ஒபாமாவின் நலன் கருதிய உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு

சர்வதேச விவகாரமே அமெரிக்கர்களின் முக்கிய நோக்கம் என்ற அடிப்படையில் அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாரக் ஒபாமா, உப ஜனாதிபதி வேட்பாளராக செனட் சபை உறுப்பினர் ஜோ பிடெனை தெரிவு செய்திருக்கிறார். இது தொடர்பிலான அறிவித்தலை பராக் ஒபõமா அவர் இலினொயிஸிலுள்ள ஸ்பிறிங்பீல்ட்டில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் விடுத்தார்.

சர்வதேச விவகாரம் உள்ளடங்கலான விடயங்களில் பராக் ஒபாமாவின் அனுபவமற்ற நிலை தொடர்பில் கவலை கொண்டுள்ள வாக்காளர்களை திருப்திப்படுத்தவும் அவர்களைத் பக்கம் தக்க வைத்துக் கொள்ளவும் அரசியலில் பரந்த அனுபவம் கொண்ட ஜோபிடெனை ஒபாமா தெரிவு செய்திருக்கிறார்.

இதற்கிடையில் பாரக் ஒபõமா உப ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடெனை தெரிவு செய்தமையானது ஜனாதிபதி பதவிக்கு ஒபாமா தயார் நிலையில் இல்லை என்பதையே எடுத்துக் காட்டுவதாக குடியரசுக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜோன் மக்கெயினின் பேச்சாளர் பென் போர்ட்ரித் தெரிவித்திருக்கிறார்.

65 வயதான ஜோ பிடென், 6 தடவைகள் செனட் சபை உறுப்பினராக பணியாற்றியவர். வெளிநாட்டு விவகார தெரிவு சபையில் அதிகாரத்துவம் பொருந்திய பதவி வகித்த அவர் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பில் முக்கியத்துவமிக்க பங்களிப்பு செய்துள்ளார். பென்சில்வேனியாவை பிறப்பிடமாகக் கொண்ட அவர் 1972 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க செனட் சபையில் தெலாவார் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

ஜோ பிடென் அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தெரிவுக்கான போட்டியில் பாரக் ஒபாமாவிற்கு எதிராக போட்டியிட்டு தோல்வி கண்ட நிலையில் கடந்த ஜனவரிக்கு முன் போட்டியிலிருந்து வாபஸ் பெற்றிருந்தார்.

பராக் ஒபாமா உப ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடென் னைத் தெரிவு செய்ததையடுத்து அவர் உரையாற்றுகையில் ஒபாமாவுக்கு நாட்டை சிறந்த முறையில் கொண்டு நடத்துவதற்கு தேவையான தீர்க்கதரிசனமும் தைரியமும் உள்ளது எனத் தெரிவித்திருக்கிறார்.

உப ஜனாதிபதியாக ஜோ பிடென் னைத் தெரிவு செய்தமைக்கு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட் டுள்ளபோதும் அதனைப் பற்றிய எந்தவிதமான கவலையும் இன்றி பிரசார வேலைகளில் ஒபாமாவின் மனைவியும் ஈடுபட்டிருக்கிறார்.

இதற்கிடையில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பராக் ஒபமாவை உத்தியோகபூர்வமாக நியமிக்கும் வகையில் கட்சியின் 4 நாள் மாநாடு டென்வாரில் திங்கட்கிழமை ஆரம்பமாகி நேற்றுடன் நிறைவு பெற்றிருக்கிறது. இந்த மாநாட்டில் பராக் ஒபõமாவின் மனைவி மிசெல்லி ஒபõமா உரையாற்றுகையில் ஒபாமா ஒரு வழமைக்கு மாறான ஒரு ஜனாதிபதியாக விளங்குவார். அமெரிக்க மக்கள் தமது எதிர்கால சந்ததியினரின் நலன்களைக் கருத்திற் கொண்டு தீர்க்கதரிசனத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

இதன்போது ஒபாமா கலந்துகொள்ளாத போதும், செயற்கைக்கோள் வீடியோ காட்சி ஒளிபரப்பு மூலம் மிஸோரியிலிருந்து உரையாற்றியமை ஒளிபரப்பட்டது.

அத்துடன் மூளைப் புற்றுநோய்க்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவரும் செனட்சபை உறுப்பினரான எட்வார்ட் கென்னடி சபாநாயகர் நான்ஸி பெலோஸி ஆகியோரும் உரையாற்றினார்.

