கர்ஸாய் பெற்றுள்ளார். 202889 வாக்குகளை அப்துல்லா பெற்றுள்ளார். அடுத்த நிலை வேட்பாளர்களான ரம்ஸான் 53740 வாக்குகளையும் அஷ்ரப்கான் 15143 வாக்குகளையும் பெற்றுள் ளனர். இதன் பிரகாரம் கர்ஸாய் 40.06 வீதத்தையும் அப்துல்லா 38.06 வீதத்தையும் பெற்றுள்ளனர். பெரியளவான வித்தியசம் இல்லை என்பதால் இதில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (more…)
இரு கொரியாக்களின் உறவுக்கு மத்தியில் அமெரிக்கா. August 28, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான உயர்மட்ட மாநாட்டுக்கான அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அழைப்பை கடந்த வாரத்தில் நடந்த முக்கிய திருப்பமாக குறிப்பிட வேண்டும்.
தாம் தென்கொரியாவுடன் இணக்கப்பாடுகளுக்கான மாநாடொன்றை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக வடகொரிய ஜனாதிபதி கிம்ஜொங் தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தியை தென்கொரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றங்கள் தணிந்துவரும் நிலையில் தென்கொரிய ஜனாதிபதியின் ஒத்துழைப்புடனேயே இந்த மாநாடு தொடர்பான அறிவித்தல் வடகொரியாவால் விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. (more…)
எகிப்தின் முயற்சிகளுக்கு காஸா முட்டுக்கட்டையாகுமா? August 25, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
மேற்குக்கரையில் யூதக் குடியேற்றங்களை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கும் இஸ்ரேலுடன் நல்லுறவைப் பேணவேண்டுமென அரபு நாடுகளுக்கும் அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்ற நிலையில் கடந்த சனிக்கிழமை எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஐந்து வருடங்களின் பின்னர் அமெரிக்கா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினைகளில் முபாரக் பேச்சுக்களை நடத்தவும் அதற்கான தீர்வைப் பெற்றுத்தரவும் முயன்று வருகிறார்.
ஹமாஸ், பதாஹ் முரண்பாடுகளைக் களைவதிலும் எகிப்து பெரும் பங்களிப்பை செய்து வருகிறது. (more…)
ஆப்கான் தேர்தல் தலிபான்களின் பிரச்சினைக்குத் தீர்வைத்தரட்டும். August 24, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
யுத்தத் திருப்புமுனைகளுடனான வரலாற்றைக் கொண்ட ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள், மிரட்டல்களையும் தாண்டி இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் நேற்று காலை ஆரம்பமானது. டசின் கணக்கான பொது மக்கள் அமைதியான பிரதேசமான வடக்கில் வாக்களிப்பில் ஈடுபட்டனர். தலைநகர் காபுல் அமைதியாக இருந்தது.
ஆனாலும் படையினரின் பாதுகாப்புகளுக்கு மத்தியிலும் தலிபான்களின் அச்சுறுத்தல்களால் காலையில் வாக்களிப்புகள் மிகக் குறைந்த நிலையிலேயே இருந்தன. இந்நிலையில்ஆப்கான் தலைநகர் காபூலில் வாக்களிப்பு நலையம் ஒன்றின் மீது நேற்றுக் காலை தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலினால் அந்நிலையம் சுமார் இரண்டு மணிநேரம் மூடப்பட்டது. (more…)
தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் உலகப் பயங்கரவாதமும். August 23, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
தீவிரவாதிகள் அல்லது பயங்கர வாதிகள் என்று உலக நாடுகளால் அழைக்கப்படுகிறவர்களின் கொலைகளே இன்றை நாட்களில் பெரிய விடயமாகப் பேசப்படுகிறது. அதற்கு அவர்களுடைய போராட்டங்களின் வகைகளும் அதன் பாதிப் புகளுமே காரணமாகும்.
இந்நிலையில் பாகிஸ்தானின் வஸிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கா வான் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட தலிபான்களின் முக்கிய தளபதியான பைதுல்லா மசூத் உயிருடன் உள்ளார் என்று தலிபான்கள் அறிவித்திருக்கின்றனர். (more…)
ஆங் சாங் சூகி விடயத்தில் தடைகளைக் கண்டு மியன்மார் இறங்கி வருமா? August 22, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
மியன்மாரின் ஆங் சாங்சூகி மீதான விசாரணையின் முடிவில் அந்நாட்டின் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புக் கெதிராக உலகத் தலைவர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கின்றனர். அத்துடன் ஆங் சாங் சூகியை நிபந்தனையின்றி விடுதலை செய் யுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியன கடும் அழுத் தம் கொடுத்துள்ளன.
மியன்மாரின் இந்த நடவடிக்கைகளினால் அந்நாடு மீது புதிய பொருளாதாரத் தடைகள், அழுத்தங்களைக் கொண்டு வர ஐ. நா., ஐரோப்பிய யூனியன் என்பன ஆலோசித்து வருகின்றன. (more…)
வடகொரியாவின் அணுஆயுதமும் பொருளாதாரத் தடையும். August 21, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
உலகளவில் பலம் மிக்க நாடுகளுக்கு அணு ஆயுதச் செயற்பாடுகளிலேயே விருப்பம் அதிகமாக உள்ளது. ஆனால் அணு ஆயுதப் பலத்தை மேம்பட்ட நிலையில் கொண்டுள்ள அமெரிக்கா அதனை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் அடிப்படையிலேயே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் ஜனாதிபதியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஒப்பந்தம் ஒன்றில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் அமெரிக்காவுக்குப் பெரிய தலையிடியாக உள்ள வடகொரியா நேரடிப் பேச்சுகளை நடத்துவதற்குத் தயார் என அறிவித்திருக்கிறது. பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. (more…)
நைஜீரிய தலிபான்களின் தாக்குதல்களால் வடபகுதியில் குழப்பம். August 20, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.1 comment so far
நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதி நகரான பௌச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறைகளில் 300 பேர் வரை பலியானதாகவும் இதனைத் தொடர்ந்து அப்பிராந்தியம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அரசாங்கம் அறிவித்தது.
நைஜீரிய தலிபான்கள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சுமார் அறுபது பேர் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் சகிதம் வட பிராந்தியத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மோதல்கள் வெடித்தன. இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிப்பதற்காக ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன் பெருந்தொகையானோர் கைது செய்யப்பட்டனர். (more…)
மொரித்தானியாவில் இராணுவ ஆட்சியாளர் ஜனாதிபதியானார். July 26, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
மொரித்தானியா என அழைக்கப்படும் மவுரித்தேனியா (Mauritania) வில் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இராணுவ ஆட்சியாளர் அப்டெலஷிஸ் 52 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இராணுவ சதிப்புரட்சி மூலம் அப்துல் அஷிஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தார். 
ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிட்ட இத் தேர்தலில் 61 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அந் நாட்டின் தேர்தல் ஆணையகம் தெரிவித்திருந்தது. இந் நிலையில் இந்த முடிவு வெளியிடப்பட்டது. ஆனால் முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே தேர்தல் பெறுபேறுகள் போலியானவையெனத் தெரிவித்திருந்த எதிரணியினர் சர்வதேச விசாரணைக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். (more…)
மத்தியகிழக்கின் சமாதானத்தை தள்ளிப் போடும் ஜெருசலேம் July 25, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
இஸ்ரேல் தமது குடியேற்றங்களை நிறுத்த முடியாது என அறிவித்துள்ள நிலையில் மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் விசேடபிரதிநிதி பஹ்ரைன், பலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் சமாதானத் தூதுவர் ஜோர்ஜ் மைக்கல் இவ்வாரக் கடைசியில் மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க வெளிநாட்டமைச்சு தெரிவித்திருக்கிறது.
(more…)
ஜப்பானின் பாராளுமன்றத்தைக் கலைக்கிறார் பிரதமர் தரோ அசோ July 24, 2009
Posted by Athiran in கட்டுரைகள்.add a comment
பாராளுமன்றத்தைக் கலைத்து ஆகஸ்ட் 30 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தப்போவதாக ஜப்பானியப் பிரதமர் தரோ அசோ தெரிவித்ததைத் தொடர்ந்து ஜப்பானின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஏனைய எதிரணிக் கட்சிகளுடன் நம் பிக்கைல்லாப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளதாக தெரிகிறது.
ஜப்பானியப் பிரதமரது அமைச்சரவைக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமையானது ஜப்பானின் பாராளுமன்ற வரலாற்றில் ஒரு இக்கட்டான நிலையாகக் கருதப்பட்டாலும் 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் நான்காவதாகப் பதவி விலகும் பிரதமர் என்ற பெருமை தாரா அசோவுக்குக் கிடைக்கிறது.
(more…)

















