பருவநிலை மாற்றம் என்றால் என்ன?

புவி வெப்பமாதல் என்பது நாம் வாழும் பூமியில் உயிர் வாழ்வதற்கான சாத்தியமான தேவைகளில் வெப்பம் முக்கியமானதாகும். இந்த வெப்பத்தை சரியான சமச்சீரான சாதகமான அளவில் வைத்திருப்பதில் பூமியைச்சுற்றியிருக்கின்ற காற்று வெளி மண்டலம் முக்கிய பங்காற்றுகிறது.

அதிலும் குறிப்பாக இந்த காற்று வெளி மண்டலத்தில் காணப்படும் பூமியின் காற்றுவெளி மண்டலத்தின் மேல் பகுதியில் கண்ணுக்குத் தெரியாத ஒரு வளைம் போர்வை போல சுற்றி நிற்கின்றன.

இதனால் பூமியின் வெப்பமானது இயற்கையாக இருக்கக் கூடியதைவிடவும் 30 செல்சியஸ் கூடுதலாக இருக்கிறது. மேலும் சூரியனின் பாதகமான எதிர் மறையான வெப்பக்கதிர்கள் பூ?மியை நேரடியாக தாக்காமல் தடுப்பதிலும் குறிப்பிட்ட சில வாயுக்கன் முக்கிய பங்காற்றுகின்றன.

இத்தகைய வாயுக்களை விஞ்ஞானிகள் கிறீன் கவுஸ் கசஸ் ( பச்சை வீட்டு வாயுக்கள்) என அழைக்கின்றனர். இவற்றை நாம் தமிழில் புவி வெப்ப வாயுக்கள் என்று அழைக்கலாம்.

பச்சை வீட்டு வாயுக்கள் என்பதில் சாராண நீராவி வாயுக்களிலிருந்து பல வாயுக்கள் இருக்கின்றன. அவையாவன கரியமிலவாயு, னைட்ரக் ஓக்ஸ்சையிட், மிதேன் ஆகிய மூன்று வாயுக்களும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் பெக்ரோ குளோரோ காபன், கைரோ புளோரா காபன், சல்பர் எக்சா புளோரட், ஆகிய மூன்று வாயுக்களும் பிரதானமானவை. அண்மைக்காலத்தில் இந்த புவி வெப்ப வாயுக்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றம் மிகப் பாரதூரமாக இருந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

காற்றுவெளிமண்டலத்தில் இந்த வாயுக்கனின் அதிகரிப்புக்குக் காரணம் 19ஆம் நூற்றாண்டில் தொடங்கிய தொழில் புரட்சியாகும். இந்த தொழில் புரட்சியின் முக்கிய உந்து சக்தியாக இருந்தவை நிலக்கரி, பெற்றோல் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய புதைபடிவ எரிபொருள்களாகும்.

இந்த புதை படிவ எரிபொருள்கள் எரிக்கப்படும் போது வெளியாகும் கரியமில வாயு தான் புவி வெப்பமடைவதன் முக்கிய குற்றவாளியாகக் காட்டப்படுகிறது. இத்துடன் பெருமளவில் காடுகளை அழிக்கும் போது வெளியாகும் மிதேன் வாயுக்களும் நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களை அதிகளவில் பயன்படுத்தும் போது வெளியாகும் நைட்ரைட் ஒக்சையிட் போன்ற வாயுக்களும் தொழிற்சாலைகள் வெளியிடும் மற்ற மூன்று வாயுக்களும் ஒன்றாகச் சேரும் போது சிறு துளி பெரு வெள்ளம் என்ற வகையில் பூமியின் காற்று வெளி மண்டலத்தில் புவி வெப்பமடைதலுக்கான வாயுக்களின் அளவு பல மடங்கு அதிகரிக்கின்றது.

இதன் விளைவாக புவியின் வெப்பமடைந்தல் பன் மடங்கு அதிகரித்து வருவதாக பல்வேறு விஞ்ஞானிகள் எச்சரித்தனர். உலக அளவில் தட்ப வெப்பம் கணிக்கத் தொடங்கிய 150 ஆண்டுகளில் கடந்த 15 அண்டுகளாக பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது.

பூமி தொடர்ந்து வெப்பமாகி வருவதற்குக் காரரணம் நாம் பயன்படுத்தும் எரிசக்தியே. இன்றைய நிலையில் ஒட்டு மொத்த எரிசக்தித் தேவை என்பது நிலக்கரி, பெற்றோல் மற்றும் எரிவாயுக்களின் மூதூம் நிவர்த்தி செய்யப்படுகிறது.

இந்த மூன்றின் பயன்பாடும் இல்லாத உலகத்தை நாம் நினைத்துப்பார்க்க முடியாது என்பது ஜதார்த்தமானாலும் அவற்றை இப்பொழுது பயன்படுத்துவது போல தொடர்ந்தும் பயன்படுத்தினால் உலகின் எதர்காலமே கேள்விக்குள்ளாகும் என்பதுதான் இன்றைய அச்சத்துக்குக் காரணமாகும். இது விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும் கூட.

காரணம் காற்றுவெளி மண்டலத்தில் கலக்கும் கார்பனின் அளவை உடனடியாகக் குறைக்காவிட்டால் பூமின் வெப்பம் தொடர்ந்து அதிகரிக்கும் அதனால் வறுத்தெடுக்கும் கோடையும, உறையும் பனியும், பெரு வெள்ளங்களும் சூறாவளிகளும் அவற்றின் அழிவுகளும் அதிகரிக்கும் என்பதுதான்.

இத்தகைய எதிர்மறையான பாதிப்புக்கள் முதலில் கடலில் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதாவது கடல் நீர் மட்டத்தின் உயரும் அதிகரிகக்கும் அதனால் சிறு தீவுகளும் கடற்கரையை ஒட்டிய நகரங்களும் நீரில் மூழ்கும் அல்லது காணாமல் போகும்.

புவி வெப்பமடைவது எப்படி கடல் மட்டத்தை அதிகப்படுத்தும் என்று பார்த்தால் அதற்கு இரண்டு காணங்கள் இருக்கின்றன. முதலாவது புவி வெப்பமடைவதால் பூமியின் வட தென்துருவங்களான ஆட்டிக், அந்தார்டிக் ஆகிய துருவங்களிலிருக்கும் பனி உருகி அதனால் கடல் நீரின் அளவு மட்டம் அதிகரிக்கும். இரண்டாவது வெப்பமடையும் போது தண்ணீர் விரிவடையும் தன்மை கொண்டது. பூமி வெப்பமடையும் போது கடல் நீரின் வெப்பமும் அதிகரிக்கும் அதனாலும் கடல் நீரின் மட்டம் அதிகரிக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும்.
அது மட்டுமல்லாமல் இப்படி கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் போது அவற்றில் ஏற்படும் புயல்களின் தீவிரமும் அதிகரித்து கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அழிவுகளை அதிகமாக ஏற்படுத்தும் என்பதுதான் இதிலிருக்கும் கூடுதல் கவலையான விசயமாகும். இதனால் பாதிக்கப்படும் நாடுகளாக தெற்காசியப் பகுதியில் இருக்கும் வங்காளதேசம், மாலைதீவு மற்றும் பசுபிக் தீவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இத்தகைய அழிவுகள் நடக்காமல் தடுக்க வேண்டுமானால் உலக நாடுகள் தாங்கள் வெளியிடும் புவி வெப்பமடைவதற்கான வாயுக்களின் அளவை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்பதுதான் ஐ.நா.. சபையின் பரிந்துரையாகும்.

அத்துடன் இதில் தனி மனிதனின் பங்களிப்பு முக்கியமானது என்பதையும் ஐ.நா. மன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. தனி மனிதர்கள் வெளியிடும் புவி வெப்பமடைவதற்கான வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் அறிவுறுத்தலாகும்.

அன்நாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவுகளை குறைத்து சிக்கனப்படுத்துவது, நீரை விரையமாக்காமல் பயன்படுத்துவது, விமானப் பயணங்களைக் குறைப்பது என்று தனி மனிதர்கள் செய்யக் கூடிய எளிய பங்களிப்புகள் ஏராளம் இருப்பதாகவும் விஞ்ஞானிகளும் சுட்டிக்காட்டுகிறார்கள். மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு ஒவ்வொருவருடய பங்களிப்பும் அவசியம் அந்த விசயத்தைத்தான் விஞ்ஞானிகள் உணர்த்த முற்படுகிறார்கள்.

09.12.2009

Posted on December 31, 2009, in கட்டுரைகள். Bookmark the permalink. Leave a comment.

Leave a comment