அத்துடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநாட்டில் ஹிலாரி கிளிண்டனும் முன்னாள் வேர்ஜினியா ஆளுநர் மார்க் வார்னரும் உரையாற்றினார்கள். புதன்கிழமை முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டனினதும், ஜனாதிபதி வேட்பாளராக தெரிவாகியுள்ள ஜோபெடனின் உரை நிகழ்த்தினர்.ஜனாதிபதி வேட்பாளராக உறுதிப்படுத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவரது வேட்பாளர் நியமனம் இடம்பெறும்.

இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் பெறும் முதலாவது ஆபிரிக்க அமெரிக்க பிரஜை எனப் பெருமை பெறவுள்ள பராக் ஒபாமா எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோன் மக்கெயினை எதிர்த்துப்போட்டியிடவுள்ளார்.

குடியரசுக்கட்சியின் வேட்பாளரான ஜோன் மக்கெயினை ஆதரித்து ஜனாதிபதி புஷ் பேசிவருகிறார். இருப்பினும் ஒபாமாவிற்கு அதிக ஆதரவு உள்ளது என்ற வகையில் உள்ள கருத்தக் கணிப்புகளின் படி அவரே ஜனாதிபதியாகத் தெரிவாகக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வருபவர் முன்னுள்ள முக்கியமான பிரச்சினைகளில் புஷ் ஆரம்பித்து வைத்த ஈராக் போர் முக்கியமானது. தினமும் அங்கு நடைபெற்று வருகின்ற படைகளின் உயிரிழப்பு சொத்துக்களின் அழிவு, உயிர்ப்பலிகள் உலகளவில் கடுமையான எதிர்பலையை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளது. இன்நிலையில் ஜனநாயகக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கும் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் மக்கெயினுக்குமிடையில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பயங்கரவாதத்தை பொறுத்தரை ஈராக் முக்கிய இடம் வகிக்கவில்லை. ஒரு போதும் வகிக்கவும் போவதில்லை என்பது ஒபாமாவின் முடிவாக இருந்தாலும் ஈராக்கில் நிலையான இராணுவ தளங்களை ஏற்படுத்துவது தொடர்பான தவறான வழிகாட்டலுக்கு அமெரிக்கப் படையினரையும் வளங்களையும் வீணடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.

ஆனாலும் உலகளவில் ஆதிக்கத்தைப் பலத்துடன் வைத்திருக்க நினைக்கும் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியும் அதன் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு அமைவாகவே செயற்படுவார் என்பதற்கு அடுத்த வருடத்தில் பதில்கள் கிடைக்கும். 1778ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த 300 வருட வரலாற்றைக் கொண்ட அமெரிக்கா உலகிலுள்ள அனைத்து நாடுகளையுமே கட்டி ஆளும் பலத்துடன் திகழ்கிறது. அமெரிக்காவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. என்பதை அனைத்து நாடுகளும் கவனமாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் தெரிந்தோ தெரியாமலோ இருந்துவருகிறது. ஆனால் அமெரிக்கா அனைத்து நாடுகளையும் பார்த்துக் கொண்டே இருக்கிறது.

கொள்கைக்கட்டமைப்புகளில் ஸ்திரமானதொரு நிலையில் இருக்கும் அமெரிக்கா யாருக்கும் விட்டுக் கொடுக்காத வெளிநாட்டுக் கொள்கைகள் உள்நாட்டுச்சட்டங்கள் என இறுக்கமான கட்டமைப்புடன் இருப்பதே அதன் தலைநிமிர் தன்மைக்குக் காரணமாகும்.

இவ் வருட இறுதியில் நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக்கட்சி வெற்றி பெறுமா ஜனநாயகக் கட்சி வெல்லுமா என்பதற்கான பதில் காத்திருப்பாகவே இருக்கும். அதன் பின்னர் இன்னும் ஒரு புஷ் வருவாரா அல்லது மாற்றமானவராக அவர் இருப்பாரா என்பதைப் பார்க்கலாம்.

நன்றி மெட்ரோ நியூஸ் 29.08.08

Posted on August 29, 2008, in கட்டுரைகள் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink. 1 Comment.

  1. அன்பின் அதிரன்,

    உங்கள் பிரமாண்டமான முயற்சியையிட்டு மனமாறப் பாராட்டுகின்றேன்,இன்று பணம் பணம் என்று பறந்து திரியும் காலகட்டத்தில் இப்பாரிய முயற்சி வரவேற்கத்தக்கது. உங்கள் முயற்சி தொடர எனது வாழ்த்துக்கள்.

    ச.தியாகராசா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: